கையெழுத்து - விநோதரச மஞ்சரி

 










துணுக்குகள்

 

தன் கையெழுத்துக்கு கீழே ஒருவர் உருவாக்கும் குறியீடு அல்லது அடையாளத்திற்கு பாரப் (Paraph) என்று பெயர்.

அமெரிக்க  வரலாற்றிலேயே அரசியல் மற்றும் இலக்கியத்துறை சார்ந்த பிரபலங்களின் கையெழுத்துகளை போலியாக உருவாக்கி புகழ்பெற்றவர், ஜோசப் கோசெய் (Joseph Cosey). இவர், முன்னாள் அமெரிக்க அதிபர்  ஆபிரகாம் லிங்கன், கவிஞர் மார்க் ட்வைன் தொடங்கி அமெரிக்க நாட்டின் விடுதலை பிரகடனத்தை எழுதி வெளியிட்ட தாமஸ் ஜெஃபர்சன் வரை போலி கையெழுத்துகளை உருவாக்கினார். பின்னாளில், ஜோசப்பின் போலி கையெழுத்துகள், சேகரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்பட்ட வினோதமும் நடந்தது.

அமெரிக்காவின் சிகோகோவைச் சேர்ந்த நாவல் மற்றும் சிறுகதை எழுத்தாளர்  நெல்சன் ஆல்கிரென் (Nelson Algren), தனது புத்தக வாசகர்களுக்கு கையெழுத்து போடும்போது கூடவே பூனையின் படத்தையும் வரைவது வழக்கம்.

1948ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சிகாகோ நகரில் கையெழுத்துகளை சேகரிப்பதற்கான முதல் அமைப்பாக‘தேசிய கையெழுத்து சேகரிப்பாளர் சங்கம்’ (National Society of Autograph Collectors) தொடங்கப்பட்டது. இதில், உறுப்பினராக விரும்புபவர் தீவிரமான வரலாற்று ஆய்வாளராக இருக்கவேண்டும் என்பதுதான் அடிப்படை விதி. 1953ஆம் ஆண்டு, இந்த சங்கம் , ‘தி மானுஸ்க்ரிப்ட் சொசைட்டி’ என பெயர் மாற்றம் கண்டது.

1980களில் அமெரிக்க திரைப்பட நகைச்சுவை நடிகர் ஸ்டீவ் மார்ட்டின், தனது கையெழுத்து கேட்கும் ரசிகர்களுக்கென,  முன்னமே கையெழுத்திட்ட அச்சிட்ட அட்டைகளை வழங்கி வந்தார்.

படம் - பின்டிரெஸ்ட்

துணுக்குகள் ஆங்கில நூலொன்றில் இருந்து உருவியவை

 

உண்மையில் கலைமகள் குழுமம் நடத்தும் மஞ்சரிக்கு அனுப்பவேண்டிய துணுக்கு இவை. ஆனால், ராணி வார இதழில் துணுக்குகள் கேட்டார்கள் என அனுப்பினேன். குடும்ப பத்திரிக்கையில் பெரும்பகுதி சினிமா துணுக்குகள்தான் வருகின்றன. அதற்கடுத்து பிரண்டையை துவையல் செய்யலாமா, தொக்கு செய்யலாமா, கம்பு லட்டை கையில் படாமல் எப்படி உருட்டுவது என அறிவுப்பூர்வமான பல்வேறு டிப்ஸ்கள் இருந்தன. மிரட்டல் அடி பத்திரிக்கை.....

 

 

 

 

 


கருத்துகள்