கதவைத் தட்டும் வாழ்க்கை! - ஜே கிருஷ்ணமூர்த்தி

 

பின்டிரெஸ்ட்/பிகேன்ஸ்

நீங்கள் கதவு, ஜன்னல், ஆகியவற்றை மூடிவைத்துவிட்டு வீட்டுக்குள் வாழ்ந்தால் பாதுகாப்பாக, ஆபத்தின்றி இருக்கலாம் ஆனால் வாழ்க்கை என்பது அப்படியானதல்ல. வாழ்க்கை, மூடிய கதவுகள், ஜன்னல்கள் மீது முட்டி மோதிக்கொண்டிருக்கிறது. அப்படி முட்டி திறந்தால் நீங்கள் இப்போது பார்ப்பதை விட விரிவான காட்சியைக் காணலாம். ஆனால் உங்கள் மனதில் உள்ள பயத்தால் ஜன்னல்களை அடைத்து வைத்திருக்கிறீர்கள். இதனால் வாழ்க்கை உங்கள் கதவை தட்டும் சத்தம் அதிகமாக கேட்க தொடங்குகிறது. வாழ்க்கை பற்றிய வெளிப்புற பாதுகாப்பு பற்றி கவலைப்பட்டால், அது உங்களை நோக்கி வந்து வெளித் தள்ளுவதற்கு தொடங்கும்.

வாரணாசி

16 டிசம்பர் 1952

தி கலெக்டட் வொர்க்ஸ் வால். 7

 

உங்களை மாற்றுவது எது?  நெருக்கடி, தலையில் விழும் அடி, சோகம், கண்ணீர் இவை எல்லாமே ஒரு நெருக்கடிக்கு அடுத்த நெருக்கடி என தொடர்ந்து நடக்கும்போது ஏற்படுபவைதான்.  நீங்கள் வேதனையால் இடைவிடாமல் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் எதுவுமே மாறப்போவதில்லை. காரணம், நீங்கள் மாற்றத்திற்கு இன்னொருவரை நம்பியிருக்கிறீர்கள். யாருமே, பிரச்னையை நான் கண்டுபிடித்து தீர்க்கிறேன் என்று கூறமாட்டார்கள்.

மெட்ராஸ்

29 டிசம்பர் 1979

தி சீட் ஆஃப் எ மில்லியன் இயர்ஸ்

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன செய்திருக்கிறீர்கள்? உங்களிடம் அற்புதமான இந்த வாழ்க்கை கிடைத்திருக்கிறது. அதில், சோகம், மகிழ்ச்சி, பயம், குற்றவுணர்ச்சி, சித்திரவதை, தனிமை, விரக்தி, வாழ்வின் அழகு என அனைத்துமே இருக்கிறது.

இத்தனை இருந்தும் வாழ்க்கையை வைத்து நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இரவு உறங்கப்போகும்போது, சோகத்துடன் செல்கிறீர்கள். இதற்கு காரணம், நீங்கள் எதுவுமே செய்யவில்லை. முழுமையாக நீங்கள் எதுவுமே செய்யவில்லை.

 உலகில் மதிப்புமிக்க வாழ்க்கை உங்கள் கையில் அளிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் அதை உடைத்து நொறுக்கி, பிரித்து, வன்முறையை உள்ளே கொண்டு வந்து அழித்து வெறுப்பை உருவாக்கி அன்பே இல்லாத வாழும் வேட்கை இல்லாத ஒன்றாக மாற்றியிருக்கிறீர்கள்.  எனவே, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்டால் , கண்களில் கண்ணீர் மட்டுமே மிச்சமிருக்கிறது., கடந்த காலத்தை நினைத்தபடி கண்ணீர் சிந்துகிறீர்கள். நீங்கள் செய்தது, சுய பச்சாப்பத்துடன் கண்ணீர் சிந்துவது ஒன்றை மட்டுமே.

பாம்பே

14 டிசம்பர் 1969

 

மகிழ்ச்சி, உற்சாகம் என்பது அதனளவில் அப்படியே நின்றுவிடுவதில்லை. தைரியம், நம்பிக்கை ஆகியவற்றை தேடி அடையும்போது தன்னளவில் அவை நிறைவு பெற்றவையாக முடிந்துவிடுகின்றன. நெருக்கடியான நேரத்தில், வலியை உருவாக்கிக்கொள்ளும் நேரத்தில் இவற்றை நாம் கண்டுபிடிக்கிறோம். அனைத்துமே பயணங்களும் புறக்கணிப்பு, மாயமான காட்சி ஆகியவற்றால் கவனப் பிறழ்வுக்கு உள்ளாகின்றன.  பயணம் என்பது தீர்வு தேடுவதாக, முரண்பாடு, சோகத்தை தீர்ப்பதாக அல்லாமல் அதனளவில் தெய்வத்தன்மை கொண்டதாக ஊக்கமூட்டுவதாக அமைவது முக்கியம்.

ஓஜாய்

17 ஜூன் 1945

தி கலெக்டட் வொர்க்ஸ் வால்.4

நாம் ஒரே மனித இனமாக உள்ளோம். நாம் அனைவரும் பூமியைப் பகிர்ந்து வாழ்கிறோம். இதிலிருந்து உணவு, உடை, வீடு ஆகியவற்றை பெற்றிருக்கிறோம். எனவே, கல்வி என்பது சில தேர்வுகளை எதிர்கொள்வதாக அமையக்கூடாது. வாழ்க்கை பற்றிய பிரச்னைகளை எதிர்கொண்டு புரிந்துகொள்வதாக இருக்கவேண்டும். யார் கடவுள் என்பதை புரிந்துகொள்வது தேடுவது நமது பிரச்னை. அதுதான் வாழ்க்கைகான அடிப்படை. சரியான அடித்தளமின்றி வீடு நெடுங்காலம் நிற்க முடியாது. அதுபோலவே கடவுள் அல்லது உண்மையை நாம் கண்டறியாதபோது மனிதர்கள் உருவாக்கிய தந்திரமான கண்டுபிடிப்புகள் எதற்கும் அர்த்தம் இருக்காது.

திங்க் ஆன் திஸ் திங்க்ஸ்

தி ரியல் கிரிசிஸ்

ஜே கிருஷ்ணமூர்த்தி


கருத்துகள்