குளத்தில் இருந்து காணாமல் போன இளம்பெண்! - இருபது ஆண்டுகளாக தேடிவரும் காவல்துறை

 




மோலி பிஷ்



மசாசுசெட்ஸ் மாகாணத்திலுள்ள வாரன் பகுதியைச் சேர்ந்தவர் மோலி பிஷ். இவர், 2000ஆம் ஆண்டில்  சிறுவர்கள் குளிக்கும் குளம் ஒன்றில் லைஃப் கார்டாக வேலை செய்துகொண்டிருக்கும்போது காணாமல் போனார், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அணிந்திருந்த நீலநிற நீச்சலுடை மட்டுமே காவல்துறைக்கு கிடைத்தது. ஆனால் அவரது உடல் அல்லது வேறு பொருட்கள் என எதுவுமே கிடைக்கவில்லை.

மோலியின் குடும்பத்தினர், காணாமல் போன மகளின் பெயரில் தன்னார்வ நிறுவனத்தை தொடங்கி, குழந்தைகளை கண்காணிக்கவென சில பொருட்களை பெற்றோருக்கு வழங்கி வருகின்றனர். மகள் தொடர்பான வழக்கும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.

கமின்ஸ் என்ற குளத்தில் மோலியின் சகோதரர் ஜான் லைஃப் கார்டாக  வேலை செய்து வந்தார். எனவே, பள்ளியில் படித்து வந்த மோலிக்கு பதினாறு வயதில் தானும் லைஃப் கார்டாக வேலை செய்யவேண்டுமென ஆசை பிறந்தது. ஆனால் வேலைக்கு சேர்ந்த எட்டே நாட்களில் காணாமல் போய்விட்டார். அம்மா மேகிக்கு, மகள் ஆபத்தான இடத்தில் வேலை செய்கிறாளே என பயம் இருந்தும் மகள் உறுதியாக கூறியதால் மனதை சமாதானம் செய்துகொண்டார். ஆனால் அது நிலைக்காது என அவரும் கூட நினைத்திருக்க மாட்டார். 2000ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி, மோலி காலையில் வேலைக்கு வந்திருக்கவேண்டும். ஆனால் நீச்சல் கற்க சிறுவர் சிறுமிகள் பெற்றோருடன் வந்துவிட்டனர், மோலியின் பையும், ஷூக்களும் அவர் உட்காரும் இடத்தில் இருந்தன. ஆனால் அவரைக் காணவில்லை. தேடுதல் நிதானமாகவே தொடங்கியது.   

2021ஆம் ஆண்டு காவல்துறை ஃபிராங்க் சம்னர் சீனியர் என்ற வல்லுறவு, கடத்தல்காரரை சந்தேகப்பட்டது. விசாரித்தது. ஆனால், டிஎன்ஏ சோதனையில் எதிர்பார்த்த சாதகமான முடிவு கிடைக்கவில்லை. காணாமல் போன அன்று, மேகி, மகளை 9.55 க்கு குளத்தில் இறக்கிவிட்டு சென்றார். ஆனால், அவர் 10 மணியில் இருந்தே அங்கு வேலைக்கு வரவில்லை என காவல்துறை நண்பகல் 1 மணிக்கு போன் செய்து விசாரித்தது. பிறகுதான் மேகி பதறி குளத்தில், அருகிலுள்ள புதர் எனதேட முயன்றிருக்கிறார். சகோதரர் ஜான் குளத்தில் குதித்து தேடினார். மோலியின் அக்காவிற்கு அம்மா மேகி, அலறும் சத்தம் கேட்டுத்தான் தங்கைக்கு ஏதோ ஆகிவிட்டது என புரிந்திருக்கிறது.

 மோலி காணவில்லை என புகார் வந்த்தும், பெண் பிள்ளை நண்பர்களைப் பாரக்க சென்றிருப்பார் என காவல்துறை நிதானமாகத்தான் இருந்தது. ஆனால், மோலியை பற்றிய விவரங்களை சேகரிக்கும்போதுதான் அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருப்பாரோ என சந்தேகம் வந்தது. தேடுதல் சற்று விரிவாகவே நடத்தப்பட்டது. ஆனால் முடிவுதான் கிடைக்கவில்லை.

 கமின்ஸ் குளத்தில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில் விஸ்கி மலைப்பகுதி உள்ளது. இங்குதான் 2003ஆம் ஆண்டு மோலியின் நீச்சலுடை மீட்கப்பட்டது. இதைப்பற்றிய தகவலை அங்கு சென்று வந்த ஒருவர் தனது நண்பருக்கு கூற, அவர் காவல்துறைக்கு தகவல் சொன்னார். அதைத்தாண்டி வழக்கு நகரவில்லை.

 மேகி, சிறப்புக்குழந்தைகளுக்கான ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர், கணவர் ஜான், சிறை கைதிகளுக்கான புரோபேஷன் அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர். இவர்கள் இருவரும் தற்போது வழக்குரைஞர் டெட் கென்னடியுடன் இணைந்து மாகாணத்தில் காணாமல் போகும்  குழந்தைகளுக்கான எச்சரிக்கை செய்திகளை கொடுக்கும் திட்டத்தில் இணைந்திருக்கின்றனர்.  குழந்தைகளை கண்காணிப்பதற்கான  ஏழு லட்சம் உதவி கிட்களை வழங்கியிருக்கிறன்றனர். அனைத்துமே இலவசம்.

மோலியின் அக்கா, ஹீதர் வன்முறை கொலை வழக்குகளில் மரபணு ஆய்வு செய்யும் சட்டத்தை உருவாக்கு நடைமுறைபடுத்துவது தொடர்பாக உழைத்து வருகிறார். மோலியின் குளிர் கண்ணாடி, பர்ஸ், பாடல் சிடிகள் மட்டுமே அவர் உயிரோடு இருக்கிறார் என்ற சிறியளவு நம்பிக்கையை  அக்குடும்பத்தினருக்கு தந்துகொண்டிருக்கிறது.

கேசி பேக்கர்

பீப்புள் இதழ்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்