தெரிஞ்சுக்கோ - இசை, நாடகம்

 






தெரிஞ்சுக்கோ – இசை

பியானோ கீபோர்டில் 88 கீகள் உண்டு. இதில் 52 கீகள் வெள்ளை நிறமானவை. கறுப்பு நிறமான கீகளின் எண்ணிக்கை 32

2019ஆம் ஆண்டு தனியிசை பாடல்களின் விற்பனையில் வினைல் ரெக்கார்டுகளின் பங்களிப்பு 26 சதவீதம்.

தனியிசை பாடல் ஒரு கோடி என்ற  எண்ணிக்கையில் விற்றால் அதற்கு பிளாட்டினம் என்ற அந்தஸ்தை அமெரிக்காவில் வழங்குகிறார்கள்.

ஜெர்மனியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட புல்லாங்குழலின் வயது 43 ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.

இசைக்கலைஞர் வோல்ஃப்கேங் மொசார்ட் தனது முதல் சிம்பொனி இசைக்கோவையை இயற்றியபோது அவருக்கு வயது எட்டு. முதல் ஓபராவை இயற்றியபோது  அவருக்கு பனிரெண்டு வயதுதான் ஆகியிருந்தது.

2019ஆம் ஆண்டு, உலக இசைத்துறையின் மதிப்பு 20.2 பில்லியன் ஆகும்.

நொடிக்கு  4,186 மடங்கு வேகத்தில் வாசிக்கப்படும் பியானோ நோட் சி8 ஆகும்.

அடால்ஃப் சாக்ஸ், பதினான்கு வகையான சாக்ஸ்போன்களை உருவாக்கினார். அவர் 1846ஆம் ஆண்டு உருவாக்கி காப்புரிமைக்கு பதிந்தார். அதில் நான்கு மட்டும் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

 நாடகம்

பிரிட்டிஷ் நாட்டில் அரங்கேற்றப்படும் புகழ்பெற்ற நாடகத்தின் பெயர், தி பான்டம் ஆஃப் தி ஓபரா. இதில் 130 நாடக கலைகள் பங்கேற்கிறார்கள். 22 முறை காட்சி மாற்றம் நடைபெறுகிறது. கலைஞர்கள் 230 உடைகளை மாற்றி நடிக்கிறார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீபன் சன்டெய்ம் என்ற இசைக்கலைஞருக்கு எட்டு முறை டோனி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை இந்த விருதைப் பெற்றுள்ள  இசைக்கலைஞர்களில் இவரே அதிக முறை விருதுகளை வென்றிருக்கிறார்.

1660ஆம் ஆண்டு, ஓத்தெல்லோ நாடகத்தில் மார்க்கரேட் ஹியூகஸ் என்ற தொழில்முறை நடிகை நடித்தார். நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியர் இறந்து 44 ஆண்டுகளுக்கு பிறகு நடித்த முதல் தொழில்முறை நடிகை மார்க்கரேட்தான்.

சீனாவில் 368 சீன ஒபரா முறைகள் உள்ளன. அதில் 280 முறைகள் இன்றும் அங்கு நடைமுறையில் உள்ளன.

கி.மு.,493 இல் நாடக ஆசிரியர் ‘பிரைனிசஸ் தி கேப்சர் ஆஃப் மிலிடஸ்’  என்ற நாடகத்தை இயற்றினார். இந்த நாடகத்தைப் பார்த்த பார்வையாளர்கள் அழுத காரணத்தால், நாடக ஆசிரியரான பிரைனிசஸூக்கு 1000 டிராச்மஸ் தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. இத்தொகை, விவசாயி ஒருவரின் இரண்டாண்டு வருமானத்திற்கு நிகரானது.

பதினேழாம் நூற்றாண்டில் உருவான கதக்களியில் 101 செவ்வியல் கதைகள உள்ளன. நடனமாடிக்கொண்டே கதைகளை சொல்லுவது இந்த நடன முறையின் புதுமையான அம்சமாகும்.

அவர் வேர்ல்ட் இன் நம்பர்ஸ் 

பின்டிரெஸ்ட்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்