வாழ்க்கையின் அழகு - ஜே கிருஷ்ணமூர்த்தி

 








ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார்

விக்டர் காமெஸி

ஒருவர் அமரத்துவம் கொண்ட களங்கமற்ற புனிதம் என்ற ஒன்றை அடையாளம் கண்டார் என்றால் அவர் உலகிலுள்ள வேதனைகளை புரிந்துகொண்டார் என்று பொருள். வேதனை என்பது தனிப்பட்ட ஒருவரின் அதாவது உங்களுடையது மட்டுமல்ல. உலகம் முழுக்க உள்ள வேதனை பற்றியது. இது உணர்ச்சிகரமான, காதல் உணர்வு கொண்டதாக இல்லை. நம்முடன்தான் இருக்கிறது. வேதனையுடன் வாழ்வதில் உள்ள சிக்கல், அதிலிருந்து தப்பித்து ஓடாமல் இருப்பதுதான். நீங்கள் தப்பித்து ஓடாமல் இருந்தால், வேதனையை எதிர்கொள்ள அதிக ஆற்றல் தேவை. வேதனையைப் புரிந்துகொண்டால் நீங்கள் அதனால் பாதிக்கப்பட மாட்டீர்கள். இந்த முறையில் தியானம் செய்து அமரத்துவமும், புனிதமுமான தீர்வை அடையாளம் காண்பீர்கள்.

சானென்

3 ஆகஸ்ட் 1975

 

கடவுள், உண்மையை தேடுவது நிச்சயமாக முழுமையாக சிறந்ததுதான். நன்மைக்கான வேண்டுதல், அவமானம், கண்டுபிடிப்புகள், மனதின் பல்வேறு தந்திரங்களைக் கடந்து தேட வேண்டும். இதன் அர்த்தம் இவற்றைக் கடந்த பின்னும்  உள்ள தன்மைதான். அதுதான் உண்மையான மதம். நீங்கள் தோண்டியுள்ள நீச்சல் குளத்தை கைவிட்டு ஆற்றின் போக்கில் பயணித்து செல்லவேண்டும். வாழ்க்கை உங்களை அதன் போக்கில் அழைத்துச் செல்லும். அப்படி செல்லும் பயணத்தில் பாதுகாப்பு பற்றிய கவலை இருக்காது. பிறர்  சொல்லும் கருத்து, சொல்லாத கருத்துகள் என்பதெல்லாம் தேவையே இல்லை. அதுதான் வாழ்க்கையின் அழகு.

திங்க் ஆன் திஸ் திங்க்ஸ்

நமக்கு வழங்கப்படும் உண்மையான ரொட்டியை  பெற முயல்கிறோம். அந்த ரொட்டி, அழிந்துவிட்டால் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. நாம் பேரிடரை உருவாக்குகிறோம், கொலை நடைபெறுகிறது. பட்டினி உருவாகிறது.  இந்த வகையில் அமரத்துவத்தை தேடுவதற்கு பாதை ஏதுமில்லை.. அதற்கான வழி நிகழ்காலத்திலேயே உள்ளது.

தி வுட் வித் இன்

இங்கு ஒரே ஒரு நிஜம்தான் உள்ளது. அடுத்த நொடியில் என்று கூறும் இன்னொரு நிஜம் இல்லை. ஒரே ஒரு மனித இனம், சரியான செயல், வழி, மனிதர்கள்  என உள்ளது. வேறு மனிதர்களை உங்களால் காப்பாற்றிவிட முடியாது. நீங்கள் உங்களுக்குள் பெறும் கருத்துகளை அடிப்படையாக வைத்து உலகத்திற்கு அதன் குழப்பம், முரண்பாடு, சோகம், எதிர்மறைத்தன்மை ஆகியவற்றை விளக்கி வருகிறீர்கள்.

தி வேர்ல்ட் வித் இன்.

 

நீங்கள் உங்களுக்கென தனி ஒளியைக் கொண்டிருக்க வேண்டும். மனம் உருவாக்கும் விஷயங்களில் பெரிய நம்பிக்கை இல்லை. நாம் இதிலிருந்த்து தப்பிச்செல்லவில்லை. நாம் பாதுகாப்பான, மகிழ்ச்சி தரும் வழியைத் தேடிக்கொண்டிருக்கிறோம். மோசமான சூழ்நிலைகளைக் கடந்து சென்றால் ஒருவர் விழிப்புணர்வை அடையலாம். நிகழ்காலத்தில் உள்ள நெருக்கடிகளை அடையாளம் கண்டு மனித இனத்தின் பிரச்னைகளிலிருந்து வெளியே வந்தால், அமரத்துவத்தை நோக்கிச் செல்லமுடியும்.

மெட்ராஸ்

22 அக்டோபர் 1947

தி கலெக்டட் வொர்க்ஸ் வால் 4

நீங்கள் எது புனிதமானது என்று ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள். அதைக் கண்டறியாமல், அதிலிருந்து வெளியறாமல் நாம் புதிய கலாசாரத்தை உருவாக்க முடியாது. மனிதர்களின் புதிய தரமான இயல்பு கொண்ட மனிதர்கள் கிடைக்க மாட்டார்கள்.

ரிஷி வேலி

16 டிசம்பர் 1984


 ஆங்கில மூலம் - real crisis -j krishnamoorthy

காப்புரிமை - கிருஷ்ணமூர்த்தி பௌண்டேஷன் இந்தியா. 

படம் - பின்டிரெஸ்ட்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்