அகதிகளை சிறையில் அடைக்கும் இங்கிலாந்து அரசு!

 







ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த இங்கிலாந்து அரசு, தனது நாட்டுக்கு வந்து குடியேற விரும்பும் மக்களை போர்ட்லேண்டில் உள்ள பிபிஸ்டாக்ஹோம் எனும் மிதக்கும் சிறையில்(கப்பலில்) அடைத்து வருகிறது. ஏற்கெனவே தங்கள் நாடுகளில் இருந்து உயிர்பிழைக்க சிறு படகுகளில் தப்பித்து வருபவர்களை இப்படி கடல் நடுவில் கட்டுமானத்தை உருவாக்கி தங்கச் செய்யலாமா, இது அவர்களது உடல், மனநிலையை பாதிக்கும் என மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால், ஒப்பீட்டளவில் அகதிகளை வெறுக்கும் வலதுசாரித்துவத்திற்கு அதிக ஆதரவு கிடைத்துவருகிறது.

மகத்தான இந்திய வம்சாவளி பெருமை கொண்ட பிரதமர் ரிஷி சுனக், அகதிகள்  இங்கிலாந்து நாட்டிற்கு வருவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அதில் ஒன்றுதான், இப்படி வரும் மக்களை குடும்பமாக 500 படுக்கைகள் கொண்ட மிதக்கும் சிறையில் அடைத்து வைப்பது. அடுத்து, அகதிகளுக்கு வேலை கொடுக்கும், தங்க இடம் கொடுக்கும் உள்நாட்டு மக்கள் மீது அதிகளவு அபராதம் விதிப்பது ஆகிய அரிய செயல்களை முன்னெடுத்து தனது முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறார்.

 கடந்த ஆண்டு அகதிகளை ஹோட்டலில் தங்க வைத்த வகையில் அரசுக்கு, 2.4 பில்லியன் டாலர் செலவாகியுள்ளது. எனவே, பிரதமர் கப்பலை அகதிகளை தங்க வைக்கவென வடிவமைத்து போர்ட்லேண்டில் நிறுத்திவிட்டார். இதற்கு எதிராக மனித உரிமைகள்  அமைப்பு, அகதிகள் ஆதரவு அமைப்பு சட்டத்தின் உதவியை நாடி வருகின்றன. இந்த வகையில், கப்பல் சிறைக்கு செல்லவிருந்த இருபது பேர்களை காப்பாற்றியுள்ளனர்.  தற்போது அகதிகளாக இங்கிலாந்தின்  சிறைகளில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக உள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் 15,071பேர் அகதிகளாக வந்துள்ளனர். இங்கிலாந்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அகதிகளை யாரேனும் தங்க வைத்தால் அவர்களுக்கு 5000 பவுண்டுகளும், வேலை கொடுத்தால் 45000 பவுண்டுகளும் அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. இங்கிலாந்து அரசு பதிவு செய்த மக்கள் மட்டுமே தண்டனைகளிலிருந்து தப்ப வாய்ப்புள்ளது. பிறருக்கு அபராதம் விதிக்கப்பட்டு கப்பல் சிறை அல்லது ராணுவ முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

ராஜீவ் சியால்

கார்டியன் வீக்லி

பின்டிரெஸ்ட்

கருத்துகள்