இடுகைகள்

அல்லு அர்ஜூன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நெருப்பு பொறி பறக்கும் செஞ்சந்தனக்கட்டை கடத்தல் மோதல்! - புஷ்பா - தி ரைஸ் - தெலுங்கு

படம்
  புஷ்பா  சுகுமார் தெலுங்கு ஆந்திரத்தின் காட்டுப்பகுதியில் உள்ள செஞ்சந்தனக்கட்டைகளை கடத்தும் குழுவில் இணையும் புஷ்பராஜ் எப்படி அந்த வியாபாரத்திற்கே தலைவனாகிறான் என்பதே கதை.  படத்தின் இயக்குநர் சுகுமார் தனது பேட்டியில் தெளிவாக சொல்லிவிட்டார். இது பான் இந்தியா படம் கிடையாது. முழுக்க தெலுங்கு படமாகத்தான் எடுத்திருக்கிறேன் என்று. எனவே உலக சினிமா அளவுக்கு குறியீடுகளை ஆராயும் அவசியம் ஏதுமில்லை. ஜாலியாக கொண்டாட்டமாக பார்க்க வேண்டிய படம் இது.  புஷ்பராஜ் தொடக்கத்தில் இருந்தே அப்பாவின் பெயர் தெரியாமல் ஏராளமான அவமானங்களை சந்தித்து வளர்கிறான். அவனைக் கோபப்படுத்த எரிச்சல் படுத்த அவன் அப்பாவின் பெயரைக் கேட்பது ஒன்று போதும். அதாவது இன்டி பேரு.... முல்லெட்டி வெங்கட்ரமணா என்பதை அவன் எங்கும் சொல்லமுடியாதபடி சட்டரீதியான அவனது அண்ணன்கள் தடுக்க, அவனுக்குள் இழந்த அத்தனையும் வட்டியோடு பெறும் ஆசை, வெறி பிறக்கிறது. அப்புறம் என்ன அத்தனை சம்பவங்களும் வேட்டைதான்.  அல்லு அர்ஜூன் தான் படத்தினை முழுக்க தோளில் தாங்குகிறார். இடது தோளை உயர்த்தியபடி படம் முழுக்க மனதில் திட்டங்களோடு அனைத்தையும் செய்கிறார். படத்தில் தனக்க

சந்நியாசினியை துரத்தி காதலிக்கும் டிவி கேமராமேன் - தேசமுத்ரு

படம்
தேச முத்ரு - தெலுங்கு  2008 இயக்கம் பூரி ஜெகன்னாத் ஒளிப்பதிவு   சியாம் கே நாயுடு இசை சக்ரி கதை? அது கிடக்கிறது. கழுதை. மா டிவி கேமராமேன் அல்லு அர்ஜூன். ஊர் முழுக்க செய்தி சேகரிக்க சென்று அடிதடி. வம்பு தும்பு அவரைக் காப்பாற்ற டிவியில் வேலை செய்யும் அவரது அப்பா, கம்பெனி இயக்குநர் அவரை குலுமணாலி அனுப்புகிறார்கள். அங்கு ஆசிரமத்தில் உள்ள வைசாலி என்ற பெண்ணை பார்த்து காதல் வசப்படுகிறார். இதற்கிடையில் உள்ளூரில் செய்த அடிதடியில் கோமாவுக்கு போன ரவுடிகள் டீம், அல்லு அர்ஜூனை வேட்டையாடத் துடிக்கிறது. குலுமணாலியிலும் கராத்தே டீம் வைசாலியை வல்லுறவு செய்ய முயல்கிறது. இத்தனை கச்சடா பயல்களையும் சமாளித்து தன் நண்பர்கள் உதவியுடன் எப்படி பாட்டு பாடி சண்டை போட்டு ஆஸ்தியுள்ள அம்மணி வைசாலியை கரம் பிடிக்கிறார் அல்லு என்பதுதான் கதை. கரம் மசாலா. படத்தில் பாதி நேரம் அல்லு அர்ஜூனின் சிக்ஸ்பேக் உடம்பையே காட்டுகிறார்கள். அதையும் தாண்டி நம்மாள் நடிக்க முயன்றிருக்கிறார். நாயகி ஹன்சிகாவுக்கு பாடல்களுக்கு மட்டும் வந்து போகும் வேலை. சிறப்பாக செய்திருக்கிறார். மற்றபடி காமெடிக்கு அலி சிறப்பு. மற்றபடி அ

குழந்தைகள் இடம் மாறினால் வாழ்க்கை என்னவாகும்? - ஆல வைகுந்தபுரம்லோ

படம்
ஆல வைகுந்தபுரம்லோ இயக்கம் திரிவிக்ரம் ஒளிப்பதிவு - பி.எஸ் வினோத் இசை - எஸ்எஸ் தமன் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான வன்மம் இருக்கும். அவர்கள் அதனை சந்தர்ப்பங்களைப் பொறுத்து வெளிப்படுத்துவார்கள். இப்படத்தில் வால்மீகி என்ற கணக்காளர் தன் வன்மத்தை சரியாகப் பயன்படுத்துகிறார். இதனால் அவரது குழந்தை வசதியாகவும், முதலாளி வீட்டுக்குழந்தை இவரது வீட்டில் பல்வேறு வசைகளை கேட்டும் வளருகிறது. இதனால் இவர்களது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. ஆஹா சுவாரசியமான கதை. அல்லு அர்ஜூன் பின்னி எடுத்துவிட்டார். பெரும்பாலும் நாயகிகள் பாடலுக்கானவர்கள்தான். வால்மீகியாக நடித்துள்ள முரளி சர்மா அசத்தல். வைகுந்த புர நடிகர்களில் தாத்தாவாக வரும் ஏஆர்கே - சச்சின் கேடேட்கர் பிரமாதமாக நடித்திருக்கிறார். இவருக்கு மகிழ்ச்சி, பெருமை, சோகம் என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்த வாய்ப்பு உள்ளது. பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஜெயராம் தன் பார்வையில் தன் மகன் தன்னைப் போல வேகமாக இல்லையே நடித்துவிடுகிறார். தன் மகனை விட்டுக்கொடுக்காத தன்மையில் தபு பின்னுகிறார். வால்மீகியும், ஜெயராமும் கிள