சந்நியாசினியை துரத்தி காதலிக்கும் டிவி கேமராமேன் - தேசமுத்ரு
தேச முத்ரு - தெலுங்கு 2008
இயக்கம் பூரி ஜெகன்னாத்
ஒளிப்பதிவு சியாம் கே நாயுடு
இசை சக்ரி
கதை? அது கிடக்கிறது. கழுதை. மா டிவி கேமராமேன் அல்லு அர்ஜூன். ஊர் முழுக்க செய்தி சேகரிக்க சென்று அடிதடி. வம்பு தும்பு அவரைக் காப்பாற்ற டிவியில் வேலை செய்யும் அவரது அப்பா, கம்பெனி இயக்குநர் அவரை குலுமணாலி அனுப்புகிறார்கள். அங்கு ஆசிரமத்தில் உள்ள வைசாலி என்ற பெண்ணை பார்த்து காதல் வசப்படுகிறார். இதற்கிடையில் உள்ளூரில் செய்த அடிதடியில் கோமாவுக்கு போன ரவுடிகள் டீம், அல்லு அர்ஜூனை வேட்டையாடத் துடிக்கிறது. குலுமணாலியிலும் கராத்தே டீம் வைசாலியை வல்லுறவு செய்ய முயல்கிறது. இத்தனை கச்சடா பயல்களையும் சமாளித்து தன் நண்பர்கள் உதவியுடன் எப்படி பாட்டு பாடி சண்டை போட்டு ஆஸ்தியுள்ள அம்மணி வைசாலியை கரம் பிடிக்கிறார் அல்லு என்பதுதான் கதை.
கரம் மசாலா. படத்தில் பாதி நேரம் அல்லு அர்ஜூனின் சிக்ஸ்பேக் உடம்பையே காட்டுகிறார்கள். அதையும் தாண்டி நம்மாள் நடிக்க முயன்றிருக்கிறார். நாயகி ஹன்சிகாவுக்கு பாடல்களுக்கு மட்டும் வந்து போகும் வேலை. சிறப்பாக செய்திருக்கிறார். மற்றபடி காமெடிக்கு அலி சிறப்பு. மற்றபடி அடிதடியில் ரத்தம் அல்லு அர்ஜூனின் உடலில் வழிகிறதா அல்லது வில்லன்கள் குத்திய குத்தில் நம் மூக்குச் சில்லே உடைந்து போனதா என்று சந்தேகமாகிறது. அம்புட்டு சண்டை போடுகிறார்கள். ஆத்தாடி...
அல்லு அர்ஜூனின் ஆரம்பகால படங்கள் என்பதால் தேசமுத்ருவைப் பற்றிச் சொல்ல ஏதுமில்லை.
இதில் அல்லு அர்ஜூன் இருக்கிறார் அவ்வளவுதான்.
கோமாளிமேடை டீம்