பட்ஜெட்டை தீர்மானிக்கும் நிதி அமைச்சக குழு! - ஐவர் குழு இவர்கள்தான்




Related image
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்



பட்ஜெட் 2020 - தீர்மானிப்பவர்கள் இவர்கள்தான்.

எதிர்வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலாகவிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை இரண்டாம் முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கையை உருவாக்குவதில் முக்கியமான பங்களிப்பை அளிக்கும் அதிகாரிகள் சிலரைப் பார்ப்போம்.

ராஜீவ்குமார், 
நிதித்துறை செயலர் 

நிதியமைச்சகத்தின் முக்கியமான அதிகாரி. பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்கும் சர்ச்சைக்குரிய சீர்த்திருத்தங்களை உருவாக்கி முன்மொழிந்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. வாராக்கடன் பாதிப்பைக் குறைத்து வங்கிகள் தொழில்துறைக்கு கடன்களை வழங்குவதற்கான முயற்சிகளுக்கான பரிந்துரைகளை இவர் நிதி அமைச்சருக்கு வழங்குகிறார். வங்கித்துறையின் பின்னணியில் இருந்து கடன்களை வழங்க வைத்து மக்களின் நுகர்வு மூலம் பொருளாதாரத்தை மீட்கும் முக்கிய முயற்சியை இவர் செய்து வருகிறார்.

அதானு சக்ரபொர்த்தி, 
பொருளாதார விவகாரங்கள் துறை செயலர்.

பொதுத்துறை பங்குகளை விற்கும் திறனில் அதானு வல்லுநர். மத்திய அரசு 1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை இந்தியா பெறுவதற்கான முயற்சிகளுக்கு இவரை நியமித்துள்ளது. நிதிநிலை அறிக்கையில் பற்றாக்குறையாக உள்ள இலக்கையும் எட்டுவதற்கான பல்வேறு பரிந்துரைகளை அதானு அளித்து வருகிறார்.

டி.வி.சோமநாதன், 
வரவுசெலவுத்துறை செயலர்

நிதித்துறை அமைச்சகத்திற்கு இவர் புதிய வரவு. இவரது பணி, அரசு செலவு செய்யும் பல்வேறு திட்டங்களில் எப்படி அவற்றைக் குறைத்து நிதியை மிச்சம் பிடிப்பது என்பதுதான். முன்னரே, பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். 

அஜய் பூஷன் பாண்டே, 
வருவாய்த்துறை செயலர்

பொருளாதார மந்தநிலையிலும் மத்திய அரசின் வருவாயை அதிகரிக்க அஜய் பூஷன் நியமிக்கப்பட்டுள்ளார். 2 ஆயிரம் கோடி அளவுக்கு கார்ப்பரேட் வரிகளை குறைப்பதற்கான அறிவிப்பில் இவரது பங்கு முக்கியமானது. நேரடி வரி விதிப்பில் பல்வேறு விதிவிலக்குகளை இவர் பரிந்துரைத்துள்ளார்.

துகின் கண்டா பாண்டே , 
பொதுத்துறை செயலர்

பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் முதலீடுகளை குறைத்து அவற்றை விற்பதற்கான முயற்சிகளை துகின் செய்து வருகிறார்.


நன்றி- லிவ் மின்ட்

வெளியீடு - தினமலர் பட்டம்