சிறந்த காலண்டர் ஆப்ஸ்கள் உங்களுக்காக....





work out eating GIF by Robert E Blackmon
giphy


வாழ்க்கையை திட்டமிட ராணிமுத்து காலண்டர்களை ஒருகாலத்தில் நம்பியிருந்தோம். ஆனால் இன்று டெக்னிக்காக நாம் நிறைய மாறி உள்ளோம். பல விஷயங்களை டிஜிட்டலாக மாற்றி விட்டோம். அல்லது நிறுவனங்கள் மாற்றி விட்டார்கள். எனவே நாமும் மாறுவது எதிர்காலத்திற்கு நல்லது. 

Fantastical 2

ஆப்பிளில் காலண்டர் ஆப் உள்ளது. ஆனால் கம்பெனியோடு வருவது எப்போது சிறப்பாக இயங்காது. டிசைன் அப்படித்தான். எனவே 49 டாலர்களை கொடுத்து இந்த ஆப்பை வாங்குங்கள். இதனை குரல் மூலமும் இயக்க முடியும். ஐக்ளவுட், கூகுள் ட்ரைவ் ஆகியவற்றிலும் இதனை இணைத்துக்கொள்ள ஆதரவு வழங்குகிறார்கள். இரண்டு எழுத்துகளை எழுதினால் முழுவார்த்தையும் கண்டுபிடித்து நிரப்பிக்கொள்வதால், டக்கென திட்டமிட்டு பட் டென காரியத்தைப் பார்க்கலாம். 

ஆப்பிளுக்கு மட்டுமான ஆப் இது. 

 Business Calendar 2

சிங்கம் 1,2,3 போல பெயர் தெரிந்தாலும் வேலை செய்வதற்கு ஏற்ற ஆப் இது. ஆண்ட்ராய்டில் சிறப்பாக இயங்குகிறது. இலவச பதிப்பில் விளம்பரத் தொல்லைகள் உண்டு. ஆனாலும் கூகுள் காலண்டர் லெவலுக்கு நிறைய வசதிகளைத் தருகிறார். காசு கொடுத்து வாங்கும் முன்பு இலவச பதிப்பை பயன்படுத்தி பார்ப்பது நல்லது. ஆபீஸ் மட்டுமல்ல சொந்த சமாச்சாரங்களையும் எழுதி வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். 


Timepage

இத்தாலியைச் சேர்ந்த லேப்டாப் நிறுவனமான மோல்ஸ்கின்னின் படைப்பு. தொட்ட அனைத்தும் காசுதான். ஐபோனுக்கானது. இருக்கும் காலண்டர் ஆப்களிலேயே அழகானது இது. கிங்ஃபிஷர் கம்பெனி கவிழ்ந்தாலும் அதன் கிளாமர் காலண்டர் வருடந்தோறும் வருகிறது. அதுபோலவே, காசு கொடுத்தாலும் காலண்டர் பார்க்க அவ்வளவு அழகு. 


Woven

இலவசமாக கொடுத்தாலும் ஆண்ட்ராய்டில் இயங்காது. ஐபோனுக்கானது. ஏராளமான டெம்ப்ளேட்டுகள் இருப்பதால் அதனை பயன்படுத்தி நமது நாளை, வாழ்க்கையை திட்டமிட்டு ஜெயிக்கலாம். 


My Study Life


இந்த ஆப் மாணவர்கள் மற்றும் அவர்களின் ஆசிரியர்களுக்குமானது. எந்த மாதத்தில் எத்தனை நாள் லீவு எனத் தேடும் முருகேசன்கள் தள்ளி நிற்கலாம். இதில் தேர்வுகள் சார்ந்த விஷயங்கள் , திட்டமிடல்களை போட்டு வைத்துக்கொள்ளலாம். ரிமைண்டர் வசதியை முன்னதாக வைத்துக்கொள்ள முடியாது. அதை கம்பெனி சீக்கிரம், கவனத்தில் எடுத்து தீர்க்கும் என நம்புவோம். இலவசம்தான். தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் டார்லிங்குகளே. 


 

 Any.do

இந்த ஆப்பை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பயன்படுத்துபவர்கள் சொல்லலாம். அடுத்த தலைமுறை சாதனங்களாக அலெக்ஸ, ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் என பல்வேறு சாதனங்களிலும் இணைத்துக்கொள்ள முடியும். இலவசம்தான், யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். முழுக்க வேலை செய்பவர்களுக்கான ஆப். எனவே சினிமா போவதற்கான விஷயங்களை இதில் குறித்து வைக்காதீர்கள். லட்சியங்களை மட்டும் குறித்து வையுங்கள். 

நன்றி - கிரியேட்டிவ் பிளாக் 




பிரபலமான இடுகைகள்