உளவியல் ஆப்களால் நன்மை உண்டா?






mental health scream GIF
giphy


மிஸ்டர் ரோனி

ஸ்மார்ட் போன்கள் ஆப்கள் நம் உளவியலை மேம்படுத்துமா?

கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் ஆகியவை தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஆப்ஸ்களை வெளியிடுகின்றன. பொதுவாக ஆப்களை நீங்கள் பயன்படுத்தும்போது, அதன் விளைவாக தனிமைப்படுதல், தூக்க குறைவு, உடல் சோர்வு ஆகியவை ஏற்படும். ஆனால் உளவியல் ரீதியான அறிகுறிகளை கண்டறிந்து அதற்கான மருத்துவரை தொடர்புகொள்ள உதவும் ஆப்கள் இன்று சந்தையில் உள்ளன.

இவை எல்லாமே மருத்துவமனை சென்று ஏராளமான சோதனைகளை செய்வதற்கு முன்னாடியே உங்களை சோதித்து உங்களது பிரச்னைகளை உங்களுக்கு சொல்பவை என்பதை மறந்துவிடாதீர்கள். அதைத்தாண்டி இதில் பெரிய சிறப்புகள் இல்லை.

இங்கிலாந்திலுள்ள என்ஹெச்எஸ் அமைப்பு 2014இல் செய்த ஆய்வுப்படி, அங்கு வாழும் மக்கள் வாரத்தில் ஆறில் ஒருவருக்கு மன அழுத்த பிரச்னைகள் ஏற்படுவதாக கூறியுள்ளனர். அமெரிக்காவின் மசாசூசெட்சிலுள்ள போஸ்டன் நகரில் பெத் இஸ்ரேல் மருத்துவ மையம் உள்ளது. இதில் பணிபுரியும் ஜான் டோரஸ் ஆப்ஸ்களை ஆதரிக்கிறார்.

இலவசமாக உங்களுக்கு ஆப் ஸ்டோரில் கிடைக்கும் ஆப்களில் மிகச்சிலவே உங்களது தகவல்களை தம் ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்கின்றன. அடிப்படையான பொதுவான உளவியல் சிகிச்சைக்கு ஆப்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவை எளிதில் நோயாளிகளின் பிரச்னைகளை அடையாளம் காண உதவுகிறது. பிற ஆப்களைப் போலவே இதிலும் நீங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொண்டால் போதும். உளவியல் ஆப்களை நீங்கள் தைரியமாக பயன்படுத்தலாம். என்கிறார். 


நன்றி - பிபிசி