இரண்டு அடி முன்னே ஒரு அடி பின்னாக - பியி பண்டேலா
நேர்காணல்
பியி பண்டேலா
திரைப்பட இயக்குநர், எழுத்தாளர்
நைஜீரியாவில் எப்படி இத்தனை எழுத்தாளர்கள், இயக்குநர்கள் உருவாகி வருகிறார்கள்?
நாற்பது ஆண்டுகளாக நாங்கள் இங்கு கலையை பாதுகாக்க போராடி வருகிறோம். நோலிவுட் 1980ஆம் ஆண்டில்தான் உருவானது. மாநில அரசின் டிவி கூட தடைசெய்யப்பட்டுவிட்ட சூழ்நிலை. இதனால் கலையை நாங்கள் உலகிற்கு சொல்லும் அவசிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இசைக்கலைஞர்கள் ஆப்பிரிக்க இசை மற்றும் ரகே, ஹிப்ஹாப் ஆகியவற்றுடன் வெளியே முகம் காட்டினார்கள். எழுத்தாளர்கள் தங்களின் சிறந்த படைப்புடன் வெளியே வந்தனர்.
அப்படி இலக்கியம் எழுதினால் கூட வறுமை ஆபாச படம் போல எழுதி பரிசு வாங்குகிறீர்கள் என்று குற்றச்சாட்டு உள்ளதே?
மேற்சொன்ன விஷயத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் எழுதுவதை நாங்களே வெளியிடுவதில்லை. எடிட்டர் அதனை திருத்தி செப்பனிட்டு தனக்கு தேவையானவற்றை கண்டுபிடித்து அதை மாற்றி வெளியிடுகிறார். இதற்கு நாங்கள் ஒப்புக்கொள்வதால்தான் இலக்கியப் பரிசுகளை எங்கள் நாட்டினர் பெறுகின்றனர். சிமண்டா அடிச்சி என்ற சிறுகதை எழுத்தாளர் இருந்தார். அவர் ஆப்பிரிக்க வாழ்வை எழுதவில்லை. விபச்சாரம் சார்ந்த எய்ட்ஸ் சார்ந்தும் எழுதவில்லை. இவரை நாங்கள் பரிசுக்கு உந்தி தள்ளி தோல்வி அடைந்தோம்.ஆனால் அவரது படைப்பு அதுவாகவே தேர்வில் வென்றபோது, சிமண்டா பெரும் படைப்பாளியாக கவனம் பெற்று சாதித்தார். எங்களால் நம்பமுடியாத பிரமிப்பு அது.
நைஜீரியா எதிர்காலத்தை எப்படி பார்க்கிறீர்கள்.
இந்த நாடு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றாலும் ஜனநாயகம் என்ற ஒன்றை இதுவரை அனுபவிக்கவில்லை. ஒருவரையொருவர் தின்று வாழும் நாடாகவே உள்ளது. நாங்கள் படப்பிடிப்பு நடத்தும்போது கூட பய்ந்துகொண்டே தான் அதனை செய்தோம். நல்லவேளையாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இரண்டு அடி முன்னாடி எடுத்து வைத்தால் ஒரு அடி பின்னாடி எடுத்து வைக்கிறது. இப்படித்தான் இந்த நாடு வளர்ச்சி அடைகிறது.
நன்றி- நியூஸ் வீக் இதழ்