கலாசாரத்தை காக்கும் மனவாடுகள் ஸ்ரீனிவாச கல்யாணம்
ஸ்ரீனிவாச கல்யாணம்
இயக்கம் - சதீஸ் வகீஸ்னா
ஒளிப்பதிவு - சமீர் ரெட்டி
இசை - மிக்கி ஜே மேயர்
கலாசாரம், பாரம்பரியம் என வாழும் ஒருவரின் வாழ்க்கை. ஷெட்யூல் போட்டு வாழும் தொழிலதிபரோடு முட்டிக்கொண்டால் என்னாகும்? இதுதான் கதை.
ஆஹா
தெலுங்கு கலாசாரம் விரும்புவர்களுக்கான படம் இது. அனைத்து பிரச்னைகளையும் ஸ்ரீனிவாசன் பேசியே சமாளிக்கிறார். இதுவே நாயகி ஸ்ரீக்கு பிடித்தமானதாக இருக்கிறது. மேலும் அவரின் பெரிய குடும்பத்தோடு அவருக்கு இருக்கும் அப்டேட், ஸ்ரீக்கு ஸ்ரீனிவாசனின் மீது பொறாமையை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அவரது குடும்பம் தொழில், வருமானம் ஆகியவற்றுக்கு மட்டும் கைதட்டி மகிழும். இந்த வேறுபாட்டை நன்றாக விளக்கி எது வாழ்க்கை என்று சொல்லி இருக்கிறார்கள்.
படத்தை உறுத்தலின்றி நிதானமாக பார்க்கலாம். நிதின், ராசி கண்ணா, பிரகாஷ்ராஜ், ராஜேந்திர பிரசாத் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
ஐயையோ
படம் மெதுவாகவே நடக்கிறது. ஸ்ரீனிவாச கல்யாணம் என்பதால் சடங்கு நடைபெறும் வேகத்தில் படத்தை அழைத்து சென்றால் எப்படி? கிராமம் என்றால் சாணி தட்டுவதை ஏன் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. நந்திதா சுவேதாவுக்கு நடிக்க பெரிய வாய்ப்பில்லை. இருந்தாலும் கண்ணைக் கவரும் முகம்.
பாடல்கள் படத்தின் காட்சிகளுக்கு வழிவிட்டு பின்னாடியே இருக்கிறது.
தெலுங்கு கலாசாரத்தை விரும்பும் மென் இதயம் படைத்தவர்கள் படத்தைப் பார்க்கலாம்.
கோமாளிமேடை டீம்