இடுகைகள்

கத்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொலை செய்து ரத்தம் குடித்தால்தான் திருப்தி!

படம்
  பீட்டர் வில்லியம் சல்கிளிப் என்பவர், இங்கிலாந்தில் ஜாக் தி ரிப்பர் என்ற கதையை படித்தோம் அல்லவா? அதை முறையைக் கையாண்டவர். ஆனால் இன்னும் கொஞ்சம் ஸ்பீடு ஏத்து மாமா என டிஎஸ்பி இசையில் கூறுவதைப் போல குரூரத்தை இரண்டு ஸ்பூன் சேர்த்தார். பீட்டர், ஜாக்கைப் போலவே காவல்துறையினருடன் தனது கொலைகளைப் பற்றி பேசியவர்தான். ஆனால் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு அவரைப் பிடிக்கும்போது பதினைந்து பேர்களின் உயிர் பறிபோனது. பிழைத்தவர்களும் ஏன் பிழைத்தோம் என்ற அளவுக்கு உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டிருந்தன. முதலில் விலைமாதுக்களை தேடிப்பிடித்து குத்திக்கொல்ல ஆரம்பித்தார். குத்துவது என்றால் சாதாரணமாக அடிவயிற்றில் ஓங்கி குத்திக்கொல்வதோடு நிற்கவில்லை. கண்கள், கழுத்து, மார்பு, வயிறு, பெண் குறி என பதினான்கு முறை குத்திக்கொல்வது பீட்டரின் பாணி. இதனால் ஒருவர் உயிர்பிழைப்பது கடினம். அப்படி உயிர் பிழைத்து வாழ்ந்தால் அவரை பார்ப்பது நமக்கு கஷ்டமாக இருக்கும். அந்தளவு உடல் உறுப்புகளை உருக்குலைத்துவிடுவார் பீட்டர். விலைமாதுக்கள், வேலை செய்யும் பெண்கள், கல்லூரி மாணவர்கள் என கொலைக்கு தேவையான பொருட்களை மாற்றிக்கொண்டார். ஏன் இ

பிணத்துடன் உறவுகொள்வதும், உடலை துண்டாக வெட்டுவதும் எதற்காக?

படம்
பிணத்துடன் உடலுறவு நான் அவளது பிராவையும் பேண்டீசையும் அகற்றி அவளுடன் உறவுகொண்டேன். எனது வாழ்க்கையில் பிணத்துடன் உறவுகொண்ட இந்த நிகழ்ச்சி முக்கியமானது என்று சீரியல் கொலைகாரர் ஹென்றி லூகாஸ் கூறியிருக்கிறார்.  இது ஒருவகையில் உடலை அவமானப்படுத்துவது என தியரியாக சொல்லலாம். இறந்த உடலை உடனே புதைத்து அல்லது எரித்துவிடுவது என்பதே மரபு. அப்படியல்லாமல் அதனை தலையை வெட்டுவது, உடல் உறுப்புகளை வெட்டுவது, நிர்வாணப்படுத்தி கழுகுகளுக்கு இரையாக்குவது என்பது குரூரமான புத்திக்கு உதாரணமாக கூறலாம்.  சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை பிணங்களுடன் உறவு கொள்வது என்பது ஒருவகைப் பிரிவினர் மட்டுமே. இவர்கள் ஒருவரை சித்திரவதை செய்து கொல்வதை உடலுறவுக்கு முன்னர் ஆண், பெண் இருவரும் செய்யும் முன்விளையாட்டாக எடுத்துக்கொள்கின்றனர். மற்றொரு காரணம், இறந்தவர்கள் எதிர்ப்பு காட்ட மாட்டார்கள். எனவே, விரும்பியதை செய்யலாம். இதனால்தான் இறந்து உடல் நாறாதவர்களிடம் சீரியல் கொலைகார ர்கள் உடலுறவு கொள்கிறார்கள். சிலர் செத்து நாறிய உடலை எடுத்து பாதுகாத்து வேண்டியபோது உறவு கொள்வார்கள். எப்படி ப்ரோ சாத்தியம் என கேட்காதீர்கள். கனவை நினைவாக்க

உடலின் அற்புத பாதுகாப்பு கவசம் - தோல்

படம்
          pixabay           உடலைச் சுற்றிய கவசம் - தோல் நமது உடலிலுள்ள தோல் அளவுக்கு நோயிலிருந்து நம்மைக் காக்கும் கவசம் வேறு இல்லை . நீர் உள்ளே போகாது , புற ஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து காக்கிறது . உடலின் வெப்பம் அதிகரிக்கும்போது , வியர்வை மூலம் குளிர்ச்சி செய்வதும் கூட தோல்தான் . பல்வேறு அடுக்குகளாக உள்ள தோல் காயங்களிலிருந்தும் உடலைக் காக்கிறது . வியர்வை , வெளிப்படையாக தெரியும் கவசம் , உறுதித்தன்மை ஆகியவற்றை தோலின் முக்கியமான அம்சங்களாக கூறலாம் . வெளியே ஏப்ரல் மாத வெயில் காய்ந்தாலும் அல்லது எரிமலையே கூட வெடித்து லாவா உருகி ஓடினாலும் உடலின் வெப்பநிலை 36 முதல் 38 டிகிரி செல்சியஸிற்குள்தா்ன் இருக்கவேண்டும் . மூளை புத்திசாலித்திற்கான ஆதாரம்தான் என்றாலும் அதனால் வெப்பத்தை பொறுக்க முடியாது . 42 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை அதிகரித்தால் அது உயிருக்கே ஆபத்து . தோல் முழுக்க பல லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன . இவை எல்லாம் சேர்ந்து வேலைபார்த்துத்தான் தினசரி லிட்டர் கணக்கான வியர்வையை வெளியேற்றுகிறது . சில மனிதர்களுக்கு ஒரு மணிநேரத்தில் மூன்று லிட்டர் வியர்வை

அமெரிக்க மாப்பிள்ளை போல ஆன டேஞ்சர் டயபாலிக்! - துரோகம் ஒரு தொடர்கதை - முத்து காமிக்ஸ்

படம்
  டேஞ்சர் டயபாலிக்கின்  துரோகம் ஒரு தொடர்கதை லயன் முத்து காமிக்ஸ் ரூ. 50 இக்கதையை டேஞ்சர் டயபாலிக் கலக்கும் என்று கூட சொல்ல முடியாது. கோரா என்ற பெண் மரகத கற்களுக்காக மூன்று ஆண்களை பகடைக்காயாக எப்படி சுழற்றி விளையாடுகிறாள் என்பதுதான் கதை. இதில் டேஞ்சர் டயபாலிக் அமெரிக்க மாப்பிள்ளை போல வந்து போகிறார். அவரையும் அவரது காதலி ஈவா தான் காப்பாற்றும் சூழல் உள்ளது. இந்த லட்சணத்தில் டேஞ்சர் டயபாலிக் இந்த கதைக்கு தேவையா? அட்ரினோ, ரொடால்டோ, குற்றங்களில் தொடர்புடைய கத்திகளை சேகரிக்கும் மனிதர் என மூவரையும் கோரா என்ற பெண் மரகத கற்களை ஆட்டையைப் போட்டு எப்படி ஏமாற்றி சுற்ற விடுகிறாள் என்பதுதான் பாதிக்கதை. காமத்தால் மூன்று ஆண்களையும் கட்டிப்போட்டு சொகுசாக வாழும் நோக்கம் கோராவுக்கு உண்டு.  பெண்கள் தினம் வருவதால் இக்கதையை விஜயன் தேர்ந்தெடுத்திருக்க வாய்ப்பு உள்ளது. ஈவாவும், கோராவும்தான் கதையில் முக்கியமான ட்விஸ்டுகளை செய்கிறார்கள். கதையை நடத்துகிறார்கள். வீட்டிற்குள் புகும் டேஞ்சர் டயபாலிக் சில மணி நேரத்திலேயே காவல்துறையால் பிடிக்கப்படுவது கதையை தொய்வடையச் செய்கிறது.  கதையை நடத்திச்செல்வது முழுக்க கோரா என்

மனிதவேட்டையாடிய பேக்கரிக்காரர்! - ராபர்ட் ஹான்சன்

படம்
அசுரகுலம் ராபர்ட் ஹான்சன் சுபாவின் மனித வேட்டை நாவலை படித்திருக்கிறீர்களா? அதில் ஒருவரை திட்டமிட்டு கொலைக்குற்றம் சுமத்தி வெளியில் நடமாடுவதை தடை செய்து காட்டில் விட்டு வேட்டையாடத் துரத்துவார்கள். கொலை செய்யத் துடிப்பவர்கள், ராணுவத்தில் வேலை செய்து மனம் மரத்துப்போன மூன்று ரிடையர்ட் பெருசுகள். 1924ஆம் ஆண்டு ரிச்சர்ட் கானல் என்ற எழுத்தாளர் மோஸ்ட் டேஞ்சரஸ் கேம் என்ற சிறுகதையை எழுதினார். அதில் சிறுவிலங்குகளை திட்டம் போட்டு தீர்த்துக்கட்டும் வேட்டைக்காரர் ஒருவரைப் பற்றி பேசியிருப்பார். அதே கான்செப்டை அப்படியே பின்னர் நாவல், சினிமா, டிவி தொடர் என இன்ஸ்பையராகி உருவாக்கினார்கள். ஆனால் அவர்கள் அறியாத உண்மை, ராபர்ட் ஹான்சன் தன் பண்ணையில் மனிதர்களை அப்படித்தான் வேட்டையாடிக்கொண்டிருந்தார் என்பது. 1957 இல் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்த பணியாற்றியவர் ராபர்ட். பின்னர் அப்பணி முடிந்து நாடு திரும்பியவர் ஐயோவாவில் ஓர் பெண்ணைப் பார்த்து காதலில் விழுந்தார். எழும்போது திருமணம் செய்திருந்தார். அப்போது பார்த்து ஏதோ ஒரு காரணத்தில் அங்குள்ள பள்ளியின் பஸ் காரேஜை எரித்துவிட்டார். இதனால் டரியலா