மனிதவேட்டையாடிய பேக்கரிக்காரர்! - ராபர்ட் ஹான்சன்






Robert Hansen Story


அசுரகுலம்


ராபர்ட் ஹான்சன்


சுபாவின் மனித வேட்டை நாவலை படித்திருக்கிறீர்களா? அதில் ஒருவரை திட்டமிட்டு கொலைக்குற்றம் சுமத்தி வெளியில் நடமாடுவதை தடை செய்து காட்டில் விட்டு வேட்டையாடத் துரத்துவார்கள். கொலை செய்யத் துடிப்பவர்கள், ராணுவத்தில் வேலை செய்து மனம் மரத்துப்போன மூன்று ரிடையர்ட் பெருசுகள்.


1924ஆம் ஆண்டு ரிச்சர்ட் கானல் என்ற எழுத்தாளர் மோஸ்ட் டேஞ்சரஸ் கேம் என்ற சிறுகதையை எழுதினார். அதில் சிறுவிலங்குகளை திட்டம் போட்டு தீர்த்துக்கட்டும் வேட்டைக்காரர் ஒருவரைப் பற்றி பேசியிருப்பார். அதே கான்செப்டை அப்படியே பின்னர் நாவல், சினிமா, டிவி தொடர் என இன்ஸ்பையராகி உருவாக்கினார்கள். ஆனால் அவர்கள் அறியாத உண்மை, ராபர்ட் ஹான்சன் தன் பண்ணையில் மனிதர்களை அப்படித்தான் வேட்டையாடிக்கொண்டிருந்தார் என்பது.

1957 இல் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்த பணியாற்றியவர் ராபர்ட். பின்னர் அப்பணி முடிந்து நாடு திரும்பியவர் ஐயோவாவில் ஓர் பெண்ணைப் பார்த்து காதலில் விழுந்தார். எழும்போது திருமணம் செய்திருந்தார். அப்போது பார்த்து ஏதோ ஒரு காரணத்தில் அங்குள்ள பள்ளியின் பஸ் காரேஜை எரித்துவிட்டார். இதனால் டரியலான மனைவி இவர் வேற மாதிரி விவகாரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டு கிளம்பிவிட்டார். மூன்று ஆண்டுகள் சிறைதண்டனைக்குப் பிறகு விடுதலை. இம்முறையும் சில வழிப்பறிகள் செய்து பெயரை காவல்துறையில் பதிவு செய்துகொண்டார். பின்னர் மறுமணம், உள்ளூர் பெண்ணை மணந்துகொண்டார்.

அலாஸ்காவில் இருந்த அன்சோரேஜ் என்ற இடத்திற்கு இடம்பெயர்ந்தார். அங்கு சென்று சிறிய பேக்கரி ஒன்றைத் தொடங்கினார். இரண்டு பிள்ளைகளோடும் மனைவியோடும் வாழத்தொடங்கினார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு,  ஒரு பெண் கையில் செயினுடன் ஓடி வந்தார். போலீஸ் முழித்தது. ரிச்சர்ட் தன்னை வல்லுறவு செய்து சித்திரவதை செய்தார் என்றது. ஆனால் ரிச்சர்ட் கொடுமைப்படுத்தினார் என்பதை நிரூபிக்க சாட்சிகள் இல்லை என்பதால் விடுதலை ஆனார்.

ஆனால் அவரின் கேபின் பற்றி சொன்னதைப் போலீஸ் முதலில் கண்டுகொள்ளவில்லை. பின்னர், தேடிப் பார்த்தபோது அங்கிருந்த நிலப்பகுதிகளில் யார் என்றே கண்டறிய முடியாதபடி சடலங்கள் கிடைத்தன. அனைத்தும் பொருத்திப்பார்த்தால் ரிச்சர்ட் மாட்டிக்கொண்டார்.

வேட்டை

விலைமாதர்களை, பாரில் ஆடும் பெண்கள்  இவர்களை மட்டுமே ரிச்சர்ட் தேர்வு செய்து கடத்தினார். பெண்களை கை விலங்குடன் ஓட விட்டு, பின்னர் அவர்களை வேட்டையாடுவது அவரின் பாணி. இதற்கென மேப் எல்லாம் போட்டு குறித்து வைத்திருந்தார். சிலமணிநேரங்கள் மட்டுமல்ல நாட்கணக்கில் வேட்டை நீளும். சாதாரண நாம் என்ன செய்வோம். முடிந்தால் தப்பித்துக்கொள் என்றால், முடிந்தவரை ஓடித் தப்பிக்க முயற்சிப்போம். அப்படித்தான் அனைத்து பெண்களும் முயன்றார்கள். அந்த தவிப்புதான் ரிச்சர்டுக்கு பிடித்தது. தேடிப்பிடித்து கொன்றார். இதற்காக தானியங்கி ரைபிளும், கத்தியும் வைத்திருந்தார்.

தாக்குவது, கற்பழிப்பது பின்னர் ஓடவிட்டு வேட்டையாடுவது அவருக்குப் பிடிக்கும். வேட்டை முடிந்ததும், கொன்ற சடலங்களை கிரினிக் ஆற்றில் உள்ள மணல்மேட்டில் புதைத்துவிடுவார். பின் நல்ல அமெரிக்க குடிமகனாக வீடு திரும்பி பேக்கரியைப் பார்த்துக்கொண்டார். புதைக்கப்பட்ட இடத்தையும் குறித்து வைத்திருந்தது பின்னாளில் போலீசுக்குப் பயன்பட்டது. அவர்களுக்கு பன்னிரண்டு சடலங்களைக் கண்டுபிடிக்க உதவினார். இறந்தவர்களின் உடலில் உள்ள டாலர்களை செயின்களை தங்கம் போல பாதுகாத்து வந்தார் ரிச்சர்ட்.

பின்னர் குற்றம் நிரூபணமாக பதிமூன்று கொலைகளை மட்டுமே ஒத்துக்கொண்டார். ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. அலாஸ்கா சிறையில் அடைக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு உடல்நலன் கெட்டு மரணித்தார்.

வின்சென்ட் காபோ

நன்றி - ஆல்தட் இன்டரஸ்டிங் வலைத்தளம், ரேங்கர் வலைத்தளம்