தானியங்கி கார்களின் ஆண்டு தொடங்குமா?
giphy |
2020 கேள்வி பதில்கள்
தானியங்கி கார்கள் சாலையைத் தொடுமா?
கூகுளின் வேமோ நிறுவனம் தானியங்கி கார்களுக்கான ஆராய்ச்சியில் உள்ளது. ஆனால் இதில் இன்னும் பல்வேறு கட்டங்களை கடக்க வேண்டியுள்ளது. பயணிகளை சரியானபடி கவனித்து கார்கள் செல்லவேண்டியதில் பயிற்சி தேவைப்படுகிறது. இல்லாதபோது விபத்துகளை சந்திக்கவேண்டும். இந்த ஆண்டில் சாலைக்கு வர தானியங்கி கார்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.ஆராய்ச்சிகள் வேகம் பிடித்துள்ளதுதான் காரணம்.
தகவல்களை பாதுகாப்பதில் இனி டெக் நிறுவனங்கள் விதிகளை பின்பற்றுமா? நமது தகவல்கள் பாதுகாக்கப்படுமா?
இணைய உலகில் இப்படியொரு கேள்வியா?இலவசம் என்று வரும் சேவைகள் எப்படி தகவல்களை பாதுகாப்பவையாக இருக்கும் என நம்புகிறீர்கள். ஐரோப்பிய யூனியன் போன்ற பாதுகாப்பு விதிமுறைகள் இருந்தால்தான் அதெல்லாம் சாத்தியம்.விதிமுறைகளை கடைபிடித்தால்தானே அவையெல்லாம் நடைமுறைக்கு வரும். டெக் நிறுவனங்கள் அடிக்கடி அபராத பிரச்னையில் மாட்டுவதே விதிகளை கடைபிடிக்காத மூர்க்கமான வியாபார வெறிக்காகத்தான். பிரைவசி செட்டிங்குகளை நீங்களே செய்துகொள்ளுங்கள். நிறுவனங்களை அந்தளவுக்கு மட்டுமே நம்பலாம்.
நன்றி - வெப் யூசர் இதழ்