அறிவியல் மற்றும் சூழலியல் நூல்கள் 2019! - வாசிக்க ரெடியா?






Image result for choked book


சிறந்த அறிவியல் மற்றும் இயற்கை நூல்கள் 2019


The Weil Conjectures 
Karen Olsson  
இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு கணிதவியலாளரான ஆண்ட்ரே வெல் மற்றும் தத்துவவியலாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான சைமன் வெல் ஆகியோரை நினைவுகூரும் நூல். கணிதமும், தத்துவமும் இணைந்து பயணிக்கும் நூல் வாசிப்பதற்கு புதுமையாக உள்ளது.  

Something Deeply Hidden
Sean Carroll  
பால்வெளி பற்றி பல்வேறு உண்மை மற்றும் வதந்திகள் நிலவுகின்றன. அங்குள்ள சூழல்கள், விதிகள், செயல்பாடுகளை இயற்பியலாளர் சீன் காரல் எளிமையாக புரியும்படி விளக்கி எழுதியுள்ளார். 

Superheavy 
Kit Chapman 
தனிம வரிசை அட்டவணையில் உள்ள அடர்த்தியான நிலையில்லாத தனிமங்கள் எப்படி நம் வாழ்க்கையை மாற்றின என்று ஆசிரியர் கிட் சாப்மன் விளக்கியுள்ளார். இதில் இடம்பெறும் தனிமங்கள் எப்படி இயற்கையில் கிடைக்கின்றன என்று கூறுவது சுவாரசியமாக உள்ளது. 

The NASA Archives: 60 Years in Space
Piers Bizony, Andrew Chaikin and Roger 
விண்வெளியில் சாதனை படைத்து வரும் நாசாவின் அறுபது ஆண்டு நிகழ்ச்சிகளை ஆவணமாக்கி இருக்கிறார்கள். 400க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், ஓவியங்கள் பலவும் பார்த்திராதவையாக வசீகரமாக இருக்கின்றன. நேற்று, இன்று, நாளை என விஷயங்களை விளக்கி கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.


Invisible Women 
Caroline Criado Perez  
அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு ஏன் குறிப்பிடும்படி இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ள முக்கியமான நூல். அதன் காரணத்தை ஆழமாக அலசியுள்ளதால் 2019ஆம் ஆண்டிற்கான ராயல் சொசைட்டி விருது பெற்றுள்ளது.  
  

இயற்கை
Choked
Beth Gardiner

அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் பெத் கார்டினர். இவர், இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் ஏற்படும் காற்று மாசுபாடு பாதிப்பு, அதன் விளைவுகள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார். விறகுகளால் சமைப்பதால் ஏற்படும் மாசுபாடு, லண்டனில் டீசல் வாகனங்களால் ஏற்படும் மாசு, வோக்ஸ்வேகன் மாசுக்கட்டுப்பாட்டிற்காக செய்த மோசடி பற்றியும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. 

Underland
Robert Macfarlane

பூமியில் மனிதர்கள் நிலத்திற்கு கீழ் ஏற்படுத்திய கனிம சுரங்கங்கள், கழிவு கிடங்குகள், அணுக்கழிவுகள் ஆகியவற்றைப் பற்றி அக்கறையுடன் பேசுகிறது இந்நூல். நார்வேயிலுள்ள கடல் குகைகள், கிரீன்லாந்திலுள்ள பனிப்பாறைகள் என ராபர்ட் தான் பயணித்த இடங்களிலுள்ள கிடைத்த இயற்கையுடனான நெருக்கமான அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். 

Floating Coast: An Environmental History of the Bering Strait  
Bathsheba Demuth

ரஷ்யா மற்றும் கனடா நாடுகளுக்கு சொந்தமான இடத்தில் உள்ள பகுதி பெர்னிங்கா. இங்கு 150 ஆண்டுகளாக நிலவும சூழல் அரசியலை விரிவாக எழுதியுள்ளார். இப்பகுதியில் தங்கம், எண்ணெய் வளங்கள் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் எப்படி சூழலை அழிக்கிறது என ஆசிரியர் பெமுத் விவரித்துள்ளார். 

The Grand Food Bargain: and the Mindless Drive for More  
  Kevin D Walker

உரங்கள் மூலம் செய்யப்படும் உற்பத்தி எப்படி ஆரோக்கியத்தை கெடுக்கிறது? குறிப்பிட்ட வகை பயிர்கள் மட்டுமே சந்தைக்கு வருவதன் காரணம், குப்பை உணவுகளால் ஏற்படும் உடல் பருமன், தாராள சந்தை மூலம் குறையும் கூலித்தொகை என பல்வேறு விஷயங்களை உணவுத்துறையின் பின்னணியில் பேசியுள்ளார் ஆசிரியர். 

Waters of the World
Sarah Dry

பருவநிலை மாற்றத்தால் நடைபெறும் பாதிப்புகள், அரசின் எச்சரிக்கைகள், மழைப்பொழிவு ஆகியவற்றைப் பற்றிய வரலாற்றை சாரா விளக்குகிறார். கண்ணுக்குத் தெரியாத இயற்கையின் கண்ணிகள் எப்படி இணைந்து சூழலை உருவாக்குகின்றன என வரலாறு வழியாக ஆசிரியர் எளிமையாக விளக்குகிறார்.  

தகவல்:BBC, The guardian, Nature

பிரபலமான இடுகைகள்