துரோகியை கண்டறியும் ஜாக்கி சான் - ஸ்பிரிச்சுவல் குங்பூ
ஸ்பிரிச்சுவல் குங்பூ
இயக்கம், தயாரிப்பு - லோ வெய்
எழுத்து - பான் லெய்
இசை - ஃபிராங்கி சான்
ஒளிப்பதிவு - சான் விங் சூ
1978இல் வந்த படம். பொதுவாக இந்த படங்களின் கதை ஒன்றுதான். போட்டி தற்காப்புக்கலை பள்ளி, குறிப்பிட்ட பள்ளியை மூட வைக்க தகிடு த த்தங்களை செய்வார்கள். முடிந்தால் அப்பள்ளி தலைவரை போட்டுத்தள்ளுவார்கள். இங்கும் அதேபோல்தான். ஆனால் அந்த துரோகத்தை பள்ளியைச் சேர்ந்தவரே செய்கிறார். தனது சுயநலத்திற்காக, தலைவர் பதவிக்கு வரும் தகுதி கொண்டவர்களை கொல்கிறார். அவர் யார் என்று பள்ளி கண்டுபிடித்ததா, அவர்கள் ஜாக்கி வென்றாரா, இறந்தவர்களுக்காக எதிரியை பழிக்குப்பழி வாங்கினார்களா என்பதுதான் கதை.
பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஏதுமில்லை. ஜாக்கிசான் மட்டுமே நம்மை காப்பாற்றுகிறார். கதை என்று உறுதியாக ஒன்றுமில்லை. பள்ளியில் இருந்து தற்காப்புக்கலை சார்ந்த சுவடி காணாமல் போகிறது. அதன்பின்னர், அப்பள்ளியில் உள்ள குருமார்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் அடித்து கொல்லப்படுகிறார்கள். நெஞ்சில் கைக்கட்சி சின்னம் இருக்கிறது. சீனாவில் எதற்கு காங்கிரஸ் கட்சி பிரசாரம்? அந்த வலுவான ஆளை தடுக்க சில ஆவிகள் உள்ள ரகசிய தற்காப்பு புத்தகத்தை ஜாக்கி பயிற்சி செய்கிறார். அந்த ஆவிகளே பயிற்சி தருகின்றன. கிளைமேக்ஸ் சுபம்தான். துரோகியை அவர் அடையாளம் கண்டு இருவரையும் போட்டுத் தள்ளுகிறார்.
- கோமாளிமேடை டீம்