பெண்களை குரான் புறக்கணிக்கவில்லை! - எழுத்தாளர் ஜியா அஸ் சலாம்
நேர்காணல்
குரான் பெண்களை ஒதுக்கவில்லை!
பெண்களை மசூதிக்குள் பொதுவாக அனுமதிப்பதில்லை. அவர்களுக்கும் ஆண்களுக்கும் தனி இடங்கள் அங்கு உண்டு. இதுபற்றி எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜாய் அஸ் சலாம் வுமன் இன் மஸ்ஜித்: எ க்வெஸ்ட் ஃபார் ஜஸ்டிஸ் என்ற நூலை எழுதியுள்ளார். அவரிடம் பேசினோம்.
நீதிமன்றம், பெண்களை சபரிமலை போன்ற இடங்களில் அனுமதித்து உள்ளது. அதை நீங்கள் ஏற்கிறீர்களா?
இது சரி, சரி அல்ல என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை. மதம் பெண்களை அனுமதிக்கும்போது, அதனை ஆண்கள் ஏன் தடுக்கிறார்கள் என்பதே எனது கேள்வி. நீதிமன்றம் குரான் மற்றும் அரசியல் அமைப்பு சட்டப்படி பெண்களை அனுமதிப்பு ஏற்புடையதே.
இந்தியாவில் வரலாற்று ரீதியாக பெண்களின் உரிமைகளை எப்படி வரையறுக்கிறீர்கள்.
சுல்தான்கள் காலத்தில் இங்குள்ள பெண்கள் சிறப்பான கல்வித்தகுதியை அடைந்தனர். காரணம், அங்கு ஏராளமான மதரசாக்கள் செயல்பட்டு வந்தன. மேலும், அடிமையாக வேலை செய்து வந்த பெண்கள் கூட குரானைப் படிக்கும் அளவு கல்வி அறிவு பெற்றிருந்தனர்.
மொகலாயர்கள் காலத்தில் பெண்கள் மதரசாக்களையும், மசூதிகளையும் கட்டியது வரலாறு மூலம் தெரிய வருகிறது. மேலும் தங்களின் திருமணத்திற்கு கூட பல்வேறு நிபந்தனைகளை அவர்கள் விதித்து வந்திருக்கின்றனர். சுதந்திரத்திற்கு முன்பு வரை பெண்களை தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட முடியாது. மறுமணம் செய்யும் கணவருக்கு முதல் மனைவியின் ஒப்புதலும் அனுமதியும் தேவை. பெண்களை மசூதியிலிருந்து விலக்கிய விஷயம் பின்னர் நடந்தது. அப்போதுதான் அநீதியான தலாக் சட்டமும் அமலானது.
பெண்களின் உரிமைக்கான நூலை எழுத உந்தியது எது?
பொதுவாக இந்தியாவைத் தவிர வேற்று நாடுகளில், முஸ்லீம் தன் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு மெக்கா, உம்ரா ஆகிய இடங்களுக்கு செல்வார். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் பெண்களை தனியாக வீட்டில் விட்டுவிட்டு ஆண்கள் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு செல்கின்றனர். இந்த பாகுபாடுதான் என்னை நூலை எழுத வைத்தது.
நன்றி – டைம்ஸ் அக்.30,2019 ஜிபி ஜே கட்டகாயம்