வில்லாதி வில்லன்கள் - உலகை அழித்த தலைவர்களின் கதை!
pixabay |
வில்லாதி வில்லன்கள்
பாலா ஜெயராமன்
கிழக்கு பதிப்பகம்
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்கவே கொள்கை என்று பேசி ஆட்சிக்கு வருபவர்கள் உருவாக்கும் சட்டங்கள், நாடுகளை எப்படி துண்டாடுகின்றன என்பதற்கு நிறைய வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. நடப்பில் பாஜக அரசு என்றால், தொன்மைக் காலத்தில் பல்வேறு இனக்குழுக்கள், போர்ச்சுக்கல், இங்கிலாந்து ஆகியவை இதே வேலையைச் செய்தன.
வரலாற்றில், வடகொரியாவின் கிம் குடும்பம், பாகிஸ்தானின் ஜியா உல் ஹக், சீனாவின் மாவோ, ரஷ்யாவின் ஸ்டாலின் வரை நாட்டை சீரழித்த ஆட்களைப் பற்றி கூறலாம். நூலில் உலக நாடுகளில் உள்ள மக்களை கொன்றழித்த, ஆட்சியாளர்களைப் பற்றி சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.
இதில் கொள்கை என்ற வகையில் கிம் குடும்பம் இன்றும் சில கொள்கைகளைப் பின்பற்றி வடகொரியாவை சர்வாதிகாரமாக ஆண்டு வருகிறார்கள். ஜனநாயகத்தில் எந்த முடிவும் எட்டப்படாது என்று நம்பிக்கை கொண்டவர்கள், கம்யூனிசத்தின் பக்கம் செல்வார்கள். அதுவும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்தானே?
எந்தக் கொள்கைகளாக இருந்தாலும் காலத்திற்கேற்ப மாற வேண்டும். பிற நாடுகளுடன் இசைவாக இருந்து நாட்டை முன்னேற்ற வேண்டும். இந்த வகையில் ஜப்பான் அமெரிக்காவின் உதவியைப் பெற்று நாட்டை பெருமளவு முன்னேற்றியுள்ளது இதற்கு சான்று.
இவர்கள் ஏதோ ஒரு வகையில் பிற நாடுகளை தாக்கியது கூட செல்வத்திற்காக அல்ல. நாகரிகங்களின் மோதல் என்றுதான் கூறவேண்டும். நாங்கள் ஆளவேண்டும். சிறுபான்மயினர், அதற்கு அடங்கியிருக்க வேண்டும் என்ற எண்ணம் இந்நூலிலுள்ள பலரின் மூளையிலும் இருந்துள்ளது. இதுவே அவர்களின் பிற்கால வீழ்ச்சிக்கு காரணமானது.
வில்லாதி வில்லன்கள் பட்டியல் இந்நூலோடு முடியவில்லை. 231 பக்கங்களையும் தாண்டி நீளும். காரணம், அராஜக தன்மை கொண்ட சர்வாதிகார மனப்பான்மை கொண்ட தலைவர்கள் ஜனநாயகம் வழியாகவே தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள்.இவர்களே அடுத்து உலகை இயக்கும் சக்தியாக மாறுவார்கள். இது தவிர்க்க முடியாத சுழற்சி.
நன்றி - பாபு.பெ.அகரம்