உலகை மாற்றும் 2020 தொழில்நுட்பங்கள் இவைதான்!






Mobile Phone, Smartphone, 3D, Manipulation, Screen, App
pixabay




உலகம் நொடிக்கு நொடி மாறி வருகிறது. தலைமுறையாக செய்து வந்த தொழில்கள் இன்று இழுத்து மூடப்படுகின்றன. பெரும்பாலான தொழில்கள் இணையம் சார்ந்து இயங்கத் தொடங்கியிருக்கின்றன. பல்வேறு தொழிற்கூடங்களில் ஆட்டோமேஷன் நுட்பம் இயக்கப்படத் தொடங்கிவிட்டார்கள். செயற்கை நுண்ணறிவும் வேகம் கொள்ளத் தொடங்கி உள்ளது., இதனால் வேலை இழப்பு அபாயமும் ஏற்படத் தொடங்கியுள்ளது. புத்தாண்டில் என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.



மிக்ஸ்டு ரியாலிட்டி

பிளேடு ரன்னர் படத்தில் ஏஜண்ட் கே, தன் செயற்கை நுண்ணறிவுத்தோழன் ஜோய் உடன் பேசுவது போல காட்சி அமைத்திருப்பார்கள். நிஜமும் அதுதான். தற்போது டிவிகளில் கால்பந்து, கிரிக்கெட் போன்றவற்றை பாப்கார்ன் கொரித்தபடி பார்க்கிறோம். அடுத்த வரவிருக்கும் ஆண்டுகளில், விஆர் ஹெட்செட்டில் அதே விளையாட்டை நாமும் விளையாடியபடி இருப்போம். சூழல் அந்தளவு நெருங்கிவிட்டது. மும்பையைச் சேர்ந்த டெசராக்ட் என்ற மிக்ஸ்டு ரியாலிட்டு தொழில்நுட்ப கம்பெனியை ஜியோ நிறுவனம் வாங்கியுள்ளது இதையே காட்டுகிறது. இத்துறையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இமேஜினேட் என்ற நிறுவனமும் சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.


கூகுள் கிளாஸ், மைக்ரோசாப்ட் ஹோலோலென்ஸ், ஃபேஸ்புக்கின் ஆகுலஸ் ஆகியவை இம்முறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்தான். நிதி தொடர்பான கேள்விகளுக்கு கோரா எனும் செயற்கை நுண்ணறிவு ஆலோசகர் பதில் தரும்படி அமேசான் நிறுவனம் தன் சேவைகளை மாற்றியுள்ளது. சீனாவில் இதனை இன்னும் மேம்படுத்தி, டிவி செய்தி வாசிப்பாளரையே ஏ.ஐ முறையில் மாற்றியுள்ளது. ஜின்குவா செய்தி நிறுவனம் இதற்காகவே செய்தியில் பேசப்பட்டது.

சோலார் திட்டங்கள் - மின் சாதனங்கள்


1960ஆம் ஆண்டுகளிலிருந்து சோலார் என்ற வார்த்தை, கருவிகள் புகழ்பெற்று வருகின்றன. தற்போது, ஹீலோயோஜென் என்ற நிறுவனம் சோலார் முறையில் மின்சாரம் தயாரிப்பதில் தீவிரமாக உள்ளது. இந்த நிறுவனத்திற்கு பில்கேட்ஸ் முதலீட்டாளராக உள்ளார். எதிர்காலம் சோலார் முறையில் அமையும் வாய்ப்பு அதிகம். தற்போது இந்தியாவில் 70 சதவீத த்திற்கு அதிகமாக நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சதவீத த்தைக் குறைக்க சோலார் கருவிகளை நாம் ஆதரித்தே ஆகவேண்டும்.


ரோபோ பாஸ்கள்

2022 தொடங்கி 75 மில்லியன் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று மெக்கின்சி ஆய்வு நிறுவனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் 400 மில்லியன் பேர், ஆட்டோமேஷனால் வேலை இழப்பைச் சந்திப்பார்கள் என்கிறது இந்த அறிக்கை.

இதன்விளைவாக விரைவில் ரோபோ டீம் லீடரை நாம் தலைவராக ஏற்கவேண்டியிருக்கலாம். காரணம் செயற்கை நுண்ணறிவில் ஏற்படும் முன்னேற்றங்கள்தான். அதில் மகிழ்ச்சியான விஷயம், சீனர்கள், இந்தியர்கள் இதனை ஏற்றுக்கொண்டு அதில் தம்மை எப்படி காப்பாற்றிக் கொள்வது என கற்று வருகிறார்கள் என்பதுதான்.

பணம் செலுத்தும் வசதி!

இப்போதே கிரடிட் கார்டு, டெபிட் கார்டுக்கு பதிலாக ஜி பே, போன் பே ஆகிய வசதிகள் வந்துவிட்டன. அடுத்து சார்ஜ் கார்டு வரவிருக்கிறது. யுபிஐ முறையில் பணம் செலுத்தும் பேடிஎம் வந்தபின் சந்தையில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. 2019ஆம் ஆண்டில் 2.7 பில்லியன் டாலர்களை இந்திய மக்கள் அனுப்பி வைத்துள்ளனர். இந்த மதிப்பு இனிமேலும் உயரும் வாய்ப்புள்ளது. வங்கிக்குச் சென்று பணம் பெறுவது அரிதிலும் அரிதான காரியமாகும். 3 ஆயிரம் ஆண்டுகளாக தாக்குப்பிடித்த பணம் இனி அஸ்தமனமாகும்.


மரபணு தொகுப்பாக்கம்


ஜீன் எடிட்டிங் என்றால் எளிதாக புரியும்தானே? எய்ட்ஸ், ஏஎல்எஸ் உள்ளிட்ட நோய்களை தீர்க்க இதுவே தீர்வாக ஆராய்ச்சியாளர் முன்மொழிந்து வழிமொழிகின்றனர். கேஸ் 9 என்ற புரதம்தான் இதில் முக்கியமானது. சீனாவில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு மரபணு தொகுப்பாக்கம் செய்யப்பட்டது. உலகம் முழுக்க கண்டனங்கள் எழுந்தன. ஆனால் , மனிதர்களுக்கு செய்யும் ஆராய்ச்சிதான் அதன் நடைமுறைப் ய்யன்களை அறிய உதவும்.


நன்றி - லிவ்மின்ட்