மது, மட்டன் கொண்ட டின்னருக்குப் பிறகு?




family thanksgiving GIF by Greetings



கிறிஸ்துமஸ் டின்னர் சாப்பிட்டால் என்னாகும்?

ஷாம்பெய்ன், விஸ்கி, ரம், பிளம் கேக்குகள், பிரியாணி என கலந்துகட்டி அடித்திருப்பீர்கள். இதனால் வயிற்றுக்குள் என்ன நடக்கும் என்று தெரிந்தகொள்ள ஆசையா?

இதோ..


5 நிமிடங்கள்

மது, உங்கள் ரத்தத்தில் தேளின் விஷம் போல வேகமாக ஏறும். முதல் சிப்பில் இந்த மாற்றம். பெரும்பாலும் மதுவை சிறுகுடல் ஏற்றுக்கொள்ளும் பின்னரே அவை வயிற்றுக்குள் சேகரமாகும். மது ரத்தசெல்களின் செயல்திறனை குறைக்கின்றன. இதனால் வயிறு மெல்ல சூடாகிறது.

ஒரே நாளில் கேக்,பிரியாணி, மது என வெளுப்பது உடலில் கலோரியை அதிகரிக்கிறது. ஆனால் என்ன கொண்டாட்டம் என்பதே பெரும்பாலும் சாப்பாடுதானே?

20 நிமிடங்கள்

வயிற்றின் கொள்ளளவு என்பது ஒரு லிட்டர்தான். எனவே வெறித்தனமாக பஃபே விருந்தில் வேட்டையாடி, மாஸா குடித்து தீர்த்தாலும் மூத்திரம் முந்திக்கொண்டு வந்துவிடும். ஒருமணி நேரத்திற்கு ஒரு லிட்டம் சிறுநீர் உடலில் இருந்து வெளியேறுகிறது. இதுபோன்ற மொடாக்குடி விருந்துகளில் ஹரி படத்தில் பிரியன் கேமரா சுற்றுவது போல வேகமாக நடைபெறும். எனவே மூச்சு வாங்கியபடி வெஸ்டர்ன் கக்கூசில் குடலை கழுவ வேண்டி இருக்கலாம்.


30 நிமிடங்கள்

இதற்குமேல் நீங்கள் சாப்பிட்டால் கணையத்திலிருந்து இன்சுலின் சுரக்கும். சாப்பிடும உணவை சர்க்கரையாக்கி கிளைகோஜென்னாக சேகரம் செய்யத்தான் இந்த முயற்சிகள். உடலில் சர்க்கரை அளவு குறையும். இதனால் உங்கள் உடல், நான்கு பேர் சேர்ந்து அடித்து உதைத்தது போல ஓய்வுக்கு கெஞ்சும்.


ஒருமணி நேரம்

ஆந்திரா மெஸ்ஸில் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து வாங்கி சாப்பிடுபவர்களை பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கும் இப்படித்தான் மோர்க்குழம்பில் இருந்து மீண்டும் சாம்பார், ப ப்பு கேட்பவர்களுக்கு வியர்க்கும். துடைக்க கூட நேரமின்றி சாப்பிடுவார்கள். இப்படி விழாவில் சாப்பிட்டால், உடலின் செரிமானம் பங்கமாகும். பதினாறு பேர் சேர்ந்து உங்களை மொத்துவது போன்ற சோர்வு உண்டாகும்.


இரண்டு அல்லது மூன்று மணிநேரம்

உங்கள் உடல் ஓய்வுக்கு கெஞ்சும். அரிசி உணவுகளின் செரிமானத்தை மது தாமதமாக்கும். வயிற்றில் சங்கர் சிமெண்ட் மூட்டை ஒன்றை தூக்கிச்சும ப்பது போலவே இருக்கும். உடலின் ரத்த த்தில் ராபினோஸ் என்ற வேதிப்பொருள் உருவாகும்.

ஆறுமணிநேரத்திற்கு பிறகு...

இதை நீங்கள் பாத்ரூமுக்கு சென்று வந்த பிறகு என்று கூட சொல்ல லாம். இப்போது வயிற்றில் வலி இருக்காது. சிறிது ரிலாக்சாக இருப்பீர்கள்.


24மணிநேரத்திற்குப் பிறகு


இப்போது உடல் சத்துக்களை சிறுகுடல் மூலம் சேகரம் செய்திருக்கும். மலம் பெருங்குடலுக்குச் சென்றிருக்கும். நீங்கள் மது அருந்தியதால், உடலில் நீர்சுருக்கம் ஏற்படும். எனவே தேவையான அளவு தண்ணீர் குடித்தால் எல்லாம் நலமே.


நன்றி - பிபிசி



பிரபலமான இடுகைகள்