தடுப்பூசி சதவீதம் வீழ்ச்சியுற்று வருகிறது!
தடுப்பூசிகள் ஆபத்தானவையா ?
தடுப்பூசிகளில் நீர்த்துப்போன நுண்ணுயிரிகள், பாதி செயல்திறன் கொண்ட வைரஸ்கள், வேறு சில உயிரிகளின் நச்சுகள் இருக்கும்.
இவை உடலில் சென்றவுடன் நோய் எதிர்ப்பு சக்தி, இவற்றை எதிர்க்கும்.
இவை குழந்தையின் உடலில் நோய் வரும் முன்னரே செலுத்தப்படும். எதற்காக, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்காக. இதனை நாம் செய்யாதபோது, நோய் தாக்கினால் தாங்கும் சக்தி நமக்கு இருக்காது. சற்று நீர்த்த நிலையில் நோய்க்கிருமிகளைத்தான் நாம் தடுப்பூசியாக குழந்தைகளுக்குச் செலுத்துகிறோம். அவை நோய் பற்றிய நினைவை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறது. இதனால்தான் குழந்தைகள் போலியோ, க க்குவான் இருமல், அம்மை போன்ற நோய்களிலிருந்து தப்பிக்க முடிகிறது. இங்கு நான் கூறுவது அறிவியல் பூர்வமான உண்மை. அதேசமயம் தடுப்பூசிகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகளும் உண்டு. அனைவருக்கும் பொதுவாக மருந்து என்பது உலகில் கிடையாது. சில மருந்துகள் சிலருக்கு காய்ச்சலையும், வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி உயிரையும் கூட பறிக்கலாம்.
இன்றைய தகவல்படி உலகம் முழுவதும் சரியான தடுப்பூசிகள் போடப்படாமல் 30 லட்சம் குழந்தைகள் நோய்களுக்கு பலியாகி வருகின்றனர். குறைந்தது நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தினால் ஐந்து வயதிற்குள் பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கையையாவது பத்து லட்சமாக குறைக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். அதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, 91 சதவீதம் மட்டுமே பூர்த்தியானது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 60 சதவீதத்தை தாண்டவில்லை. அரசின் கருத்தியலும் இதில் முக்கியப் பங்காற்றுகிறது. சிறுபான்மையினரை அழித்தொழிக்கும் அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு, ஊசி போட்டு உயிரைக்காப்பாத்துறோம் என்றால் யார் உங்களை நம்புவார்கள்? கிருஷ்ணன் கர்ணனின் தேரோட்டியிடம் செய்த தந்திரத்தை இந்திய அரசு சிறுபான்மையினரிடம் காட்டுகிறது. நம்பிக்கையின்மை பெருகி வருவது மற்றொரு காரணம். அரசு அமைப்புகள் மீது மக்களுக்கு நம்பிக்கை பங்குச்சந்தை போல அன்றி, திடமாகவே குறைந்து வருகிறது.
எதிர்கால ஊசிகள்
உங்களின் மரபணு வரிசையைப் பொறுத்தே ஊசிகள் தயாரிக்கப்படும். இன்று பலருக்கும் அலர்ஜி ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே இப்பாதிப்பு ஏற்படாதபடி, நோய் எதிர்ப்பு அமைப்புடன் இணக்கமான வேதிப்பொருட்கள் கொண்ட மருந்துகள் இனி சந்தைக்கு வரும். அவைதான் நம் எதிர்காலம் கூட.
நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ் , Giphy