கிஸ்மோ புதுசு! - அசத்தும் சீனப் பொருட்கள்




வீலைட் 


இந்த ஆண்டின் சிறந்த கிஸ்மோக்களை பார்க்கப்போகிறோம். இவை அனைத்தும் சீனப்பொருட்கள்தான். இவை அங்கு பெரிதும் பிரபலமாக விற்றுத்தீர்ந்தவை. அதன் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.



Image result for dji osmo action


DJI Osmo Action

முன்புறமும், பின்புறமும் 4கே தரத்தில் வீடியோ எடுக்க இந்த கேமரா உதவுகிறது. அருவி வீழ்வது, சாலையில் போக்குவரத்து செல்வது போன்ற நடைபெறும் நிகழ்ச்சிகளை படம்பிடிக்க இந்த கேமரா சிறப்பானது. 11 மீட்டர் அளவுக்கு நீரில் தாக்குப்பிடிக்கிற வாட்டர் ப்ரூப் இதன் பெரும்பலம். திகுதிகுக்கிற லைவ் காட்சிகளுக்கு இந்த கேமரா பிரமாதமான காட்சிகளை அளிக்கிறது. 


ONEMIX 3


லெனோவா போல திரையை மடித்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கென்று இதில் டைப் செய்து ஜெயமோகனை மிஞ்சலாம் என நினைக்காதீர்கள். அப்படி வித்தைகளை இதில் செய்ய முடியாது. ஆனாலும் சூப்பரான கணினி. எப்படி? இருக்கும் கணினிகளிலேயே சிறியது. எட்டாம் தலைமுறை இன்டெல் சிப், சர்பேஸ் கணினிகளை விட சிறப்பாக இயங்குகிறது. 

உங்கள் உள்ளங்கையில் எளிதாக தாங்கியபடி இதில் பணியாற்ற முடியும். விண்டோஸ் ஓஎஸ்ஸில் பிரமாதமாக வேலை செய்கிறது. எனவே, இதில் நீங்கள் மகிழ்ச்சியாக பணியாற்றலாம். 



ROBOROCK S6


ஸ்மார்ட் போன் ராஜாவான ஜியோமியின் மிஜியா பிராண்ட் பொருள். என்னவென்று தெரிகிறதா? வேக்குவம் கிளீனர். இதன் சிறப்பான செயல்பாடுகள் விற்பனையை அதிகரித்துள்ளன. உங்கள் போன் மூலமே இதனை எளிதாக இயக்க முடியும். ஜியோமி போன் நிறுவனம் என்பதிலிருந்து தன்னை சந்தையில் தக்கவைத்துக்கொள்ள மல்டிபிராண்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமாக மாற்றிக்கொள்ள தொடங்கியிருக்கிறது. 

WEEYLITE RB08P


போட்டோ எடுக்கும் இடங்களில் எல்லாம் ஸ்டூடியோவில் உள்ள விளக்குகளை எடுத்துச்செல்ல முடியாது. அதற்காக உருவானதுதான் வீலைட். இந்த ஆர்ஜிபி லைட்டுகள் உங்களின் வீடியோக்களுக்கு சிறப்பான வெளிச்சத்தை தரும். சிறிய ரகம் என்பதால் கையாளுவது எளிதாக உள்ளது. 2500 கே முதல் 8500கே வரையில் டெம்பரேச்சரை மாற்றிப் பயன்படுத்தலாம். பயன்படுத்திப் பாருங்கள். விலை அதிகம்தான். இதன் பயன்பாடு மாறும். 





தகவல் - அபாகஸ்