மனித உடல் உறுப்புகளில் கையுறை! மிரட்டிய எட் ஜீன்
அசுர குலம்
எட் ஜீன்
1950களில் எட் ஜீன் பற்றி உலகம் அறிந்தது. இவரின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து சைக்கோ என்ற நாவலை ராபர்ட் பிலோச் என்பவர் எழுதினார். இதைத்தான் ஹிட்சாக் சைக்கோ என்ற பெயரில் படமாக்கினார்.
ஜீன், தன் இறந்துபோன அம்மாவை அப்படியே பாடம் பண்ணி வைத்திருந்தார். இன்னும் பல பகீர்களை அவரது வீட்டில் போலீசார் பார்த்தாக கூறுகிறார்கள். அவை என்னவென்று பார்ப்போம்.
ஜீனை போலீசார் வளைத்து பிடித்தபோது, அவர் வைத்திருந்த பொருட்களை வித்தியாசமாக பார்த்தனர். அதில் ஓர் வித்தியாசம் தெரிந்தது. கையுறைகள், நாற்காலிகள், விளக்கு மூடிகள் என அனைத்தும் மனிதர்களின் உடல் உறுப்புகளாலேயே செய்தவை. பின்னே கொன்ற மனிதர்களை புதைத்தால்தானே நாய்களை வைத்து கண்டுபிடிப்பீர்கள்?
இந்த குணத்திற்கு பின்னால் ஒளிந்திருப்பது ஜீனின் இளமைப்பருவ குளறுபடிகள்தான்.
1906ஆம்ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் தேதி அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் பிறந்தவர், ஜீன். ஜார்ஜ் - அகஸ்டா என்ற இவரது தந்தையும் தாயும் எப்படி திருமணம் செய்தார்களோ? எந்த விஷயத்திலும் பொருந்தாத ஜோடி. எப்போதும் ஸ்காட்சும் கையுமாக இருப்பவர் அப்பா என்றால், மெழுகுவர்த்தியும் பிரார்த்தனையுமாக அம்மா இருந்தார்.
அம்மா அகஸ்டா பிரார்த்தனை மட்டும் செய்யவில்லை. ஜீனை தீவிரமாக அதட்டி மிரட்டி திட்டி ஒடுக்கிக்கொண்டே இருந்தார். இவை அவரை மனதளவில் முடக்கின. ஆனால் இந்த விஷயம் அவருடைய அம்மாவின் புத்திக்கு உரைக்கவில்லை. ஆனால் உலகம் விரைவிலேயே அறிந்துகொண்டது. ஜீனின் ஒன்பது வயதில் அவரின் குடும்பத்தை அம்மா அகஸ்டா பிளெயன்லேண் ட் என்ற பண்ணை நிலத்திற்கு மாற்றினார். பள்ளிக்கு செல்வது வீட்டுக்கு வருவது தவிர்த்து ஜீனுக்கு வேறு எதுவும் தெரியாது.
அம்மாவுடன் தனியாக வசிக்கத்தொடங்கியவருக்கு சகோதரரும் உதவினார். இருவரும் சேர்ந்து பல்வேறு வேலைகள் பார்த்தனர். அம்மாவுக்கு காசு கொடுத்து சோறு போட்டு காப்பாற்ற வேண்டும் என்பதுதான் நோக்கம். அப்போது சில பணிகளுக்காக புற்களுக்கு தீ வைத்தார் ஜீனின் சகோதரர். நெருப்பு வேகமாக வந்து அவரை சூழ, ஜீன் தப்பிவிட்டார். ஹென்றியின் ஆயுள் அன்றோடு முடிந்தது
இரண்டு கொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டார் ஜீன். இக்கொலைகளை செய்யும்போது, அவர் ஜூனியர் விகடன் , நக்கீரன் போன்ற இதழ்களை படித்துவந்தார். அவற்றில் நாஜி கொடுமைகள் பிரசுரமாகி இருந்தன. தான் கொன்றவர்களின் உடல்களை வீட்டின் பின்புறத்தில் புதைத்திருந்தார். இறந்த உடல்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது அவரது வினோத பழக்கமாக இருந்தது.
இக்கொலையை ஜீன் செய்தார் என்ற கூற்றும் உள்ளது. பெர்னிஸ் வார்டன் என்ற ஹார்ட்வேர் கடை நடத்திய பெண் திடீரென காணாமல் போனார். அவரின் கடையில் அவரைத் தாக்கி இழுத்துச்சென்ற அடையாளங்கள் இருந்தன. அவரது மகன் ஜீன்தான் இதற்கு காரணம் என நம்பி போலீசில் புகார் சொன்னார். போலீஸ் வந்து ஆராய்ந்தபோதுதான் ஜீன் தன் வீட்டிலுள்ள பொருட்களை மனித உறுப்புகளை வெட்டி எடுத்து செய்து வந்தார் என கண்டுபிடித்தனர். பெண்களின் மார்பக காம்புகளால் செய்த பெல்ட், எலும்புகளை வெட்டி எடுத்து கரண்டிகள், ஸ்பூன்கள் என செய்திருந்தார் ஜீன். பின், போலீஸ் வழக்குத் தொடர்ந்தது. விசாரணை என்ன என்று புரிந்துகொள்ளவே ஜீனுக்கு ஆறு ஆண்டுகள் மனநல மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டது. பின்னர் சிறை தண்டனை அளிக்கப்படும் முன்னரே 1984ஆம்ஆண்டு ஜூலை 26 அன்று புற்றுநோயால் இறந்துபோனார் ஜீன்.
நன்றி - ஆல்தட் இன்ட்ரஸ்டிங், விக்கீப்பீடியா
கில்லர்ஸ் புக்.