பாகிஸ்தான் ராணுவம் பெண்களுக்கு இழைத்த அநீதி! - நீதி கேட்கும் ஆவணப்படம்!



Image result for rising silence book




போரின் கொடுமை நினைத்துப் பார்க்க முடியாதது

1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக நடந்த போர் அங்கு பெரும் சோகங்களையும், வேதனைகளையும் ஏற்படுத்தியது. காரணம், இந்த பிரிவினைக்காக அங்கு ஏராளமான உயிர்பலிகள், வல்லுறவுகள் நடைபெற்றன. இதுபற்றி எழுத்தாளர் லெஸ்ஸா காசி ஆவணப்படம் எடுத்துள்ளார். இவர் வங்கதேசத்தில் பிறந்து வளர்ந்து இங்கிலாந்து நாட்டிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். அவரிடம் அவரின் ஆவணப்படமான ரைசிங் சைலன்ஸ் பற்றி பேசினோம்.

இந்த ஆவணப்படும் தனிப்பட்ட விதத்தில் உங்களுக்கு வாழ்க்கை தொடர்பானது. எப்படி இந்த மையத்தை ஆவணப்படமாக எடுக்கவேண்டும்  என்று தோன்றியது?

என்னுடைய தந்தை விடுதலைப் போராட்ட வீரர். அவர் விடுதலையில் ஈடுபட்ட பிரங்கானா என்ற பெண்களைப் பற்றிய கதைகளை கூறுவார். அவர்கள் விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்து சுதந்திரத்தைப் பெற்றுத் தந்ததாக கூறுவார். எனக்கு அந்த சிறுவயதில் அவர்களைப் பார்த்தபோதும், அவர்களின் முகங்களை நினைவுகொள்ள முடியவில்லை. பின்னர் அவர்களை தேடியபோது பலரும் காற்றில் கற்பூரம் போல மறைந்துவிட்டனர். காரணம், அப்போது வங்கதேசத்தை உருவாக்கிய தேசத்தந்தையான முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டிருந்தார். பிரங்கானா என்ற பெண்களை என்னால் மறக்கவே முடியவில்லை. அவர்கள் யாராக இருந்திருக்கலாம் என்று யோசித்தபடியே இருந்தேன். அக்காவாக, அம்மாவாக, சகோதரியாக என்று நினைத்து அவர்களுக்காகவே நான் இந்த ஆவணப்படத்தை உருவாக்கினேன்.


Image result for rising silence book




1971ஆம் ஆண்டு என்ன மாதிரியான சம்பவங்கள் நேர்ந்தன?
முஜிபுர் ரஹ்மான் மட்டும் அன்று கொல்லப்படவில்லை.அவரோடு ஏறத்தாழ அவரது குடும்பமும் படுகொலை செய்யப்பட்டது. அடுத்த அநீதியாக பாகிஸ்தான் ராணுவம், மறுவாழ்வு மையங்களை உடைத்தெறிந்து அங்குள்ள பெண்களை பிடித்து அறைகளில் அடைத்தனர். பின்பு அவர்களைப் பற்றிய ஆவணங்களை தீயிட்டு எரித்தனர். அதன்பின்னர் சொல்லவே முடியாத பெரும் கோரமான வல்லுறவுகளை ராணுவம் நடத்தியது. படுகொலைகளையும்தான்.

இதுபற்றி மருத்துவர் ஜியோஃப்ரி டேவிஸ் கூறும்போது, 2 லட்சம் பேர்களுக்கும் மேல் கருக்கலைப்பு செய்ததாக கூறினார்.
கலகம், ராணுவப்புரட்சி என்று நடந்த இந்த பூமியில் நாம் கவனிக்காத, அக்கறை காட்டாத ரத்தமும் கண்ணீரும் கலந்த பல்வேறு கதைகள் உண்டு. அதைத்தான் நான் உருவாக்க மெனக்கெட்டிருக்கிறேன்.

இதுபோல வல்லுறவு செய்யப்பட்ட பெண்களுக்கு வங்கதேச அரசு ஏதாவது உதவிகளை வழங்கியுள்ளதா?

பொதுவாக இதுபோல வல்லுறவுகளுக்கு உள்ளான பெண்களுக்கு எந்த உதவிகளையும் அரசு வழங்குவதில்லை. 2015ஆம்ஆண்டு வங்கதேச அரசு அப்பெண்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை சுதந்திரப் போராட்ட வீர ர்களாக பெருமைப்படுத்தி உதவித்தொகையை வழங்கியது.

நன்றி – டைம்ஸ் – நவம்பர் 29, 19
அவ்ஜித் கோஷ்