இடுகைகள்

குரு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எல்ஐசி முகவரின் ஆன்மிகத்தேடல் பயணம் - வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்

படம்
  வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்  கிழக்கு பதிப்பகம்  நாவல்  சந்தானம் என்ற எல்ஐசி ஏஜெண்ட், திருவண்ணாமலையில் கணபதி என்பவரைச் சந்திக்கிறார். அதன் வழியாக வேதமூர்த்தி என்ற சாமியாரைப் பற்றி அறிவதோடு அவரது சீடர்களையும் சென்று சந்திக்க செல்கிறார். இதன் வழியாக அவர் பெறும் அனுபவங்கள்தான் கதை.  ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத ஒரு சம்பவம், அவர்களது சாதாரண வாழ்க்கையை அசாதாரணமாக்குகிறது. மாதச்சம்பள வேலைக்குப் போகவேண்டும் என நினைத்த பால்பாண்டி, சிலம்பம் கற்றுக்கொடுப்பவராக மாறுகிறார். கண்பார்வை இல்லாத ஹரி, குருவின் தீட்சை பெற்று அடுத்த குருவாக மாறுகிறார். இறந்துபோன அம்மாவின் நினைவில் இருந்து மீளாத வைரவன், நகரத்தார் விடுதிக்கு பொறுப்பாளராகிறார். மடத்தின் விடுதியில் வளர்ந்த கோவர்த்தனம் பத்து ஆண்டுகள் அலைந்து திரிந்தபிறகு, ஆதரவற்ற குழந்தைகளை பராமரித்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். மகன் அகாலமாக இறந்துபோக, தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து அதன் வழியாக துக்கத்திலிருந்து மீள முயல்கிறார் கட்டுமானக் கலைஞர் சிவராமன். ஒட்டுமொத்த குடும்பமே தற்கொலை செய்து இறக்க, மடத்தில் துறவியாகி வாழ்கி

வசை, அவதூறு, சதி, துரோகங்களைக் கடந்து வெல்லும் தற்காப்புக் கலை தலைவனின் நெகிழ்ச்சியான கதை!

படம்
  கிங் ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ்  காமிக்ஸ் 380 அத்தியாயங்கள்..... நிறைவடையவில்லை ரீட்மங்காபேட்.காம் யேசென் என்பவன், ஸென்குயு இனக்குழுவைச் சேர்ந்தவன். தற்காப்புக்கலையில் சிறந்தவனாக இருப்பவனை அங்குள்ள சிலர் சதி செய்து அவன் தற்காப்புக்கலையை அழிக்கிறார்கள். மேலும் அவனை இனக்குழுவில் இருந்து நீக்குகிறார்கள். அவனது காதலிக்கு சுவாங்க்லிங் எனும் அழிவற்ற உடல் இருப்பது தெரிய வருகிறது. இதனால் அவளும் அவனை ஊதாசீனப்படுத்துகிறாள். காதலை கைவிடுகிறாள். அவனை அவமானப்படுத்த காத்திருந்தவர்கள் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவனுக்கு பெற்றோரோ, உதவி செய்ய எந்த ஆதரவான சக்தியும் இல்லாத சூழ்நிலையில் காட்டு வழியே நடந்துசெல்கிறான். அப்போதுதான் விண்ணிலிருந்து விண்கல் ஒன்று காட்டில் வந்து விழுகிறது. அதிலிருந்து நெருப்பு அணையாமல் எரிகிறது. அவன் அதன் அருகில் சென்று நின்று, நெருப்பு ஜூவாலையைத் தொட்டு பார்க்க, அந்த நெருப்பு அப்படியே அவனது உடலுக்குள் புகுந்து இழந்த தற்காப்புக்கலையை மீண்டும் கற்கும் தன்மைக்கு உடலை மாற்றுகிறது. அந்த சக்தி ஏற்படுத்தும் அதிர்ச்சியால் மயக்குறுபவனை வயதானவர், அவரது பேரன் ஆகியோர் காப

குருநாதரின் ஸ்பீடையும், ஸ்டாமினாவையும் நெருங்கவோ, மேட்ச் செய்யவோ முடியாது! கடிதங்கள் - கதிரவன்

படம்
  எனது ஆசான் திரு. கே.என்.சிவராமன் 21.10.2021 அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அப்பா, அம்மாவின் நலனை விசாரித்ததாக சொல்லுங்கள். நவ.1 இல் அரசு சொன்னபடி பள்ளி தொடங்கினால், எங்கள் மாணவர் இதழ் 15ஆம் தேதி தொடங்கும் என நினைக்கிறேன்.  பிரன்ட்லைன் இதழ்களுக்கு கட்டிய சந்தா இன்னும் இரு இதழ்களோடு முடிவுக்கு வருகிறது. இதில் வரும் கட்டுரைகள் படிக்க நிறைய தகவல்களோடு உள்ளன. எல்லாமே ஆழமாக கருத்துகளை கொண்டவரை. படிக்க சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இதழ் இதுவே. டி.கே. ராஜலட்சுமி என்ற கட்டுரையாளர் எனக்கு பிடித்தமானவர். எழுதும் கட்டுரைகளில் தனது மனிதநேயம், அக்கறையை எப்படியாவது சொல்லிவிடுகிறார்.  இப்போது ரெடிமேட் சட்டைதான் அணிகிறேன். ஃபேஷன் கம்போர்ட் என்ற கடையின் உடைகள் எனக்கு பொருத்தமாக இருக்கின்றன. அங்கு தான் 1450 ரூபாய்க்கு சட்டை, பேண்ட் வாங்கினேன்.  காலை எட்டு மணிக்கு ஆபீஸ் போய்விடுகிறேன். இதனை ஆசான் கேஎன்எஸ்சிடமிருந்து கற்றது. இப்போது ஆசான் என்னையும் மிஞ்சி ஏழுமணிக்கு ஆபீசுக்கு வந்துவிடுகிறார். இப்போதும் அவரின் உழைப்பு ஒரு அடி முன்னாடி தான் இருக்கிறது. வேகத்த

மாணவர்களுக்கு வழிகாட்டும் அரசுப்பள்ளி ஆசிரியர்!

படம்
  கல்வியறிவின்மையை தீர்க்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்! உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த டேராடூனில், கல்வியின்மையை எதிர்த்து போராடி வருகிறார்  அரசுப்பள்ளி ஆசிரியர், ராஜீவ் பந்திரி. மாணவர்களுக்கு நேரடி வகுப்பிலும், ஆன்லைனிலும் பாடங்களைக் கற்பித்து வருகிறார்.  பவுரி மாவட்டத்தில் உள்ள நௌகான்கல் கிராமத்தில் பிறந்தவர், ராஜீவ். அரசுப்பள்ளி ஆசிரியராக  30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். பாடங்களில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வகுப்பெடுத்து வருகிறார். 2009ஆம் ஆண்டு முதல் டேராடூன் மாவட்டத்தில் கல்ஜ்வாடியில் உள்ள பள்ளியில் முதல்வராக பணியாற்றிவருகிறார்.  இன்றுவரையில் மாணவர்களுக்கு இலவசமாக வகுப்புகளை எடுத்து வருகிறார்.  பணிநேரம் முடிந்ததும், ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பிக்கிறார். சில மாணவர்களுக்கு வீடுகளுக்கு சென்றும் சிறப்பு வகுப்புகளை நடத்திவருகிறார். பொருளாதாரீதியாக கஷ்டப்படும் மாணவர்களுக்கு நிதியுதவி செய்தும் வருகிறார்.  “நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது, வீட்டில் பொருளாதாரப் பிரச்னை இருந்தது. என்னுடைய மாணவர்களின் பிரச்னைகளை என்னால் தீர்க்க முடிந்தால், அவர்கள்

ஆசிரியரிடம் நான் சொன்ன பொய் - அனுபம்கேரின் குரு மரியாதை!

படம்
பாஜக ஆதரவாளர், படுகொலைகளை ஆதரிப்பவர்  என பல தூற்றுதல்கள் இருந்தாலும் நாடகம், சினிமா கதாபாத்திர விஷயங்களில் அனுபம் கேரின் திறமையை யாரும் மறுக்க முடியாது. அப்படி கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிப்பவர், டெல்லி நாடகப்பள்ளியின் முன்னாள் மாணவர். சிம்லாவைச் சேர்ந்த சிறுவன் உலகப் புகழ்பெற்ற திரை நட்சத்திரமாக உருவாகிறார் என்பது புதுமையான ஒன்றுதானே. பத்து வயதில் எனது வாழ்க்கையை எழுதி வைக்கத் தொடங்கினேன். எனது வாழ்க்கையை நூல் வடிவில் மக்களுக்கு வழங்கவே விரும்பினேன் என்று கூறியுள்ளார். 1955 ஆம் ஆண்டு பிறந்த அனுபம் கேர், இன்று 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்பிற்கு பரிசாக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் அண்மையில் தனது வாழ்க்கையை நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். இதில் தேசிய நாடகப்பள்ளி காலத்தில் தனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் பற்றி குறிப்பிட்டுள்ளார். இப்பகுதி பிரமாதமாக எழுதப்பட்டுள்ளது. நாடகம் பற்றிய ப்ராஜெக்ட். ஆசிரியரிடம் கொடுக்க வேண்டிய நேரம். ஆனால் என்ன காரணத்தாலோ அனுபமால் எழுத முடியாமல் போய்விடுகிறது. ஆனால் குறிப்பிட்ட வகுப்பிற்கான ஆசிரியர் உறுதியாக சொல்லிவ