இடுகைகள்

உளவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன்னை எதிர்ப்பவர்களை பல்வேறு நூதன வழிகளில் ரஷ்யா தண்டிக்கிறது? - என்னென்ன வழிகள் என அறிவோமா?

படம்
  எதிர்த்து நின்றால் மரணம் நிச்சயம் ரஷ்யா எதிரிகளை தாக்கும் விதம் என்பது மாறுபட்டது. நோவிசோக், பொலோனியம் என பல்வேறு வேதிப்பொருட்களை பயன்படுத்தி தன்னை விமர்சிக்கும் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்களை கொல்வது ரஷ்ய அரசின் வழக்கம். அதாவது இருபத்து மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவை ஆண்டு வரும் ‘வலிமையான தலைவர்’ புதின் அணுகுமுறை இதுதான். அண்மையில் ரஷ்யாவின் ராணுவ கூலிப்படை தலைவர் யெவ்ஜெனி ஜெட் விமானத்தில் வானில் இருக்கும்போது கொல்லப்பட்டார். இந்த டெக்னிக்கை புதிதாக கூட பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். இதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்டால், கிரெம்ளினில் எந்த பதிலும் வராது. அவையெல்லாம் வதந்தி, உண்மையல்ல என்று கூறுவார்கள். ஆனால் ரஷ்யாவில் உள்நாட்டில் நடக்கும் விஷயங்கள், சொல்பவை   எல்லாமே அரசியல் ரீதியாக அந்த அரசின் கூற்றுக்கு மாறாக இருக்கின்றன. அரசியல்வாதிகளுக்கு விஷம் வைத்துக்கொல்வது சோவியத் காலம்தொட்டே நடந்து வருகிறது. ரஷ்ய விஞ்ஞானிகளின் விஷயம் என்னவென்றால், வாசனை இல்லாத நிறமில்லாத விஷத்தை கண்டுபிடித்து அதை மேம்படுத்தி வருகிறார்கள். இதனால் ஒருவரை எளிதாக கொல்ல முடியும். யார் கொன்

ரஷ்யாவின் கிரெம்ளினுக்கு பணிந்து மக்களைக் காட்டிக்கொடுக்கும் டெலிகிராம் ஆப்!

படம்
  டெலிகிராம் ஆப் - ரஷ்யா அரசின் உறவு டெலிகிராமை வளைக்கும் ரஷ்யா ரஷ்யாவுக்கு பணிந்துபோகும் டெலிகிராம் நிறுவனம்! டெலிகிராம் என்றில்லை. எந்த ஒரு டெக் நிறுவனமும் குறிப்பிட்ட நிலப்பரப்பிலுள்ள அரசுகளின் விருப்பத்திற்கு, விதிகளுக்கு பணிய வில்லை என்றால் சுதந்திரமாக செயல்பட முடியாது. அதை தடை செய்வார்கள். வருமான இழப்பை டெக் நிறுவனத்தை நிலைகுலைய வைக்கும். இந்த நிலையில் நிறுவனம் அரசுடன் பரஸ்பர சகாய ஒப்பந்தத்திற்கு வந்தே ஆக வேண்டும். டெலிகிராம் கூட பரவாயில்லை. நெருக்கடி கொடுத்து அதை கீழே வீழ்த்தினார்கள். ஆனால், மெட்டாவின் குறுஞ்செய்தி, சமூக வலைத்தள நிறுவனங்கள் உலகமெங்கும் சர்வாதிகார அரசுகளிடம் மண்டியிட்டு காசு வாங்கிக்கொண்டு இயங்கி வருகிறார்கள். மெட்டா அதிக பயனர்களைக் கொண்டுள்ள நாடுகளில் கலவரம், போராட்டம், இனவெறி என அமைதி இல்லாத நிலையே நிலவுகிறது. இதை எந்த ஊடகங்களும் வெளிப்படையாக பேச மாட்டார்கள்.   ரஷ்யாவில் உள்ள அரசியல் சமநிலை குலைவைப் பற்றிய செய்திகளை நாளிதழில் படித்திருப்பீர்கள். டிவி சேனல்களில் செய்தித்தொகுப்புகளையும் பார்த்திருப்பீர்கள். அங்குள்ள தனியார் கூ லிப்படை ராணுவமே, அரசின் நகரங்க

மணம் செய்துகொண்டு தனித்தனியாக வாழ்ந்து உளவு பார்த்த ரஷ்ய உளவாளிகள்!

படம்
  உலக நாடுகளில் சட்டவிரோதமாக நுழைந்து ஒற்றறியும் ரஷ்ய உளவாளிகள்! அண்மையில் பிரேசில் நாட்டிலும், கிரேக்க நாட்டிலும் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் திடீரென காணாமல் போயுள்ளனர். இவர்களைப் பற்றி இரு நாட்டு காவல்துறையும், உளவு அமைப்பும் துப்பு துலக்கியதில் ரஷ்ய நாட்டின் உளவு அமைப்பால் பயிற்சி வழங்கப்பட்டவர்கள் எனவும், ஆண், பெண் என இருவருமே மணமாகி பிரிந்து தனித்தனி நாடுகளில் வாழ்ந்து வந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. ஜெரார்ட் டேனியல் காம்போஸ் விட்டிச், இவர் பிரேசில் நாட்டில் இருந்து மலேசியாவிற்கு சென்றார். போகும் வரை தனது பெண் தோழிக்கு குறுஞ்செய்தி அனுப்பியவர், திடீரென மாயமானார். அவரைப் பற்றிய எந்த செய்தியும் தெரியவில்லை. இதனால், பதட்டமான பெண்தோழி, விட்டிச் பற்றி காணவில்லை என்று புகார் கொடுத்து தேடத் தொடங்கினார். காவல்துறையோடு, சமூக வலைத்தளத்திலும் தேடுதல் நடைபெற்றது. ஆஸ்திரிய – பிரேசிலிய பாரம்பரியத்தைக் கொண்ட விட்டிச், 3 டி பிரிண்டிங் நிறுவனத்தை நடத்தி வந்தார். பிரேசிலிய ராணுவத்திற்கு பல்வேறு கருவிகளை செய்து கொடுத்து ஆயுத வடிவமைப்பில் உதவி வந்தார். இவரது பெண்தோழி, பிரேசில் அரசின் விவ

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு காரணம் என்ன?

படம்
  இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு அமெரிக்க வர்த்தக மையம் தாக்குதல் மட்டுமே காரணம் அல்ல. அதற்கு முன்னரே இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு இடையே முன்விரோதம் , பகை, வன்மம் என எல்லாமே உண்டு. அதனை ஊக்கப்படுத்தியது தாக்குதல் நடத்திய பத்தொன்பது தீவிரவாதிகள் என்று கூறலாம்.  கிறித்துவம், இஸ்லாம் என்ற இரு மதங்களுமே நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள். இதில் இஸ்லாமைப் பொறுத்தவரை அவர்கள் பிறரிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இதனை இலக்கியவாதிகள் கூட பயன்படுத்தி காபிர்களின் கதைகள் என எழுதுகிறார்கள். இதன் வழியாக அவர்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரியவில்லை.  புர்கா அணிவது, குல்லா அணிவது என தங்களை தனித்தே காட்டிக்கொள்ளும் இஸ்லாமியர்கள் அனைத்து நாடுகளிலும் இணக்கமான தன்மை கொண்டவர்களாக இல்லை. அமெரிக்காவில் இந்த வேறுபாடுகளை துல்லியமாக அடையாளம் காண்கிறார்கள். முஸ்லீம்களின் புனித நூலில் போர் என்பதை இயல்பானதாக ஏற்றுக்கொள்வதால், வன்முறையான குணம் கொண்டவர்கள் என முஸ்லீம்களை அடையாளப்படுத்த தொடங்கினர். 2010ஆம்ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அமெரிக்கர்களில் பாதிப்பேர் முஸ்

போராட்டக்காரர்களை உளவுபார்க்கும் பீகாசஸ்

படம்
  இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், போராட்டக்காரர்கள் என பல்வேறு நபர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதாக பீகாசஸ் எனும் ஸ்பைவேரின் மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.  இந்த ஸ்பைவேரை இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான என்எஸ்ஓ தயாரித்துள்ளது.  பல்வேறு நாட்டு அரசுகள் இந்த ஸ்பைவேரை தீவிரவாத த்தை தடுக்க பயன்படுத்துகின்றன என்று என்எஸ்ஓ கூறியுள்ளது.  2019ஆம் ஆண்டு வாட்ஸ் அப் நிறுவனம், தனது பயனர்கள் மட்டுமன்றி ஃபேஸ்புக் பயனர்களும் பீகாசஸ் ஸ்பைவேரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று  கூறியது.  எப்படி இன்ஸ்டால் செய்கிறார்கள்? அதுவும் புதுமையான முறையில்தான். எளிமையாக மிஸ்டுகால் ஒன்றைக் கொடுத்து அதன் வழியாக ஸ்பைவேரை ஆப்பிள், ஆண்ட்ராய்டு போன்களில் இறக்குகின்றனர். மிஸ்டுகாலுக்கு ஒருவர் தொடர்பு கொண்டாலும் சரி இல்லையென்றாலும் சரி பீகாசஸ் உள்ளே வந்துவிடும்.  பீகாசஸ் போனில் உள்ளதே அதனை பயன்படுத்துபவர்களுக்கு தெரியாது என்பது இதன் சிறப்பம்சம். தொடர்புகள், குறுஞ்செய்திகள், கேமரா, மைக்ரோபோன் என அனைத்து தகவல்களையும் பதிவு செய்து தனது முதலாளிக்கு விசுவாசமாக ஸ்பைவேர் அனுப்பிவிடுகிறது.  மூலம

பயனரின் தகவல்களை உளவறியும் ஃபெவிகான்ஸ்! - யார் தடுப்பது?

படம்
  உளவு பார்க்கும் ஃபெவிகான்ஸ்!  இணையதளங்களில் பயன்படும் ஃபெவிகான்ஸ் (Favicons) மூலம் பயனர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்  என்று கண்டறியப்பட்டுள்ளது.  இணைய உலாவியில் பல்வேறு வலைத்தள டேப்களை திறந்து வைத்திருப்பீர்கள். அதில் விக்கிப்பீடியாவை மட்டும் எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? கிளிக் செய்யாமலேயே அறிந்துகொள்ளலாம். காரணம், அந்த டேப்பில் விக்கிப்பீடியா லோகோ இருக்கும். இப்படி வலைத்தளங்களை அடையாளம் காட்டும் சிறிய ஐகான்களுக்குத்தான் ஃபெவிகான் என்று பெயர்.  இப்படி திறந்து வைக்கும் வலைத்தளங்களில் உள்ள ஃபெவிகான்ஸ்கள், பயனரின் இணைய நடவடிக்கையைக் கண்காணிக்கிறது என இலினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கட்டுரை குற்றம்சாட்டியுள்ளது. ஒருவர் விபிஎன் அல்லது இன்காக்னிட்டோ வசதியை பயன்படுத்தினாலும் கூட இதனை தடுக்க முடியாது. இம்முறைக்கு சூப்பர் குக்கி என்று பெயர் சூட்டியுள்ளார் ஜெர்மனியைச் சேர்ந்த கணினி வல்லுநர் ஜோனாஸ் ஸ்ட்ரெகில். ”இம்முறையில் ஒருவரின் வலைத்தள வருகை கண்காணிக்கப்படுவதோடு, இதனை பிற குக்கிகளைப் போல அழிக்க முடியாது” என்றார்.  தற்காலிக நினைவகத்தை அழித்தாலோ, ஆட்பிளாக்கர்களைப் பயன்படுத்தினால

நினைவுகளைத் தேடும் குற்றவாளி! - ரத்தப்படலம் காமிக்ஸ் அதிரடி!

படம்
ரத்தப்படலம்! 1-18 முத்து காமிக்ஸ் ரூ. 200 அமெரிக்க அதிபர் பதவிக்கு யார் வருவது எனும் போட்டியில் நடக்கும் பல்வேறு துரோகங்கள், கொலைகள் ஆகியவற்றை ஒட்டி உருவான கதாபாத்திரம்தான் பதிமூன்று. முதல் காட்சியில் தலையில் சுடப்பட்டு வயதான பெண்மணியால் காப்பாற்றப்படுபவர்தான் நாயகன். தான் யார் என்று அறிய முயற்சிக்கும்போது, அவர் யார் என்ற உண்மைகள் தெரிய வருகின்றன. இவரைக் கொல்ல சிஐஏ, எஃப்பிஐ, மங்கூஸ் எனும் கூலிக்கொலைகாரன் ஆகியோர் பலரும் தேடி வருகின்றனர். அதேசமயம், பதிமூன்று என்பவருக்கும் சிஐஏ தலைவரான ஜியோர்டினோ என்பவருக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. அவர் பதிமூன்றை ஏதோ ஒரு வழியில் துரத்திக்கொண்டே இருக்கிறார். அந்த உறவு என்ன? பதிமூன்று என தோளில் அச்சிடப்பட்டிருப்பதன் பொருள், அவர் மனைவியாக சொல்லப்படும் கிம் என்னவானாள், வாலி ஷெரிடன் கொலைக்கு காரணம் என அனைத்து மர்மங்களும் பதினெட்டு அத்தியாயங்களில் விடுவிக்கப்படுகிறது. எந்த அத்தியாயங்களையும் படிக்காமல் உங்களால் இறுதிப்பகுதியை எட்ட முடியாது. எனவே எடுத்தவுடனே கிளைமேக்ஸை படிக்க முயற்சிக்காதீர்கள். சிலந்திவலை போன்ற காமிக்ஸ் இது. எந்த இட

ஜனநாயகத்தை மலர வைக்கிறதா டெலிகிராம்?

படம்
இணையம் சார்ந்த கட்டுப்பாடுகளை அமெரிக்க நிறுவனங்கள் மெல்ல ஏற்படுத்தி வருகின்றன. கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிலுக்காக அரசியல்வாதிகளுக்கு ஏற்ப பயனர்களின் பதிவுகளை அழிப்பது, நீக்குவது போன்ற செயற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இதனால் பலரும் ஃபேஸ்புக்கின் வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களிலிருந்து விலகிவருகின்றனர். திறமூல மென்பொருள் ஆப்பான டெலிகிராமில் பதிலுக்கு இணைகின்றனர். டெலிகிராம் ரஷ்யாவைச் சேர்ந்த சகோதரர்கள் நிகோலாய், பாவ்லோவ் என்ற இருவரால் 2013 இல் தொடங்கப்பட்டது. என்ன சிறப்பு இதில் இருக்கிறது? நீங்கள் தரவிறக்கினால் மட்டுமே படங்கள் உங்கள் போனில் இறங்கும் இல்லையெனில் க்ளவுட் கம்ப்யூட்டரில் மட்டுமே இருக்கும். இதனால் வாட்ஸ்அப் இயங்கும்போது ஏற்படும் மூச்சுத்திணறல் நம் போனுக்கு ஏற்படாது. குறைந்த ரேம் கொண்ட போனிலும் டெலிகிராம் சிறப்பாக இயங்கும். இதில் எந்த குழுவிலும் நீங்கள் இணையலாம். எந்த அட்மினும் உங்களை கேள்வி கேட்க முடியாது. இல்லையென்றால் அக்குழுவில் உள்ள விஷயங்களை தரவிறக்கிக்கொள்ள முடியும். சரி விடுங்கள். இதனால் நடைமுறை பயன் என்ன? ஜனநாய

பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் தாக்குதல்!- என்ன செய்யலாம்?

படம்
ட்ரோன்கள் அண்மையில் பாகிஸ்தானிலிருந்து இயக்கப்பட்டு பஞ்சாப் அருகே பறந்த ட்ரோன் விமானங்களை ராணுவம் கண்டுபிடித்து அழித்தது. ஆளில்லாத ட்ரோன் விமானங்கள் மூலம் எளிதாக எதிரிநாடுகளை உளவு பார்க்க முடியும். குறிப்பிட்ட ஆட்களை குறிவைத்து தாக்கி அழிக்க முடியும். இவற்றை எப்படி செயலிழக்க வைப்பது என்பது பற்றி இந்திய ராணுவம் தற்போது பயிற்சி எடுத்து வருகிறது. ட்ரோன்களை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்று நாம் பார்ப்போம். புரோட்டோகால் இன்டர்டிக்ஷன் ட்ரோன்களை இயக்கும் தொலைத்தொடர்பு மையத்தை முடக்கி அதனை செயலிழக்க வைக்கலாம். இதனை சாத்தியமாக்குவது கடினம்தான் ஆனாலும் முயற்சிக்கலாம். சென்சார் பேஸ்டு இன்டர்டிக்ஷன் ட்ரோன்களிலுள்ள சென்சார்களை ஹேக் செய்து அதனை தரையிறக்குவது அல்லது செயலிழக்கச்செய்து நொறுங்கச்செய்வது. ட்ரோன்களை குறிப்பிட்ட இலக்கு நோக்கி செட் செய்து இருப்பார்கள். ஜிபிஎஸ் அமைப்பை மாற்றி வைத்துவிட்டால் போதும். ட்ரோன் தானாகவே அழிந்துவிடும். ட்ரோன்களை குறிப்பிட்ட இடத்தில் இருந்த ரேடியோ அலைகள் மூலம் இயக்கினால் நாம் அதனை தொழில்நுட்பத்தின் மூலம் மறிக்கலாம். தவறான சிக்னல்களை கொடுத்து

ஹூவெய் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு காரணம் என்ன?

கடந்த ஜனவரியில் ஹூவெய் நிறுவனத்தின் நிதித்துறை தலைவர், மெங் வாங்சூ, கனடாவில் கைது செய்யப்பட்டார். அதுமுதல் இன்றுவரை ஹூவெய் மீதான அமெரிக்காவில் தாக்குதல் தனியாக தெரிகிறது. இது இதோடு நிற்காது. ஆப்போ, விவோ, மீ ஆகிய நிறுவனங்கள் மீதும் உலகளவில் தடைகள் வரலாம். தற்போது இரண்டு நிறுவனங்களை அமெரிக்கா கறுப்பு பட்டியலில் வைத்துள்ளது. வர்த்தகப்போருக்கான முதல் படி என இதனைக் கூறலாம். இப்போது ஹூவெய், ஆண்ட்ராய்ட்டை தனக்காக மேம்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கான மார்க்கெட் தாண்டி உலகளவில் அக்கம்பெனிக்கு பெரிய சிக்கல் உள்ளது. என்விடியா, தோஷிபா, பானசோனிக் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்க தடையை ஏற்று ஹூவெய் நிறுவனத்திற்கான பொருட்களை விநியோகம் செய்வதை நிறுத்தி விட்டன. தடைகள் நீடித்தால் ஹூவெய் வெளிநாடுகளில் உள்ள கடைகளை மூடும் நிலை ஏற்படும். கூகுளின் சேவைகள் இன்றி, போனை பிறருக்கு எப்படி விற்பது. தற்போது ஹூவெய் வைத்திருப்பவர்களின் போன்களிலும் கூகுள் தன் சேவையைக் கைவிட்டால், ஹூவெய், ஹானர் ஆகிய போன்கள் பேப்பர் வெயிட்டாகத்தான் பயன்படும். ஹூவெய் தொலைத்தொடர் பு நிறுவனர் ரென் ஸெங்ஃபை, விடுதலை ராணுவத்