குணச்சித்திரம் - இரு திருடர்கள்

 



இரு திருடர்கள். 


எங்கள் தெருவில் இரு திருடர்கள் இருக்கிறார்கள். இந்த இரு திருடர்களும் ஒருவரையொருர் நன்றாக அறிவார்கள். இருவரும் பெண்கள். இவர்களின்  கணவன்மார்கள் சகோதர்கள். சொத்துக்களை தனியாக வைத்துக்கொண்டு குடித்தனம் செய்கிறார்கள். பெரிதாக இருவருக்கும் இடையே நட்பும் கிடையாது. விரோதமும் கிடையாது. பொதுவாக யாராவது ஒருவரிடம் திருட வேண்டுமென்றால் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள்.

 

முதல் திருடரைப் பார்ப்போம். இவரது கணவர் தென்னை மரம் ஏறி பிழைப்பவர். இப்போது வயதாகிவிட்டது. இவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் அப்படியே திருட்டு, கொள்ளை, மோசடி, வஞ்சகம், துரோகம் ஆகியவற்றை செய்வதில் கைதேர்ந்தவர்கள். ஐந்து பிள்ளைகள். மூன்று பெண் பிள்ளைகளில் ஒருவர் மட்டுமே அந்தளவு மோசமில்லை என்று சொல்லாம். கடைசியாக பிறந்தது ஆண் பிள்ளை. இருப்பதிலேயே ஈவு இரக்கம் இல்லாத ஈனப்பிறவி.  முதலில் மின் பொருட்கள் சார்ந்த தொழிலை கற்றவர், பிறகு காப்பீடு முகவராக மாறினார். ஏஜெண்டாக மக்களிடம் பெற்ற பணத்தை அரசு நிறுவனத்திற்கு செலுத்தவில்லை. தன்னுடைய சொந்த கணக்கில் போட்டுக்கொண்டார். பிறகு நல்ல நாள் பார்த்து ராகு எமகண்டம் இல்லாத நேரத்தில் தலைமறைவானார். இன்றுவரை அவரது வீட்டுக்கு காப்பீடு பணத்தை வாங்க முயன்று வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த முட்டாள்களுக்கு தெரியாது. அவர்களிடம் ஏமாற்றிய பணத்தை வைத்துத்தான் மாடிவீட்டை பெற்றோருக்கு கட்டிக் கொடுத்திருக்கிறார் என்று. 


தின்பது சோறா, மலமா என்றே திருட்டு அம்மணிக்கு தெரியாது. அவரது குணம் ஒன்றுதான். யார் சோறு போட்டாலும் தின்றுவிட்டு அவர்களைப் பற்றி வதந்திகளைப் பரப்பி அவர்களை இழிவுபடுத்துவது... ஒருமுறை ஒரு நிலக்கிழாரைப் பார்த்து பேசினார். பேசியபோது, உங்களுக்கு குழந்தை இல்லை. வாரிசு இல்லை. எல்லாம் அழிஞ்சு போச்சுன்னு அவன் சொன்னான் என தனக்கு சோறு போட்டு பசியாற்றிய ஒரு உறவினரைப் பற்றி குறை கூறியிருக்கிறார். அந்த நிலக்கிழாருக்கு ஒன்றும் புரியவில்லை. அவருக்கும், திருட்டு அம்மணி குறை கூறும் ஆட்களுக்கும் என்ன தொடர்பு... அவரை குறை கூறியதாக சொன்னவர் அன்று அதே சாலையில் வர, அவரிடம் நிலக்கிழார் விசாரித்திருக்கிறார். உன்னோட சொந்தக்காரி ஏன் அப்படி சொல்லுறா? அதற்கு அவர், கூப்புட்டு நேராவே கேட்டுரலாங்களே என்றதற்கு நிலக்கிழார் ஒப்புக்கொண்டார். உடனே சாலையில் சற்று தொலைவில் சென்ற திருட்டு அம்மணியை அழைத்தார். அம்மணி கலவரத்தை மனதில் உணர்ந்தாலும் அது எப்பவோ சொன்னதுங்க, இப்ப எதுக்கு? என சொல்லிவிட்டு வேகமாக சாலையில் நடந்து மறைந்தார். 


நாய் அடிமை விலங்கு. ஆனால், தின்ற சோற்றுக்கு நன்றி இருக்கும். ஆனால் சில இழிபிறவிகளுக்கு சூடு, சொரணை, வெட்கம் என ஏதும் இருக்காது. அந்த வகையில் திருட்டு அம்மணி 1யைச் சேர்க்கலாம். அம்மணி தன்னுடைய குணவிசேஷத்தை பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுக்க அவர்களின் வாழ்க்கை பெரிதாக விளங்கவில்லை. அனைவருமே மோசடி செய்து பிழைத்து வருகிறார்கள். உலகம் இதை சாமர்த்தியம் என சொல்லக்கூடும். அடுத்தவர்களின் வாழ்க்கையைக் கெடுப்பதை சாமர்த்தியம் எனக்கொண்டால், மன அமைதியைக் கெடுத்து அதில் ஒருவர் பிழைப்பதை சாமர்த்தியம், புத்திசாலித்தனம் என கூறமுடியுமா? காப்பீடு பணத்தை யார் வந்து கேட்டும் ஒரு ரூபாய் கூட கொடுத்திருப்பார் என்று கூறமுடியாது. ஆனால் தலைமறைவு மகனைப் பார்க்க பேருந்தில் ஏறி சென்று பணம் வாங்கி வந்துதான் வீடு கட்டியிருக்கிறார். தின்னும் சோறு அப்படித்தான் வந்தது. 


கல்யாணம், காதுகுத்து, பூப்பு நன்னீராட்டு விழா என எங்கு போனாலும் அங்குள்ள சமையல் பொருட்களை திருடி வந்துவிடுவது வாடிக்கை. பிறர் வீட்டில் சாப்பாட்டு நேரத்தில் போய் உட்கார்ந்து தின்று வயிறு வளர்த்த கூட்டம். இரவில் ஊர் உறங்கும்போது திருட்டு அம்மணி கால்நடைக்கு தழை அறுக்க நிலக்கிழார்களின் காடுகளுக்கு செல்வார். இதில் திருட்டு அம்மணி 2 உம் கூட பங்காளி. ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்காத திருடர்களுக்கான கருணையுணர்வு உண்டு. அதை நாம் பாராட்டியே ஆகவேண்டும். திருட்டு அம்மணி1, அம்மணி 2 என இருவருமே தொழில்முறை திருடர்கள். அதேசமயம் இருவருக்குள்ளும் யார் அதிகம் திருடி வேகமாக வீடு கட்டி முன்னேறுவது என்ற போட்டியில் தென்னந்தோப்பில் உள்ள தேங்காய், தேங்காய் மட்டை, தொட்டி, வாழைக்குலை என பலதும் திருடு போனது. திருட்டுக்கொடுத்தவர்கள் வசை பாடினாலும், கோயிலில் விழுந்தாலும் திருட்டு அம்மணி 2 கவலை கொள்ளமாட்டார். ஏனெனில் அவர் சோறு தின்பதே கோயிலில்தான். 

திருட்டு அம்மணி 1, 2 ஆகியோருக்கு இடையிலான ஒரே ஒற்றுமை, பிறரது குடும்பத்தின் அமைதியைக் கெடுத்து அதில் லாபம் பார்ப்பது. கணவன், மனைவியை பிரிப்பது, யாராவது முன்னேற முயல்கிறார்களா அதை கெடுப்பது, மணம் செய்ய முயல்கிறார்களா, அதை தடுப்பது ஆகியவற்றை செய்யக்கூடிய இழிபிறவிகள். நச்சுப் பாம்புகள். 

திருட்டு அம்மணி 2, பெரும்பாலும் வீட்டில் சோறு ஆக்குவதில்லை. சோறு என்றால் அதற்கு அரிசி வேண்டும், அதை குக்கரில் வைத்து சமைக்கவேண்டுமே? பெரும்பாலும் கோயில்களில் போடும் இலவச சோற்றுக்கு எப்போதுமே போய்விடுவார். அன்னதானம் தின்றே வளர்ந்த பெருங்கூட்டு உடம்புக்காரர். கணவர் ஒரு சோம்பேறி. கோயில் சோற்றை தின்றுவிட்டு தென்னந்தோப்பு, நிலக்கிழார் தோப்பு என அலைந்து திரிந்து தேங்காய், கால்நடை தழை என திருடியே இவரும் ஒற்றை மாடி வீட்டை கட்டிவிட்டார். திருட்டு அம்மணி 1க்கு இல்லாத ஆர்வக்கோளாறு இவருக்கு ஒன்றுண்டு. பல விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டுமென விரும்புவது. ஒருவர் தனக்கு தேவையான விஷயங்களை தெரிந்துகொள்வது சரியானது. தேவையில்லாத விஷயங்கள் எதற்கு? 


யார் வீட்டில் என்ன நடக்கிறது என பார்ப்பதே திருட்டு அம்மணி2வின் முதல் வேலை. இதற்கு அவர் பக்கெட்டில் அழுக்குத்துணியை தவணையில் துவைப்பார். அவர் வீட்டருகே குழாய், அடிபம்ப் என இருந்தாலும் தேங்காய் திருட தோப்பு ஒன்றில் ஓடும் கிணற்று நீரில் துணி துவைக்க வருவார். தினசரி, தனது உறவினர் வீடு, நிலக்கிழார்கள் வீடு, கூலி வேலை செய்யும் தாழ்த்தப்பட்டோர் வீடு என அனைத்து இடங்களுக்கும் சென்று ஊர் வம்பு பேசிவிட்டு அப்படியே அவர்களது வீடுகளில் பூண்டு, வெங்காயம் திருடிக்கொண்டு வருவது இவரது பாணி. அதை வைத்து அவர் என்ன சமைத்து என்ன சாப்பிட்டார் என்பது மர்மநாவல் திருப்பம் போல இன்றுமே விளங்காத ஒன்றாக இருக்கிறது. 


யாராவது உறவினர் வீட்டில் திருமணம் என்றால் மருமகள், மருமகன் பற்றி அறிந்துகொண்டு வர தானே சொந்த செலவில் பேருந்து ஏறிசென்று விசாரித்து வருவது எக்ஸ்ட்ரீம் லெவலாக இருக்கும். புலனாய்வில் வேறு யாரும் இவரை அடித்துக்கொள்ளவே முடியாது. தெரிந்த தகவல்களை வைத்து திருமணத்தை கெடுக்க முயல்வார். அவரது வாழ்க்கை நினைத்தது போல இல்லை. அமைத்துக்கொள்ளவும் முடியவில்லை. ஆனால், அதற்காக மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் விட்டுவிடுவதா? அட்றா பல்டி என அவர்களை கெடுத்து தனக்கு ஏற்றபடி மாற்றி சுரண்டுவதே அம்மணியின் பாணி. இவர்களை வீட்டில் புழங்க அனுமதித்த உறவினர்கள் காசு இழந்து, பொருட்களை இழந்து ஊரில் நன்மதிப்பைக் கூட வதந்திகளால், அவதூறுகளால் இழந்தனர். ஆனால், அம்மணி1, 2 என இருவருமே நச்சு பாம்புகள். பரம சௌக்கியமாக கோயில் அன்னதானம், திருட்டு தேங்காய், மட்டை, மோசடி பணம் என வாழ்ந்து வருகிறார்கள். இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்த ஆட்கள் கிடையாது. உயிருடன் இருக்கும்போதே ஒருவரின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் காட்டேறிகள். 


திருட்டு அம்மணிகள் இருவருக்கும் பேரன் பேத்திகள் வந்துவிட்டார்கள். அவர்களும் வெவ்வேறு கிளைகளை ஊர்களில் அமைத்து அங்கும் திருட்டு, மோசடி, புலனாய்வு வேலைகளை செய்துவருகிறார்கள். தொட்டுத்தொடரும் ஒரு திருட்டு பாரம்பரியம் இவ்வாறாக வளர்ந்து வருகிறது. 


ஜெயமோகனின் இரு கலைஞர்கள் சிறுகதைக்கும் இந்த கட்டுரைக்கும் எந்த தொடர்பும் இல்லை.  



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!