இடுகைகள்

நூல்வெளி2: ப்ராட்லி ஜேம்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிவின் பிரகாசம்: தயா - நூல்வெளி2 - ப்ராட்லி ஜேம்ஸ்

படம்
தயா எம்.டி.வாசுதேவன் நாயர் தமிழில்: உதயசங்கர் - சசிதரன் பாரதி புத்தகாலயம் ப.64 விலை ரூ.25 தயா எனும் இந்த நூல் சிறுவர் குறுநாவல் வகைப்பட்டது. பல்வேறு திருப்பங்களுடன் அனைவரும் வாசிக்கும் வண்ணம் இருப்பதே இந்த நூலின் சிறப்பு என்று கூறலாம். கதை : கையில் இருக்கும் பொருளின் மதிப்பு இழந்துவிடும் போதுதான் தெரியும் என்பது இதன் மையச்சரடு. பெரும் செல்வந்தர் ஒருவர் பலருக்கு தான தர்மம் செய்து வாழ்ந்து வருகிறார் என்றாலும் தனக்கு பின்னால் தன் பெயர் சொல்லும் விதம் பிள்ளை என்று நினைக்க ஒரு பிள்ளை பிறக்கிறது. அந்த சந்தோஷத்தோடு மனைவி இறந்த துக்கத்தையும் எதிர்கொண்டு சமாளித்து அவனை நல்லமுறையில் வளர்க்க முயற்சிக்கிறார். ஆனால் அவனுக்கு(மன்சூர்) என்ன முயற்சி செய்தாலும் கல்வியில் கவனம் செல்வதில்லை. இந்த நிலையில் வயது முதிர்ந்து தன் உயிர் பிரியும் வேளையில் மன்சூரின் தந்தை அவனிடம்  வாழ்வில் தான் கண்டறிந்த அனுபவ சொல் ஒன்றைச் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். இளம் வயதில் எல்லையில்லாத பணம் என்னவெல்லாம் செய்யுமோ அத்தனையும் மன்சூர் செய்கிறான். ஒரு நல்ல நாளில் அத்தனை பணமும் காலியாக குபீர் நண்பர்கள