இடுகைகள்

கூலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரு வேறு காலகட்ட கதிர் பாத்திரங்கள் சமூகத்திற்காக உழைக்கும் செயல்பாடுகள் - கதிர் 2022 - தினேஷ் பழனிவேல்

படம்
                கதிர் தினேஷ் பழனிவேல் இரண்டு வேறு காலகட்டங்களில் நடைபெறும் கதை. இரண்டிலும் கதிர் என்ற நபர் எப்படி செயல்படுகிறார். அவரது வாழ்க்கை எப்படி சமூகத்திற்கானதாக மாறுகிறது என்பதையே இயக்குநர் சொல்ல நினைத்திருக்கிறார். யாருக்காக, எதற்கு வாழ்கிறோம் என்ற கேள்விக்கு பதில் காண்பது முக்கியம். இதுதான் தந்தியில் போடுவது போல கதையின் மையம். 1970களில் நடக்கும் கதை. கோவையைச் சுற்றியுள்ள கிராமம் ஒன்றில் உழைப்புக்கு நெல் அல்லாது கூலி தர சொல்லி கம்யூனிஸ்டுகள் கூற, அதை பின்பற்றும் விவசாயிகள் என்ன விளைவுகளை சந்தித்தார்கள் என்பது பின்கதையாக விரிகிறது. தொடக்கத்தில் காவல்துறையினர் மலைப்பகுதி அருகில் கைதிகளுடன் வர, திடீரென சொல்லி வைத்தது ஜீப் நின்றுபோக அங்கே துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்கிறது. ஜீப்பின் பின்புறத்தில் ரத்தம் கசிகிறது. இதுதான் தொடக்ககாட்சி. இதற்குப் பிறகு படம் நவீன காலத்தில் நகர்கிறது. பொறியியல் படித்துவிட்டு ஊருக்குள் பீர் அடித்துவிட்டு சுற்றுபவன் கதிரவன். அவனது அப்பா, ஊருக்குள் தொழிலதிபராக இருக்கிறார். மகனைப் பார்த்து கவலைப்படுகிறார். சாதி மாறி கல்யாணம் செய்தவர்களை பிடித்து அடிக்கையில்

விவசாய கருவிகளை புதுமையாக வடிவமைத்த டெக் விவசாயி! - செல்வராஜ்

படம்
  கண்டுபிடிப்புகள் என்பது அந்நியச் சொல் அல்ல! கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, எம் செல்வராஜ். இரண்டே முக்கால் நிலத்தை வைத்து விவசாயம் செய்கிறார். விவசாயம் செய்வதோடு, அதனை எளிமையாக செய்வதற்கான பல்வேறு கருவிகளை, சாதனங்களை கண்டுபிடித்து வருகிறார். 58 வயதான செல்வராஜ் அதனால்தான் இப்பகுதியில் சாதனையாளராக பார்க்கப்பட்டு வருகிறார். மாவட்டத்தின் தலைநகரிலிருந்து 110 கி.மீ. தூரத்தில் உள்ளது சேசுராஜபுரம். இங்குதான், இவரது விவசாய நிலம் உள்ளது. தனது நிலத்தில் நிலக்கடலை, தக்காளி, சிறு தானியங்களை விளைவித்து வருகிறார்.  இளைஞராக இருக்கும்போதிலிருந்து விவசாய பணிகளை செய்துவருகிறார். அப்போதிலிருந்து பல்வேறு சோதனை முயற்சிகளை நிலத்தில் செய்து பார்த்து வந்தார். சோதனை மற்றும் தவறுகள் என ஏற்க பழகியவர், வீட்டிலுள்ள பல்வேறு இரும்பு பொருட்களை வைத்து விவசாய பொருட்களை செய்யத் தொடங்கினார். இப்படித்தான் சைக்கிள் டயர்கள், மரத்துண்டுகள், கத்திகள் ஆகியவற்றை வைத்து 500 ரூபாயில் கருவி ஒன்றை உருவாக்கினார். விதைப்பது, களை பறிப்பது ஆகியவற்றை இப்படி கருவிகளை வைத்தே செய்கிறார்.  விதைகளை விதைப்பதற்கு முன்னர் மட்டும் ரோட

உற்பத்தி துறையை மேம்படுத்த மேக் இன் இந்தியா, ஆத்மாநிர்பார் போதாது! சேட்டன் பகத்

படம்
                இந்தியாவின் உற்பத்திதுறையை மேம்படுத்த மசோதா தேவை ! சேட்டன் பகத் சில சமயங்களில் நமக்கு மக்கள் எதிர்க்கும் விஷயங்களில் கூட நல்ல விஷயங்கள் கிடைக்கும் . வகுப்பறையில் மாணவர்களுக்கு பாஸ்தா , பீட்ஸா கொடுப்பதை விட காய்ச்சலைக் குணப்படுத்த கசப்பு மாத்திரை கொடுக்கும் மருத்துவர் முக்கியமானவர் . அதேபோலத்தான் அரசு மக்களுக்கு ஏராளமான இலவச சலுகைகளை வழங்கி பின்னர் வரி ஏற்றி மக்களை வருத்துவதை விட கடினமான முடிவுகளை முன்னமே எடுத்து மக்களை காப்பது சிறப்பானது . பொதுவாக மக்கள் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி என்பதை விரும்புவதில்லை . ஆனால் , அதனை அவர்கள் செய்யும்போது கிடைக்கும் பலன்கள் அபாரமானவைதானே ! நாம் பல்லாண்டுகளாக காத்திருந்துவிட்டோம் . உற்பத்தித்துறை சார்ந்த துறையில் இந்தியா முன்னேறுவதற்கான திட்டங்கள் உருவாகவில்லை . ஆனால் இப்போது இந்திய அரசு அந்த திசையில் தனது காலடிகளை மெல்ல எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளது . மேக் இன் இந்தியா , ஆத்மாநிர்பார் ஆகிய திட்டங்களை இந்த வகையில் நாம் கூறலாம் . அரசு இத்திட்டங்களுக்காக லட்சம் கோடிகளில் நிதியை ஒதுக்கி வருகிறது . இப்படி