இடுகைகள்

செக்ஸ் சீரழிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிக் டொக் தடை என்னாகும்?

படம்
தேர்தல் பரபரப்பிலும் தமிழக அரசு, ஆபாச வீடியோக்களை பரப்புகிறது என சீன வீடியோதளமான டிக் டொக்கை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த சர்ச்சை தொடங்க சங்கடத்திற்குள்ளான கூகுள், ஆப்பிள் தங்களின் வலைத்தளங்களிலிருந்து டிக் டொக் செயலியை நீக்கியுள்ளன. 120 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த செயலியால், தமிழ்நாட்டில் இளம்பெண் ஒருவர் கடும் விமர்சனங்களைச் சந்தித்து தற்கொலை செய்துகொண்டார். நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் விரைவில் நம்பிக்கையான தீர்ப்பு வரும் என சீன நிறுவனம் பைட்டான்ஸ் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஐடி அமைச்சர் மணிகண்டன், பல்வேறு புகார்களைச் சந்தித்ததால் அதனை தடைசெய்வதாக அறிவித்துவிட்டார். உலகம் முழுக்க 500 மில்லியன் மக்கள் இந்த டிக் டொக் செயலியைப் பின்பற்றி வருகின்றனர். வெறுப்பு, செக்ஸ் தொடர்பான வீடியோக்களை தடுக்கும் பொறுப்பை டிக் டொக் ஏற்காத நிலையில் அதன் மீதான தடை இன்னும் பல நாடுகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நன்றி: குளோபல் வாய்ஸ்