இடுகைகள்

சீனத் தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓவியத்தில் இருந்து உயிர்பெற்று வரும் தொன்மை மருத்துவர்!

படம்
      காலம் கடந்து வரும் தொன்மை மருத்துவர் சீனதொடர் யூட்யூப் சீனாவைப் பொறுத்தவரை நிறைய டிவி தொடர்களை ஒன்றாக இணைத்து அதை திரைப்படம் என்று பெயரிட்டு வைத்திருக்கிறார்கள். அப்படியான டிவி தொடர்தான் இது. அனைத்து டிவி தொடர்களிலும் இரு பெயர்கள் உண்டு. ஒன்று பெரிதாக சீன எழுத்தில் இருக்கும். மற்றொன்று சிறியதாக ஆங்கிலத்தில் உள்ளது. ஆங்கில சப்டைட்டில் போட்டு உலகளவில் வியாபாரம் பார்க்கிறார்கள். இந்த தெளிவும் வியாபார புத்தியும்தான் சீனாவுக்கு பெரிய பலம். இளம்பெண், பாரம்பரிய சீன மருத்துவமனையை நடத்தி வருகிறாள். ஆனால் அவளுக்கு நோயாளிகளின் நோயைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. உண்மையாக என்ன நோய் என்று கண்டுபிடித்தாலும் அதைக்கூறாமல் ஏராளமான மருந்துகளை பரிந்துரைத்து அதையும் தனது கடைவழியாக விற்று காசு சம்பாதிக்கிறாள். இதில் அவளது தம்பியும் உடன் நிற்கிறான். நாயகியின் தந்தைக்கு மகள் முறையாக மருத்துவம் பார்ப்பதே பிடித்தமானது. அவள் தில்லாலங்கடி வேலை பார்த்து காசு சம்பாதிப்பது பிடிக்கவில்லை. இந்த சூழலில், அவர்களது வீட்டில் மாட்டியுள்ள பழைய தொன்மையான ஓவியத்தின் முன் நாயகி நின்று பிரார்த்தனை செய்கிறாள...

டாய்ச்சி கல்லை அடைவதற்காக அழிக்கப்படும் இனக்குழு!

படம்
  டாய்சீஸ் பீஸ்ட் மவுண்ட் சீன திரைப்படம் ஒன்றரை மணிநேரம் ஐக்யூயி ஆப் டாய்ச்சி இனக்குழுவில் டாய்ச்சி கல் உள்ளது. அது சக்திவாய்ந்த ஒன்று. அதை கையகப்படுத்தினால் அவர் சகலகலா வல்லவன் ஆகிவிடலாம் என நம்பிக்கை, வதந்தி எல்லாம் இருக்கிறது. இதை யாரோ பரப்பிவிட பல்வேறு சக்தி வாய்ந்த இனக்குழுக்கள் டாய்ச்சி இனக்குழுவை ஓரிரவில் தாக்கி அழிக்கின்றன. அதில் மிஞ்சுவது, நாயகனும் அவனது தோழியும்தான். இருவரும் சிறு வேலைகளை செய்து பிழைத்து வருகிறார்கள். தங்கள் குடும்பத்தை அழித்த பகைவர்களை பழிவாங்க நாயகன் நினைக்கிறான். அதற்கான காலமும் வருகிறது. உண்மையில் அவனது இனக்குழுவைக் காட்டிக்கொடுத்த துரோகி யார்? அவன் அம்மா வயிற்றில் இருந்த பிறக்கும் தருவாயில் இருந்த குழந்தை எங்கே? டாய்ச்சி கல் சக்தி வாய்ந்த ஒன்றா என்பது பற்றிய கேள்விகளுக்கு படம் விடை தருகிறது.  பழிவாங்கும் வெறி நம்மை அழித்துவிடும் என சொல்லி படத்தை சோகமான முடிவுடன் முடித்திருக்கிறார்கள். சோகம் என்று சொல்வதா, விதி என்று சொல்வதா? நாயகன், அவனுடைய காதலியைக் காப்பாற்ற முடியாமல் போக அவள் எதிரியால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துபோகிறாள். இவனும் கூட நினைவிழ...

வாளின் முனையால் விதியுடன் போரிட்டு காதலனை வெல்லும் வீராங்கனை! - லெஜெண்ட் ஆப் ஃபெய்

படம்
                      லெஜண்ட் ஆப் ஃபெய் சீன தொடர் 51 எபிசோடுகள் யூட்யூப் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட தனது முன்னோர்களுக்காக தற்காப்புக்கலையைக் கற்று துரோகிகளை வீழ்த்தும் மாபெரு்ம் வீரப்பெண்ணின் கதை . 48 ஸ்ட்ராங்ஹோல்ட் என்ற வம்சத்திற்கும் அதன் பரம எதிரியான திஷா மேனர் என்ற வம்சத்திற்கும் எப்போதும் பகை நிலவி வருகிறது . இதற்கு முக்கியமான காரணம் , திஷாவைச் சேர்ந்த ஷென் தியான்சு என்ற பழுப்பு ஓநாய் தலைவர் , சில பொக்கிஷங்களை அபகரிக்க தந்திரமாக விஷத்தைப் பயன்படுத்தி 48 ஸ்ட்ராங்ஹோல்டைச் சேர்ந்த லீ செங் , அவரது நண்பரான யின் குலத்தைச் சேர்ந்த யின் வெனலான் ஆகியோரையும் வீழ்த்துகிறார் . இதனால் அந்த வம்சங்களில் திஷாவைச் சேர்ந்த ஆட்கள் என்றாலே கத்தியை எடுத்து தொண்டையில் செருகும் ஆத்திரமும் வன்மமும் உள்ளது . இப்போது அனைத்து பொறுப்புகளும் இளைய தலைவர்களிடம் வருகிறது . 48 ஸ்ட்ராங்ஹோல்டை மூத்த தலைவர்களுடன் சேர்ந்து வழிநடத்துவது பெண் தலைவரான லீ . இவரது மகள்தான் தற்காப்புக்கலையைக் கற்கும் வேட்கை கொண்ட ஸூ ஃபெய் . பிடிவாத...

வாழ்க்கையை கணக்கு சூத்திரங்களாக அணுகும் பேராசிரியர் வாழ்க்கையில் உணர்ச்சிகளை முக்கியமாக கருதும் மனைவி வந்தால்... பர்பெக்ட் அண்ட் கேஸூவல் 2020

படம்
            பர்பெக்ட் அண்ட் கேஸூவல் சீன டிவி தொடர் 24 எபிசோடுகள் Title: Perfect and Casual Chinese Title: 完美先生和差不多小姐 / Wan Mei Xian Sheng He Cha Bu Duo Xiao Jie Broadcast Website: MGTV Broadcast Date: September 28, 2020 Air Time: Monday, Tuesday 20:00 (2 eps) on first week, Sunday-Monday subsequent weeks, 4 eps released early for VIP (See Viewing Calendar ) Genre: Romance Language: Mandarin Episodes: 24 Director: Li Shuang Origin: China உலகில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் கணித சூத்திரங்களாக பார்க்கும் புள்ளியியல் பேராசிரியர் ஒருவரும் , மனிதர்கள் மோசமானவர்களாக இருந்தாலும் அவர்களை நம்பும் கல்லூரி மாணவியும் ஒன்றாக இணைகிறார்கள் . அதற்கு பேராசிரியரின் தாத்தாவுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு முக்கியமான காரணம் , புள்ளியல் துறையில் படிக்கும் யுன் ஷூ என்ற மாணவியை , பேராசிரியர் ஸாங் ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்துகொள்கிறார் . அந்த உறவு ஒப்பந்தம் என்ற எல்லையைக் கடந்து காதல் சாலையில் பயணித்ததா , இல்லையா என்பதுதான் டிவி ...