இடுகைகள்

4ஜி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிறுவனத்தை குடும்பத்தினர் நடத்துவதை விட தகுதியுள்ளவர்கள் நடத்தவேண்டும்! - சுனில் பார்தி மிட்டல், ஏர்டெல்

படம்
                சுனில்பார்தி மிட்டல் ! ஏர்டெல் நீங்கள் டெலிகாம் சார்ந்து மட்டும்தான் செயல்படுகிறார்கள் . பிற நிறுவனங்கள் போல பல்வேறு சேவைகளை வழங்கும் எண்ணம் இல்லையா ? பிற நிறுவனங்கள் வழங்காத பல்வேறு சேவைகளை ஏர்டெல் வழங்குகிறது . நாங்கள் அமேசான் , நெட்பிளிக்ஸ் , ஜீ 5 நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு சேவைகளை வழங்குகிறோம் . எங்களிடம் ஒரிஜினல் நிகழ்ச்சிகள் கிடையாது . பெரிய ஸ்டூடியோ கிடையாது என்பது உண்மைதான் . ஒருமுறை ஏடிஅண்ட்டி டைம் வார்னர் நிறுவனங்கள் இணைந்தபோது , அதன் இயக்குநரிடம் பேசினேன் . எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்கள் வரப்போகின்றன . அப்போது நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு நிறுவனம் தேவை என்று கூறினார் . இப்படி நிறுவனங்களை இணைத்துக்கொண்டு செயல்படுவது பல்வேறு சவால்களைக் கொண்டுள்ளது . ஆனால் அந்நிறுவனம் இன்றுவரை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது . ரிலையன்ஸ் நிறுவனம் 2 ஜி தேவையில்லை என்று கூறிவருகிறதே ? நாங்கள் இப்போது 3 ஜி விவகாரத்தில் உள்ளோம் . மெல்ல மக்களும் 4 ஜி சிம் கார்டுகளை வாங்கிவருகிறார்கள் . 2 ஜியிலிருந்து மக்கள் இப்போதுதான் 4 ஜிக்கு மாறுகிறார்கள்