இடுகைகள்

ஊராட்சித் தலைவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுகாதாரத்தில் சாதனை செய்த முடிச்சூர் ஊராட்சி!

படம்
தாம்பரம் அருகேயுள்ள புறநகர்ப்பகுதி என்பதால், ஆண்டுதோறும் முடிச்சூர் நவீனமான பகுதியாக வளர்ந்துவருகிறது. இரண்டு நடுநிலைப் பள்ளிகள், மூன்று அங்கன்வாடிகள் கொண்ட 12  சதுர கி.மீ. பரப்பளவுள்ள ஊர் இது. இந்த ஊரின் முக்கியமான சிறப்பு, கழிவுகளை மேலாண்மை செய்யும் திறன்தான். இதற்கான சிந்தனைகளை மக்களுடன் கலந்துபேசி சாதித்தவர், முன்னாள் ஊராட்சித் தலைவரான தாமோதரன். அவரிடம் பேசினோம். ”2006இல் நான் பஞ்சாயத்துத் தலைவரானபோது, திடக்கழிவு மேலாண்மை பற்றி மாவட்ட அளவில் எங்களுக்குப் பயிற்சி அளித்தார்கள். இதில் நான் ஆர்வம்காட்ட, மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் உதவினர். அப்போது, நாங்கள் மாட்டு வண்டியைப் பயன்படுத்தி வந்தோம்.  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, குப்பைகளை உரமாக்குவது பற்றி எங்களுக்குத் தெரியாது. குப்பைகளை வண்டிகளில் எடுத்து வந்து ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்டி வந்தோம். மாவட்ட ஆட்சியர் எங்களது செயலால் ஏற்படும் மாசுபாடு பற்றி விளக்கினார். இதுபற்றிய கழிவு மேலாண்மைப் பயிற்சியையும் அளித்தனர். இப்பயிற்சிக்குப் பிறகு, குப்பைகளை மறுசுழற்சி செய்யும் திட்டத்தை எங்கள் ஊரில் செயற்ப