இடுகைகள்

ஆடியோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆடியோ கதைகள் மூலம் மக்களின் மனதை வென்ற பாக்கெட் எஃப்எம்! - பார்ச்சூன் 40 அண்டர் 40

படம்
  நிஷாந்த், ரோகன், பிரதீக்- துணை நிறுவனர்கள், பாக்கெட் எஃப்எம் பாக்கெட் எஃப்எம்- ஆடியோ கதைசொல்லி ரோகன் நாயக், நிஷாந்த், பிரதீக் தீக்‌ஷித் துணை நிறுவனர்கள் பாக்கெட் எஃப்எம் யூட்யூபை திறந்தால், ‘’பார்க்கிறதுக்கு பிச்சைக்காரன் மாதிரி இருக்கான். இவனுக்கு பேங்கில அக்கவுண்ட் இருக்கா, இந்த பிச்சைக்காரனுக்கு ஹோட்டல் டேபிளா,, அதை எங்களுக்கு கொடுங்க. பாக்குறதுக்கு சர்வர் மாதிரி இருக்க, இரண்டு கிளாஸ்ல டீ போட்டு எடுத்துட்டு வா ‘’ என்ற டோனில் பெண் குரல் பேசும் மோசமான அனிமேஷன் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். அந்த கம்பெனிதான் பாக்கெட் எஃப்எம். கதைகளை ஆடியோ வடிவில் கூறும் நிறுவனம். ரோகன், நிஷாந்த் ஆகிய இருவரும் காரக்பூரல் ஐஐடியில் படித்தவர்கள். இவர்கள் பிரதீக்கை சந்தித்தபிறகு பாக்கெட் எஃப் நிறுவனத்தை உருவாக்கினர்.   இன்று பாக்கெட் எஃப்எம்மின் மதிப்பு, 400 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம். அண்மையில்தான் 93.5 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றது. பாக்கெட் நாவல் என்ற சகோதர நிறுவனத்திலிருந்து பாக்கெட் எஃப் எம் நிறுவனம் உருவானது. திகில் கதைகளில் யட்சினி என்ற கதையை பொறியியல் மாணவர் ஒருவர் எழுதி, அக்

கிளப் ஹவுஸ் வரவால் அதிகரிக்கும் ஆடியோ சமூக வலைத்தளங்கள்! - கட்டுப்பாடுகள் கூடுகிறதா? குறைகிறதா?

படம்
              கிளப் ஹவுஸ் என்பது வெறும் கேன்வாஸ்தான் . இதில் பயனர்கள் இல்லையென்றால் அதன் பயன் ஒன்றுமே இல்லை என்று அதன் துணை நிறுவனர் பால் டேவிட்சன் கூறினார் . கடந்த ஆண்டு மார்ச்சில் ஆப்பிள் ஐஓஎஸ்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட கிளப்ஹவுஸ் பின்னர் ஆண்ட்ராய்டிலும் வெளியானது . கடந்த மேயில் அறிமுகமாகி மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது . உலகம் முழுக்க இருபத்தைந்து மில்லியன் பேர் இந்த ஆப்பில் இணைந்துள்ளனர் . இந்த ஆப்பில் ஒருவர் இணைந்து தனக்கென ஒரு அறையை உருவாக்கிக்கொண்டு என்ன வேண்டுமோ அதனைப் பேசலாம் . பிறர் பேசும் விஷயங்களை பின்பற்றலாம் . அரசியல் , சினிமா , செக்ஸ் , ஆன்மிகம் என எதையும் இங்கே பேசலாம் . பல்வேறு துறை ஆட்களும் இங்கே குழுமி தங்களது துறை சார்ந்த விஷயங்களை பகிரலாம் . பத்திரிகையாளர்கள் இதிலுள்ள அறைகளைப் பயன்படுத்தி செய்திகளைக் கூட திரட்ட முடியும் . கிளப் ஹவுஸ் மட்டுமே ஆடியோரூம் வசதியைக் கொண்டிருக்கவில்லை . வேறு நிறுவனங்களும் இதேபோல வசதியை தங்களது சேவையில் கொண்டு வரவிருக்கின்றன . பேஸ்புக்கில் லைவ் ஆடியோ ரூம் வசதி வரவிருக்கிறது . ட்விட்டரில் ஸ்பேசஸ் எனும் வசதி உள்ளது .

அவசியம் கேட்க வேண்டிய பாட்காஸ்டுகள்- ரீடர்ஜ் டைஜெஸ்ட் பரிந்துரை

படம்
                      கேட்க வேண்டிய பாட்காஸ்ட்கள் வைல்ட் திங் அயல் கிரக மனிதர்கள் , அவர்களைப் பற்றிய சுவாரசியமான ஏராளமான செய்திகளை சொல்லுகிறார்கள் . இதுதொடர்பான வெளியான புகைப்படங்கள் , செய்திகள் , வினோதமான வெளிச்சத்தை பார்த்த விமானிகள் என பல்வேறு செய்திகள் கேட்க வினோத ரச மஞ்சரியாக மனதை மயக்குகின்றன . த்ரில்லிங் டேல்ஸ் ஆப் மாடர்ன் கேபிடலிசம் வணிக நிறுவனங்கள் எப்படி வளர்ந்தன , பெற்ற வெற்றி , அடைந்த தோல்வி ஆகியவற்றை பற்றி பேசுகின்றனர் . வணிகம் பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் இந்த பாட்காஸ்டை காதுகொடுத்து கேட்கலாம் . கிட்னாப்டு அண்ட் டிராப்டு பெலோ கிரவுண்ட் மைக் பாக்கம் என்பவர் கடத்தப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்டவர் . இவர் எப்படி மரப்பெட்டியில் இருந்து உயிர்பிழைத்து தப்பித்து வந்தார் என்பதை சுவாரசியமாக சொல்லுகிறார்கள் . சாகச அனுபவத்தை பெற நீங்கள் இதனை கேட்கலாம் . பேரிடேல்ஸ் எவரி சைல்ட் ஷூட் நோ உலகம் முழுக்க புகழ்பெற்ற அலாவுதீன் , அராபிய இரவுகள் உள்பட ஏராளமான கதைளளை சொல்லுகிறார்கள் . குழந்தைகளுக்கான கதைகள் என்றாலும் பெரியவர்களும் கேட்கலாம் . கதை

ஆடியோ மூலமாக என்னென்ன விஷயங்களை செய்யலாம்?

படம்
              ஆடியோவில் ஆடிப்பாடுவோம் ! ஸ்மார்ட்போன்களில் குரல் மூலம் செயல்படும் உதவியாளர் சேவை அறிமுகமாகி பத்தாண்டுகள் ஆகப்போகின்றது . இதனை இன்னும் நாம் சிறப்பாக பயன்படுத்த கற்கவேண்டும் . அப்போதுதான் எழுதுவதை விட எளிதாக பேசி ஒரு விஷயத்தை செய்யமுடியும் என்பதை உணர்வீர்கள் . உதவியாளரால் என்ன செய்யமுடியும் ? ஆப்பிளின் சிரி , கூகுளின் ஆண்ட்ராய்டு சாம்சங்கின் பிக்ஸ்பை ஆகியவை இன்று பெரும்பாலோனாரின் போன்களில் பயன்பாட்டில் உள்ளது . இதனை முழுமையாக பயன்படுத்த அதனைப் பற்றி அறிவது அவசியம் . எனவே இதுபற்றி இணையத்தில் தேடிப் பார்க்கலாம் . அல்லது போனில் உள்ள உதவியாளரிடமே உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி கேட்டு பதில் பெறலாம் . என்ன செய்யலாம் ? இன்று வேலைகள் என்னென்ன என்பது உங்களது அற்புதமான காந்தர்வ குரலில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் . போனில் நோட்ஸ் எடுக்கும் ஆப்புகளும் இருக்கும் . அதனைப் பயன்படுத்தலாம் . இல்லையெனில் போனில் கம்பெனியே கொடுத்துளமள ரெக்கார்ட் ஆப்பை பயன்படுத்துங்கள் . பட்டனை அழுத்தி பேசி பதிவுசெய்துகொண்டு அதனை கணினியில பதிவேற்றி பேக்கப் எடுத்து வைத்துக்

கொஞ்சம் வெளிப்படையாக பேசுவோமா? - கிளப்ஹவுஸ் ஆப் வெற்றி பெறும் ரகசியம்

படம்
          கொஞ்சம் வெளிப்படையாக பேசுவோமா ? மிர்ச்சி சிவசங்கரி அன்போடு அழைக்கும் லேட் நைட்ஷோவின் தலைப்புதான் இது . கிளப் ஹவுஸ் ஆப்பின் புகழுக்கும் இதேதான் காரணம் . இந்த ஆப்பின் விசேஷம் இதனை ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள்தான் பயன்படுத்த முடியும் . யாராக இருந்தாலும் உடனே பேஸ்புக் போல உள்ளே நுழைந்து விட முடியாது . அங்குள்ளவர்கள் யாராவது உங்களை அழைப்பிதழ் கொடுத்து அழைக்க வேண்டும் . டிஜிட்டல் அழைப்பிதழ்தான் . அப்படி அழைத்து உள்ளே வருபவர்கள் மாடரேட்டர் என்பவர்களால் கட்டுப்படுத்தப்படுவார்கள் . அங்கு ஜாலியாக அ முதல் ஃ வரை என்ன வேண்டுமானாலும் பேசலாம் . உடனே உற்சாகமாகும் உள்ளங்கள் கவனிக்க . இங்கு உறுப்பினராகுபவர்கள் அனைவரும் தங்கள் உண்மையான பெயரையே பயன்படுத்த வேண்டும் .    கிளப் ஹவுஸ் ஆப் இந்த ஆப்பின் வசதிக்கு முக்கிய காரணம் , இதில் நீங்கள் தகவல்களை ஆடியோ வடிவில் பகிர்ந்துகொள்ளலாம் . இதன் காரணமாக , அரசியலோ , ஆன்மீகமோ , ஆண்மைக்குறைவோ எதுவாக இருந்தாலும் கேட்பவர்களுக்கு நெருக்கமாக தோன்றும் இதனால் இந்த ஆப்பில் இணைவதற்காகவே பல இந்தியர்கள் ஐபோன்களை வாங்க முயல்கின்றனர் . வெளிப்பட

ஒலியின் பயணம்!- அன்றிலிருந்து இன்றுவரை

படம்
3400 ஆண்டுகள் ஆகின்றன. நாம் தகவல் தொடர்பு விஷயங்களை கண்டறியத் தொடங்கி. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என புகைப்படங்களை விட ஒலி மக்களை கவனிக்க வைக்கிற ஒன்றாகவே இருக்கிறது. ஒளி பாதிவேலையை செய்தால், ஒலி மீதி வேலையைச் செய்கிறது. மெசபடோமியர்கள் செய்திகளை எழுதி அதனை சத்தமாக பேசி பிறருக்கு செய்தியை கடத்தினர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூட மிகத்தரமான ஒலியை நம்மால் கேட்கமுடியவில்லை என்றே சொல்லவேண்டும். இன்று நாம் ஸ்மார்ட்போன் அல்லது யூடிபில் 8டி ஒலியை கேட்டு மகிழ்ந்து வருகிறோம். அந்த ஒலியின் பயணத்தை நாம் பார்ப்போம். 1860 போன் ஆட்டோகிராப் 1853 ஆம் ஆண்டு எட்வர்ட் மரியன்வில்லே என்ற கண்டுபிடிப்பாளர் மனிதர்களின் குரலை பதிவு செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இதில் பல்வேறு விஷயங்களை மேம்பாடு செய்ய முடியவில்லை. குறிப்பாக திரும்ப போட்டு பார்த்தால்தானே அதில் என்ன நடந்திருக்கிறது என்று தெரியும். 1886 வேக்ஸ் சிலிண்டர் - போனோகிராப் இதனை தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்கினார். பின்னர், அலெக்சாண்டர் கிரகாம் பெல், மேம்படுத்தி கிராம போன் கருவியைக் கண்டுபிடித்தார். இதில்தான் பதிவு செய்த குரல்களை தி

பாட்காஸ்ட்சந்தை உயருகிறது! - இந்தியாவில் தோன்றும் புது மோகம்!

படம்
நகர வாழ்க்கை கிராமத்திலிருப்பவர்களுக்கு சொர்க்கமாக தோன்றும்.ஆனால் காரில், பைக்கில் செல்லும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உங்களுக்கு எரிச்சலூட்டும். இதிலிருந்து காப்பாற்ற இநூல்கள் உதவும். ஆனால் பயணிக்கும்போது தற்போது பாட்காஸ்டுகள் இப்பணியைச் செய்கின்றன. இதனால் தினசரி செய்தி, காமெடி, சுயமுன்னேற்றம் என அனைத்தும் ஆடியோ வழியாக கேட்க முடிகிறது. “நாங்கள் உங்கள் நேரத்தை திருடுவதில்லை” என்கிறார் ஹப்ஹாப்பர் எனும் பாட்காஸ்ட் நிறுவனரான கௌதம் ராஜ் ஆனந்த். பாட்காஸ்ட் என்பது தொடரின் தனித்தனி கோப்புக்களை வெளியிட பயனர்கள் கேட்பதுதான். பாட்காஸ்ட் எனும் ஆடியோ ஒலிபரப்பு கோப்புகளை நீங்கள் தரவிறக்கி கேட்டு மகிழலாம். இது படிப்பது போன்ற சோர்வைத் தருவதில்லை என்கிறார்கள் மெட்ரோநகர வாசிகள். 2017 இல், 25.4 மில்லியன் பேர் பாட்காஸ்ட்டுகளை கேட்டு வந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டில் 176 மில்லியன் பேர் இதனைக் கேட்பார்கள் என திட்டமிடப்பட்டுள்ளது. உலகளவில் இங்கிலாந்தின் ஆடியோபூம், அமெரிக்காவின் ட்யூன் இன், சீனாவின் ஜிமலயா ஆகிய நிறுவனங்கள் பாட்காஸ்ட் வணிகத்தில் முன்னே நிற்கின்றன. ஜியோ சாவன், வின்க் மியூசிக் ஆ