கொஞ்சம் வெளிப்படையாக பேசுவோமா? - கிளப்ஹவுஸ் ஆப் வெற்றி பெறும் ரகசியம்
கொஞ்சம் வெளிப்படையாக பேசுவோமா?
மிர்ச்சி சிவசங்கரி அன்போடு அழைக்கும் லேட் நைட்ஷோவின் தலைப்புதான் இது. கிளப் ஹவுஸ் ஆப்பின் புகழுக்கும் இதேதான் காரணம். இந்த ஆப்பின் விசேஷம் இதனை ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள்தான் பயன்படுத்த முடியும். யாராக இருந்தாலும் உடனே பேஸ்புக் போல உள்ளே நுழைந்து விட முடியாது. அங்குள்ளவர்கள் யாராவது உங்களை அழைப்பிதழ் கொடுத்து அழைக்க வேண்டும். டிஜிட்டல் அழைப்பிதழ்தான். அப்படி அழைத்து உள்ளே வருபவர்கள் மாடரேட்டர் என்பவர்களால் கட்டுப்படுத்தப்படுவார்கள். அங்கு ஜாலியாக அ முதல் ஃ வரை என்ன வேண்டுமானாலும் பேசலாம். உடனே உற்சாகமாகும் உள்ளங்கள் கவனிக்க. இங்கு உறுப்பினராகுபவர்கள் அனைவரும் தங்கள் உண்மையான பெயரையே பயன்படுத்த வேண்டும்.
கிளப் ஹவுஸ் ஆப் |
இந்த ஆப்பின் வசதிக்கு முக்கிய காரணம், இதில் நீங்கள் தகவல்களை ஆடியோ வடிவில் பகிர்ந்துகொள்ளலாம். இதன் காரணமாக, அரசியலோ, ஆன்மீகமோ, ஆண்மைக்குறைவோ எதுவாக இருந்தாலும் கேட்பவர்களுக்கு நெருக்கமாக தோன்றும் இதனால் இந்த ஆப்பில் இணைவதற்காகவே பல இந்தியர்கள் ஐபோன்களை வாங்க முயல்கின்றனர். வெளிப்படையாக பேசலாம் என்று நிகழ்ச்சி நடத்தும் சிவசங்கரி கூட சென்னையில் ஒருவர்தானே இருக்கிறார். ஆனால் இதுபோன்ற ஆப்பில் நாம் நினைத்த கேள்விகளை கேட்டு தெளிவு பெறலாம். உங்கள் சொந்த குரலில் கேட்பது என்பது அதனைக் கேட்பவர்களுக்கு எதிரிலுள்ளவர்களுக்கு நெருக்கமான தன்மையை தருகிறது.
கிளப் ஹவுஸ் ஆப்பில் அரசியல், தொழில், விவாதம், கல்வி, லேட்நைட் கேள்விகள் என பல்வேறுவகையான விஷயங்களும் விவாதிக்கப்படுகின்றன. இதனை இந்தியாவைச் சேர்ந்த ரோகன் சேத் என்பவர் துணை நிறுவனராக இருந்து தொடங்கியுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக