காதல் வாழ்க்கையை வலுப்படுத்துவது சண்டைகளும், வாக்குவாதங்களும்தான்! - உபாசனா கோனிடெலா
உபாசனா கோனிடெலா |
காதலர் தினம், எங்களுக்கு எங்கள் காதல் லட்சியங்களை அடையாளம் காட்டியுள்ளது.
உபாசனா கோனிடெலா
ராம்சரண், உபாசனா என இரண்டுபேருக்கும் திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் காதலின் பொறி அணையாமல் வாழ்ந்து வருகிறார்கள். இருவருமே குழந்தைகளாக இருந்தபோதிலிருந்து அறிமுகமானவர்கள்தான். இப்போது உபாசனாவின் காதல் வாழ்க்கை பற்றி கேட்போம்.
அனைத்து உறவுகளிலும் ஏற்றம் இறக்கம் இருக்கும். உங்களுக்கும் சரணுக்கும் அப்படி ஏற்பட்ட அனுபவங்கள் ஏதேனும் இருக்கிறதா?
நாங்கள் எங்கள் உறவில் நேர்மையாக இருப்போம். அதேசமயம், வாக்குவாதங்கள், சண்டை இல்லையென்றால் திருமணம் உறுதியாகாது என நினைக்கிறேன். ஆரோக்கியமான உறவின் ஓர் பகுதிதான் இந்த சண்டைகள் எல்லாம். நாங்கள் இருவருமே நிறைய சண்டை போட்டிருக்கிறோம். வாக்குவாதம் செய்திருக்கிறோம். இதெல்லாம் எங்கள் உறவை வலுப்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். நாங்கள் வெளியுலகில் அன்பை காட்டிக்கொண்டதில்லை. எங்கள் வாழ்க்கையில் வந்த ஏற்ற இறக்கங்களை நான் முக்கியமானதாகவே நினைக்கிறேன். அவற்றுக்கு நன்றிகூறிக்கொள்கிறேன்.
உபாசனா கோனிடெலா |
காதலர் தினத்தை நீங்கள் எப்படி கொண்டாடுவீர்கள்
காதலர் தினம் ஞாயீற்றுக்கிழமையன்று வந்துவிட்டது. சரண் வீட்டிலிருந்தால் அவரோடு சேர்ந்து டிவி பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் காதல் கொண்டாட்டம் என்பது இருவரும் ஒன்றாக சேர்ந்து நேரத்தை செலவழிப்பதுதான். திங்கட்கிழமை அவர் படப்பிடிப்புக்கு செல்லவிருக்கிறார்.
திருமணத்திற்கு தயாராகுபவர்களுக்கு பிராக்கடிக்கலாக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
உண்மையை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். திருமண வாழ்க்கை என்பது அதிசய கதைகளைப் போல இருக்காது. இருவருமே யார் யாருக்காக அதிகம் விட்டுக்கொடுக்கிறீர்கள் என்று போட்டிபோடக்கூடாது சமூக அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் இருவருமே விட்டுக்கொடுத்து போகவேண்டும். முன்முடிவுகளோடு வாழ்க்கையை அணுக கூடாது.
உபாசனா கோனிடெலா |
திருமண வாழ்க்கைக்கு உங்கள் அம்மா கொடுத்த அட்வைஸ் என்ன?
பாலத்தை எரித்துவிடுவதுதான் அவர் கொடுத்த அட்வைஸ். நீங்கள் ஒருவரோடு டேட் நைட் செல்லும்போது பாலத்தில் பயணிக்க தொடங்கிவிடுவீர்கள். அடுத்து அதில் திரும்பி வருவதற்கு வாய்ப்பில்லை. திருமணமாவது என்பது அப்படித்தான். நீங்கள் விரும்பியவருடன் நடந்து சென்றால் அப்படியே பாலத்தை கடந்து சென்றுவிட்டு பாலத்தை நெருப்பிட்டு எரித்துவிடவேண்டும். எளிதில் பின்பற்றக்கூடிய நடைமுறைக்கு ஏற்ற அட்வைஸ்தான் அவர் சொன்னார்.
சரண், உபசானா என இரண்டுபேருமே தத்தமது துறையில் சாதனையாளர்கள். உங்கள் இருவருக்கும் எப்படி ஒன்றாக நேரம் செலவழிக்க வாய்ப்பு கிடைக்கிறது?
என் அம்மா எனக்கு கொடுத்த அறிவுரை வாரத்திற்கு ஒருநாளேனும் ஒன்றாக சந்தித்து நேரம் செலவழிக்கவேண்டும் என்பதுதான். இதனை நாங்கள் தீவிரமாக கடைபிடிக்கவில்லை. ஆனால் இயல்பாகவே நாங்கள் இருவரும் வாரம் ஒருநாளேனும் சந்தித்து விடுவோம். அதேநேரம் எங்கள் துறை சார்ந்த வேலைகள் அப்படியே திட்டப்படி தொடர்கின்றன.
காதல் தொடர்பான மறக்கமுடியாத நினைவுகள் என்ன?
சரண் மும்பையில் இருந்தபோது இதயம் வடிவிலான நகை ஒன்றை எனக்காக வாங்கி அனுப்பினார். இதற்கு எங்கள் இருவருக்குமான தோழி தியா உதவினார். ராம் எனக்கு வாங்கி அனுப்பி அந்த நகையை இன்றும் நான் தினந்தோறும் அணிகிறேன்.
சரண் உங்களுக்கு கொடுத்த காதல் பரிசு, நிகழ்வு ஒன்றை சொல்லுங்கள்?
அப்படி நிறைய இருக்கின்றன. சரண், காதலுக்கு அளித்த பரிசுகளை விட காதலுக்கான நினைவுகளை நிறைய கொடுத்துள்ளார். விலையுயர்ந்த பரிசுகளை விட மதிப்புக்குரியதாக அன்பை உணர்த்திய தருணங்களை நான் நினைக்கிறேன். அப்படித்தான் அவர் கொடுத்த டெய்ஸி என்ற குதிரையை நினைக்கிறேன். அவரை நாங்கள் இருவருமே நேசிக்கிறோம்.
உபாசனா கோனிடெலா |
காதலர்களுக்கு நீங்கள் சொல்லவிரும்பும் முக்கியமான ஆலோசனை என்ன?
நிபந்தனையில்லாத அன்பு, அடுத்து ஒருவருக்கொருவர் கொடுக்கும் மதிப்பு.
டைம்ஸ் ஆப் இந்தியா
சுகாஸ் யெலாபந்துலா
கருத்துகள்
கருத்துரையிடுக