இடுகைகள்

வர்ஜின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காணாமல் போன மனைவியை தேடும் கணவன்! - புஷ்பக விமானம் - தெலுங்கு

படம்
  புஷ்பக விமானம் - தெலுங்கு புஷ்பக விமானம் தமோதர் ராம் மிர்யாலா ஆனந்த் தேவர் கொண்டா, கீத் சைனி, ஷான்வி மேகனா புஷ்பக விமானம்- தெலுங்கு அரசு பள்ளி ஆசிரியர், இளைஞர். இவருக்கு கிராமத்தில் பெண் பார்த்து நிச்சயம் செயகிறார்கள். அங்குதான் கல்யாணம் நடக்கிறது. இவரும் சங்கோஜமாக பெண்ணிடம் பேசுகிறார். அவரும் தயக்கத்துடன் இவருடன் பேசுகிறார். கல்யாணம் ஆன பிறகு ஹைதராபாத் வருகிறார்கள். இங்கு வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். ஆனால் சில நாட்களிலேயே ஆசிரியரின் மனைவி காணாமல் போகிறார். இதைப் பற்றி பிறரிடம் சொன்னால், அவமானம் என நாயகன் தானே தேடத் தொடங்குகிறார். மிக நெருக்கமான நண்பனிடம் இதைப்பற்றி சொல்லுகிறார்.  புதிதாக மணமான ஜோடி என்பதால் அவர்களைப் பார்க்க வரும் பிற ஆசிரியர்கள் என அனைவரையுமே நாயகன் சமாளிக்க போலி மனைவியை ஏற்பாடு செய்கிறார். இதெல்லாம் ஒரு கட்டம்தான். பிறகு, அவரின் மனைவி தலையில் அடிபட்டு இறந்துபோனார் என்ற செய்தி டிவியில் வர அனைத்துமே மாறுகிறது. எஸ் ஐ ரங்கம் என்ற போலீஸ்காரர், தொடக்கம் முதலே வழக்கை நாயகன்தான் கொலை செய்துவிட்டு நாடகம் ஆடுகிறான் என்ற கோணத்தில் விசாரிக்கிறார். இதனால் நாயகன் செய்த கௌரவமா

தொழிலை தொடங்கி நடத்த நெஞ்சம் முழுக்க துணிச்சல் கொண்டவர்! - கடிதங்கள்

படம்
தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் அன்புள்ள தோழர் முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இன்று காலை 5.45க்கு தாம்பரம் பஸ் பிடித்தேன். கணியம் சீனிவாசன் சார் வீட்டுக்கு போவதுதான் திட்டம். சானடோரியம் பஸ் ஸ்டாப்பில் இறங்கிவிட்டு பஸ் டிப்போவில் ஒருமணிநேரம் உட்கார்ந்திருந்தேன். அங்கு தினசரி பேப்பர்களை வாங்கிப்படித்தேன். பிறகு, எழுந்து சாலையைக் கடந்து எதிரே தெரிந்த உணவகத்திற்கு சென்று நான்கு இட்லிகளை சாப்பிட்டேன். பிறகு, அருகில் இருந்த காய்கறிக்கடைக்கு சென்று பழங்களை வாங்கினேன்.  பிறகுதான் சீனிவாசன் சாரை அழைத்தேன். பைக்கில் வந்து வீட்டுக்கு அழைத்துப்போனார். நான் முதலில் அவர்கள் வீட்டுக்குப் போனபோது வியன் என்ற பையன் இருந்தான். இப்போது கைக்குழந்தையோடு இயல் என்ற சிறுமியும் இருந்தாள். அந்தளவு இடைவெளி ஆகிவிட்டது. நிறைய நேரம் பேசிவிட்டு, வீட்டில் சாப்பிட்டுவிட்டு சில புத்தகங்களை படிக்க வாங்கி வந்தேன்.  ரிச்சர்ட் பிரான்சன் - என் சொக்கன் எழுதிய நூலை அவரது வீட்டிலேயே படித்துவிட்டேன். 174 பக்கம்தான். தொழில் அதிபர்களைப் பற்றி படிப்பது எப்போதும் எனக்கு பிடித்தமானது.ரிச்சர்டின் வாழ்க்கையில் அவரது
படம்
                    சூப்பர் பிஸினஸ்மேன் ரிச்சர்ட் பிரான்சன் இங்கிலாந்தைச் சேர்ந்த இந்த பிஸினஸ்மேனைப் பற்றி படித்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று கூட எனக்கு சந்தேகமாக இருக்கிறது . ஆம் இவர் தனது பொருட்களை எப்பாடுபட்டாவது தானே விளம்பரப்படுத்திவிடுவார் . மார்க்கெட்டிங்கா எனக்கு வராதே சுண்டுவிரலைக் கடிக்கும் பழக்கம் இவருக்கு கிடையவே கிடையாது . ஆல்பம் ரெக்கார்டுகள் முதல் மொபைல்போன் , இணையசேவை நிறுவனங்கள் , ரயில் , குளிர்பானங்கள் , விமான நிறுவனம் என மொத்தம் 360 நிறுவனங்களை வைத்திருக்கிறார் . இதன் தோராய மதிப்பு 2.6 பில்லியன் வரும் . இங்கிலாந்தில் புகழ்பெற்ற வணிகர் இவர்தான் . இந்நேரம் இவரை யாரென்று யூகித்திருப்பீர்கள் . வர்ஜின் காலாடிக் என்ற பெயரில் மக்களை விண்வெளிக்கு கூட்டிச்செல்ல திட்டம் போட்டுக்கொண்டிருக்கும் ரிச்சர்ட் பிரான்சன்தான் அவர் . பெரும்பாலான இங்கிலாந்து பெருநிறுவன முதலாளிகளைப் பொறுத்தவரை அவர்கள் வேலை செய்யும் நிறுவன ஆட்களுக்கு மட்டுமே அடையாளம் தெரியும் . ஆனால் ரிச்சர்டைப் பொறுத்தவரை உலகிலுள்ள அனைவருக்கும் அவரை அடையாளம் தெரியும் . தெரிய வேண்டும் எ

விரும்பிய வேலையைச் செய்தாலே பணம் தேடிவரும்! - ரிச்சர்ட் பிரான்ஸன் - டோன்ட்கேர் மாஸ்டர் - என். சொக்கன்

படம்
  வாசிப்பு.... ரிச்சர்ட் பிரான்ஸன்  டோண்ட்கேர் மாஸ்டர் என்.சொக்கன் கிழக்கு பதிப்பகம் வர்ஜின் நிறுவனத்தின் இயக்குநர், தலைவர் இவர் என்று ரிச்சர்டை காட்டினால் யாருமே நம்ப மாட்டார்கள். காரணம், கோட் போட்டு டை கட்டி போஸ் கொடுக்கும் ஆள் கிடையாது. மீட்டிங்குகளில் பாதியிலேயே பலூனில் பறக்க போய்விடுவார். பேசுவதிலும் பெரிய விற்பன்னர் கிடையாது.  ஆனால் உலகில் வர்ஜின் குழுமங்கள் தொடங்காத நிறுவனங்கள் கிடையாது. ஏராளமான நிறுவனங்களை மனம்போன போக்கில் தொடங்கவில்லை. அதற்கான ஆராய்ச்சிகளை செய்து வென்றவர், தற்போது, விண்வெளிக்கு மக்களை அழைத்துச்செல்லும் முயற்சிகளை செய்தபடி இருக்கிறார்.  நூலின் தொடக்கம் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் தொடக்கம் போல எழுதப்பட்டுள்ளது. பலூனில் பறந்துகொண்டிருப்பவர், கடலில் குதித்தாரா அல்லது பலூனில் உள்ள எரிபொருள் இருக்கும்வரை அதிலேயே பயணித்து கீழே விழுவாரா என படிக்கும்போதே பதற்றம் ஏற்படுகிறது.  ரிச்சர்ட் பிரான்ஸன் நூலில் இதுபோல ஏராளமான சம்பவங்கள் உள்ளன. இந்த ஒன்றை மட்டுமே சொல்வதற்கு காரணம், இது தொடக்கம்தான் என்பதற்காகவே.  ரிச்சர்ட் தான் வாழ்வில் முதல் வெற்றி பெற்றது ஸ்டூடண்ட் இதழ் மற்றும் வர்