இடுகைகள்

குரல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அப்பாவின் பேராசையை ஒழித்து நல்லவராக்கும் தோமா! - சவுண்ட் தோமா - திலீப், நமீதா பிரமோத்

படம்
  சவுண்ட் தோமா - திலீப்புடன்(தோமா) சாய்குமார்(பௌலோ) சவுண்ட் தோமா  - ஶ்ரீலஷ்மியுடன் தோமா சவுண்ட் தோமா திலீப், நமீதா பிரமோத், முகேஷ், சுரேஷ்   வெஞ்சரமூடு   வட்டிக்கு பணம் கொடுக்கும், ஊரில் நிறைய தொழில்களை நடத்தும் தொழிலதிபருக்கு மூன்றாவதாக மகன் பிறக்கிறான். பிரசவத்தில் அம்மா, காலமாகிறார். மகனுக்கு தொண்டையில் பிரச்னை உள்ளது. அதற்கு அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், மனைவி இறந்துவிட்டாள். அந்த இழப்போடு ஏராளமான பணத்தை இப்போது   பிறந்த குழந்தைக்கு செலவிடவேண்டுமா என தந்தை நினைக்கிறார். இதனால் அந்த குழந்தைக்கு உதடு பிளவுபட்டு, வளரும்போது குரல் சரியாக வருவதில்லை. குட்டி என்றால் குண்ணி என சத்தம் வருகிறது. குட்டன் பிள்ளை என அவர் சொன்னால் குண்டன் பிள்ளை என்றுதான் சத்தம் வெளியே கேட்கிறது. இதனால் அவருக்கு ஊரில் சவுண்ட் தோமா என பெயரே உருவாகிறது. வட்டிக்கடைக்காரருக்கு மூன்று மகன்கள் (மத்தாய், ஜாய் குட்டி, தோமா) உள்ளனர். அவர்களால் தனக்கு என்ன பிரயோஜனம் என்று பார்த்துத்தான் செலவு செய்கிறார். உண்மையான பாசத்தை அவர் உணர்ந்தாரா, தோமா   தனது வாழ்க்கையை எப்படி நடத்தினான், அவன

குரல் வழியாக நீர்யானை தன் குழுவை அறியுமா?

படம்
  எதிரிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் நீர்யானை! அண்மையில் நீர் யானைகள் எப்படி தகவல் தொடர்பு கொள்ளும் என்பதைப் பற்றிய ஆய்வு நடைபெற்றது. இதில், இந்த உயிரினம் எப்படி தனது நண்பர்கள், அந்நியர்களை அடையாளம் காண்கிறது என்பதே ஆய்வின் முக்கியமான கருத்து.   நிலத்தில் வாழும் பாலூட்டி இனங்களில் முக்கியமானது, நீர்யானை. இதனை பொதுவாக அறிந்தவர்கள் கூட இதன் குணங்களை பற்றி அதிகம் தெரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். பகலில் நீர்நிலையில் இருக்கும் நீர்யானைகள், இரவில் மட்டுமே நிலத்திற்கு வருகிறது. இதனை நாள் முழுவதும் கவனித்து பார்த்து ஆய்வு செய்வது கடினமான பணி. நீர்யானை மட்டுமல்ல பிற விலங்குகளையும் அதன் குணங்களை அறிய அதிக ஆண்டுகள் தேவை. அப்போதுதான்,  கவனித்து கண்காணித்து தகவல்களை சேகரிக்க முடியும்.  பிரமாண்டமான நீர்யானை , அதேயளவு ஆபத்தும் நிறைந்தது. பெரிய உடம்பு என்றாலும் அந்நியர்களைக் கண்டால் முரட்டு கோபத்தோடு தாக்க முயலும். நீர், நிலம் என இரண்டிலும் ஓடக்கூடிய, நின்ற நிலையிலேயே சடாரென திரும்பும் திறன் கொண்ட விலங்கு என்பதை விலங்கு ஆய்வாளர்கள் அறிந்துள்ளனர்.  அருகில் போகாமல் நீர்யானைகளை ஆராய, அதன் ஒலியை ஆய்வு செய்

உணர்வுகளை வெளிப்படுத்தும் குரல்வழிச்செய்திகள்!

படம்
  உணர்வுகளைச் சொல்லும் குரல்வழிச்செய்தி!   இன்று பெரும்பாலும் குறுஞ்செய்திகளை எழுதி அனுப்புவதை விடகுரல் வழியே செய்தி அனுப்புவதே புகழ்பெற்றுள்ளது. பொதுமுடக்கம் பலரையும் வெளியிடங்களில்  சந்திப்பதைத் தடுத்திருக்கிறது. இதன் காரணமாக குறுஞ்செய்தி அனுப்பும் ஆப்களில் கூட குரல்வழிச் செய்திகள் அதிகம் அனுப்பப்படுகின்றன.  2013ஆம் ஆண்டு  இந்த வசதி வா்ட்ஸ்அப்பில் நடைமுறைக்கு வந்தாலும், புகழ்பெற்றது பொதுமுடக்க காலகட்டத்தில்தான்.  இன்று போனில் வரும் அழைப்பே, மிகவும் அவசரம் என்றால் மட்டும்தான் என்பதாக மாறியிருக்கிறது. புதிய தலைமுறையினர் பெரும்பாலும் குரல்வழிச் செய்தியை உரையாட அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் அப்படி என்ன சிறப்பு?  ஒருவர் தன்னுடைய குரலில் தான் நினைப்பதை நண்பரிடம் பகிர்ந்துகொள்ளலாம். ஒருவர் வேண்டும்போது இந்த செய்தியைக் கேட்டுக்கொள்ளலாம். உடனடியாக பதில் சொல்ல வேண்டியதில்லை. மேலும், ஒருவர் தனது குரல் வழியாக பிறரிடம் பேசும்போது நேரடியாக பேசுவது போன்ற நெருக்கம் உருவாகிறது.  எதையும் படிக்க அவசியமில்லாமல் காதில் கேட்டுக்கொண்டு செய்தியை அறிந்துகொள்ளலாம். பதில் அளிக்க விரும்பினால் கூட அந்த நேரத்

பறவையின் மூளை இயக்கங்களை பாடல்களாக மாற்றி மனிதர்களுக்கு உதவலாம்! - புதிய ஆராய்ச்சி

படம்
  பறவைகளின் மூளையில் ஒரு பாடல் பறவையியல் ஆராய்ச்சியாளர்கள், அதன் மூளை இயக்கத்தை ஆராய்ந்து அதனை பாடலாக மாற்றியிருக்கிறார்கள். பாட்டு எப்படியிருக்கும் என்று இப்போது நீங்கள் கேட்க கூடாது. எதற்கு இப்போது இந்த ஆராய்ச்சி என்று கேட்டால் கட்டுரையை நீங்கள் தாராளமாக வாசிக்கலாம்.  அமெரிக்காவின் சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பறவைகளின் மூளை இயக்கத்தை பாடலாக மாற்றும் ஆராய்ச்சியை செய்துள்ளனர். இதன்மூலம் பேச முடியாத மக்களுக்கு குரல் அமைப்புகளை வடிவமைக்க முடியும் என்பதுதான் அவர்கள் சொல்லும் சேதி.  தற்போதுள்ள மருத்துவக்கருவி மூலம் ஒரு நிமிடத்திற்கு இருபது வார்த்தைகளை பேச முடிகிறது.  யோசித்துப் பாருங்கள். நீங்கள் பேசுவதை கூறும் கருவியை விட என்ன பேசலாம் என்று நினைப்பதை பிராஸ்தெடிக் கருவி மூலம் பிறருக்கு தெரிய வைத்தால் பிரமாதமாக இருக்குமே என்கிறார் உளவியல் மற்றும் நரம்பு உயிரியல் பேராசிரியர் டிமோத்தி ஜென்ட்னர்.  ஸீப்ரா ஃபின்ச் என்ற பறவைகளின் உடலில் எலக்ரோடுகளைப் பொருத்தி, செயற்கை நுண்ணறிவு மூலம் அதன் மூளை இயக்கங்களை படம்பிடித்துள்ளனர். இதன்மூலம் மூளை எப்படி குரல்  தசைகளை இய

கொரோனாவால் குரலை இழந்தேன்!

படம்
  கொரோனாவால் குரலை இழந்தேன்! இங்கிலாந்தைச் சேர்ந்த கானர்  ரீட் (Connor Reed) கொரோனா வைரஸ் தாக்கி மீண்டுள்ளார். கடந்த ஆண்டு சீனாவில் பணியாற்றியவர், வைரஸால் தாக்கப்பட்டு உயிர்மீண்டதே மறுபிறப்பு போலத்தான்.  இங்கிலாந்தின் நார்த்வேல்ஸ் பகுதியிலுள்ள லாலன்டுட்னோவைச் சேர்ந்த கானர் ரீட். இவர் சீனாவிலுள்ள வூஹானில் உள்ள பள்ளியொன்றில் பணியாற்றி வந்தார். 2019 நவம்பர் 25 அன்று, சளித் தொந்தரவால் பாதிக்கப்பட்டார். முதலில் அதனை அவர் சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.   ஏழு நாளில் சளி, மூக்கடைப்பு சரியாகிவிடும் என்று தன் தினசரி வேலைகளை செய்து வந்திருக்கிறார். ஆனால் , திடீரென ஒருநாள் காலையில் அவரால் படுக்கையிலிருந்து எழமுடியவில்லை. உடல்வலியோடு, இடைவிடாத இருமல் தொல்லை வேறு. பல்வேறு கைவைத்தியங்களை செய்தும் பயனில்லை.  “ நுரையீரல் பாதிக்கப்பட்டதால் எனக்கு மூச்சுவிடுதல் சிரமமாகி வந்தது. முழுக்க குரலை இழந்து விட்டிருந்தேன். பேச முயற்சித்தால் கர், புர் என்ற ஒலிதான் வந்தது” என்றார் கானர். உடல்நிலை தேறாததால் உடனே அங்குள்ள மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு எடுக்கப்பட்ட பல்வேறு சோதனைகளின் அடிப்படையில் அவருக்கு நிம்மோனியா

உணர்ச்சிகள் வழியாக ஒருவரை எளிதாக புரிந்துகொள்ளும் செயற்கை நுண்ணறிவு! - பரபரக்கும் ஏஐ ஆராய்ச்சி உலகம்

படம்
  உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் செயற்கை நுண்ணறிவு ! செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சி , மனிதர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் அளவுக்கு முன்னேறி வருகிறது . செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளில் வளர்ச்சிபெற்று வருகிறது . பல்வேறு இணையத்தளங்களில் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதும் ஏ . ஐ நுட்பம்தான் . புகைப்படங்களை பயிற்சி செய்து விலங்குகளை எளிதில் அடையாளம் காண கற்பதோடு மனிதர்களின் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளும் முயற்சியில் செயற்கை நுண்ணறிவுத்துறை பயணிக்கிறது . எப்படியிருக்கிறீர்கள் , சாப்பிட்டீர்களா ? என்ற வார்த்தைகளை இன்று பலரும் வீடியோ அழைப்புகளிலும் , குறுஞ்செய்திகளிலும்தான் கேட்டு வருகிறார்கள் . இந்த அழைப்புகள் நேருக்கு நேர் பேசுவது போல இருக்காது . இதில் ஒருவரின் உணர்வைப் புரிந்துகொண்டு பேசினால் எப்படியிருக்கும் ? எல் கலியோபி என்ற பெண்மணி , அஃபெக்டிவா என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் . வண்டி ஓட்டும்போது , மின்னஞ்சல் அனுப்பும்போது ஒருவரின் உணர்வுகளை எளிதாக அடையாளம் காணமுடியும் என இந்நிறுவனம் கூறுக

அமேசான் காடுகளில் தகவல்தொடர்புக்கான மொழி பயோஅக்கவுஸ்டிக்!

படம்
            சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா என பாடல் கேட்டிருப்பீர்கள் . உண்மையில் குயில் நமக்காகத்தான் பாடுகிறதா ? இல்லவே இல்லை . அவை தகவல்தொடர்புக்கான மொழி அது . இதுபற்ற அமேசான் காடுகளில் முனைவர் படிப்பு படிக்கும் மாணவர் ஆலிவர் மெட்கால்ப் ஆராய்ச்சி செய்து வருகிறார் . ஆராய்ச்சிபூர்வமாக நாம் இன்னும் காட்டுயிர் வாழ்க்கையை புரிந்துகொள்ளவில்லை . அதன் காரணமாகவே இன்றுவரை நம்மால் காட்டுத்தீயை எப்படி ஏற்படுகிறது என்று ஓரளவு தெரிந்துகொண்டாலும் கூட அதனை அணைக்கமுடியவில்லை . இதற்காக இப்போது ஆலிவர் பயன்படுத்தும் முறைதான் பயோஅக்கவுஸ்டிக் . இம்முறையில் பறவைகள் எழுப்பும் ஒலியை வைத்து அதன் தகவல்தொடர்பை ஆராய்ந்து உண்மையைக் கண்டறிய முடியும் . பறவைகள் குரல் எழுப்பது பாடுவது போன்று தோன்றினாலும் அவை தகவல்தொடர்புக்காக இப்படி செய்கின்றன . அவை தொடர்புகொள்ளும் முறை , அதிலுள்ள செய்தி ஆகியவற்றை அறியவே நாங்கள் முயல்கிறோம் என்றார் ஆலிவர் . மனிதர்கள் பொதுவாக பறவைகளை எப்படி புரிந்துகொள்கிறார்கள்ழ பார்வையின் வழியாகத்தான் . ஆனால் பறவைகளின் உலகில் இம்முறையில் நுழைவது கடினமானது . எனவே , இ

குழந்தைகளுக்கு கதை சொல்வதில் முதியோர் எப்படி வெல்கிறார்கள்?

படம்
மிஸ்டர் ரோனி கதை சொல்வதில் வயதானவர்கள் தேர்ந்தவர்களாக இருக்கிறார்களே எப்படி? மரண அடிதான் ப்ரோ. வாழ்க்கை முழுவதும் ஏதேனும் ஒன்றை சுமந்துகொண்டு இருக்கிறார்கள். வீண்பழி சுமக்கிறார்கள். தினசரி ஏராளமான மனிதர்களைச் சந்திக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்களுக்குச் சொல்ல நிறைய கதைகள் இருக்கின்றன. மேலும் இளைஞர்களை விட (18-30), 60-92 வயது கொண்டவர்கள் சொல்லும் கதைகள் குழந்தைகளை கஷ்டப்படுத்தாத இலக்கணங்களைக் கொண்டது. எளிதில் புரியும்படியான விஷயங்களைக் கொண்டது. அறத்தை வலியுறுத்துவது என்று ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கதைகளைச் சொல்லும்போது கதைகளுக்கு ஏற்றது போல குரலின் தொனிகளை மாற்றுவதும் பெரியவர்களுக்கு இயல்பாக வருவதை மைக்கேல் பிரான், சூசன் ராபின்ஸ், நான்சி மெர்க்லர் ஆகியோரின் ஆராய்ச்சிகள் விளக்கியுள்ளன. நன்றி: பிபிசி