இடுகைகள்

மைக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆணாக மாறினால் சுதந்திரம் கிடைத்துவிடும் என நினைத்து பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய முயலும் இளம்பெண் - மைக் - மலையாளம்

படம்
  மைக் மலையாளம் இயக்கம்: விஷ்ணு சிவபிரசாத். இசை – ஹெசம் அப்துல் வகாப் தயாரிப்பு – நடிகர் ஜான் ஆபிரகாம் இருவிதமான கடந்த காலங்களைக் கொண்ட ஆண், பெண் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பதே கதை. மைக் என்ற படம், எல்ஜிபிடியினருக்கான படம்போலவே உருவாகியிருக்கிறது. ஆனால் கதை, திரைக்கதை எழுதிய ஆசிப் அலி அக்பர் இடையில் தடுமாறியதில் சாதாரண காதல் கதையாக மாறிவிட்டது. சாரா தாமஸ் என்ற பாத்திரத்தின் கதைதான் படம். இந்த டீனேஜ் பெண்ணுக்கு தான் ஆணாக இருந்தால் நிறைய நெருக்கடிகளை சமாளிக்கலாம் என்று எண்ணம். அவள் வீட்டில் அம்மாவும், தனக்கு ஆண் பிள்ளை பிறக்காமல் பெண் பிள்ளையாக பிறந்து இருக்கிறாளே என வருத்தம். அம்மா வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறாள். அப்பா, சுயதொழில் செய்து வந்து நஷ்டமாகிறது. இதனால் குடும்பத்தில் அவரை அம்மா ஊதாசீனப்படுத்துகிறார்.   பணம் இல்லாதவரை மனைவி வேண்டாவெறுப்பாக நடத்த அவர் குடும்பத்தை விட்டு விலகிப் போகிறார். சாரா தாமஸின் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்திற்கு தேக்வாண்டோ சொல்லித் தரும் பயிற்சியாளர் ஒருவர் வருகிறார். அவர், மெல்ல சாரா தாமஸின் வளர்ப்

ஹெட்போனில் வெளிப்புற இரைச்சல் குறைக்கப்படுவது எப்படி?

படம்
  இன்று உலகச் சந்தையில் விற்கப்படும் அனைத்து ஹெட்போன்களிலும் வெளிப்புற இரைச்சலைக் குறைக்கும் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. வெளிப்புற இரைச்சலை காதில் அணியும் ஹெட்போன் மூலம் எப்படி கட்டுப்படுத்துவது? இதற்கு  தயாரிப்பு நிறுவனங்கள் சிறப்பு சாதனங்களைப் பயன்படுத்துகின்றன. ஹெட்போனில் இணைக்கப்பட்டுள்ள சிறிய மைக்ரோபோன் , வெளிப்புற இரைச்சலின் அளவை கணக்கிட்டு, அதனை மைக்ரோபுரோசசருக்கு அனுப்புகிறது. இரைச்சலின் அளவு அளவிடப்பட்டு அதற்கு ஏற்ப ஒலி அலைகளை மைக்ரோபுரோசசர் உருவாக்குகிறது. ஒருவர் பாடல் கேட்கும்போது, வெளிப்புற இரைச்சல் அளவுக்கு நிகரான ஒலி அலைகள் காதில் ஸ்பீக்கர் மூலம் உருவாக்கப்படுகின்றன. இதனால் பாடல் கேட்பவருக்கு வெளிப்புற இரைச்சல் இடையூறு செய்யாது.   ஸ்பீக்கர் (speaker) புதிதாக உருவாக்கப்பட்ட ஒலி அலைகளை காதில் ஒலிபரப்புகிறது.  சுற்றுப்புற ஒலி (ambient sound waves) ஒலி அலையின் உயரம், அதன் ஒலி அளவைக் குறிக்கிறது. அலைநீளம் சுருதியை தீர்மானிக்கிறது.  புதிய ஒலி அலை (New sound waves) வெளிப்புற இரைச்சலுக்கு பொருத்தமாக ஒலி அலைகள் உருவாக்கப்பட்டு தலைகீழ் வடிவில் ஒலிபரப்பப்படுகின்றன  இரைச்சலைக் கட்டுப்

பாட்காஸ்ட் தொடங்கு சூப்பர் பொருட்கள் இதோ! - டெக் புதுசு

படம்
2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் 62 மில்லியனுக்கும் மேல் பாட்காஸ்ட் கேட்டு வருகின்றனர். வீடியோக்களை பார்த்தால் கண்கள் சோர்வுறும். அதைவிட கேட்பது ஈசியல்லவா? அதனால் அதைச்சார்ந்த நிறைய பொருட்களும் நன்றாக விற்கின்றன. மைக்ரோபோன் ப்ளூ நிறுவனத்தின் யெட்டி என்ற மைக் பல்வேறு திசைகளிலும் திருப்பி வைத்து உங்களுடைய காந்தர்வ குரலை பதிவு செய்து பின்னி எடுக்கலாம். நீங்களும் இனி புரொப்ஷனலாக மாறி பாட்காஸ்டுகளை தயாரித்து உலகிற்கு வழங்கலாம். பாப் பில்டர் நிகழ்ச்சிகளை கேட்கும்போது டொய், பாப், ப்ர்ர். என ஒலி வந்தால் நிகழ்ச்சி சிறக்குமா? இதற்காகத்தான் பாப் பில்டர் பயன்படுகிறது. நீவர் நிறுவனத்தின் ஆறு அங்குல பாப் பில்டர் பயன்படுத்தினால் உங்கள் தேனினும் இனிய குரல் தொந்தரவின்றி பயனர்களை அடையும். ஹெட்போன்கள் சோனியின் தயாரிப்பு பிழை தராது என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? அதன் ஹெட்போன்தான் உங்களுக்கு உதவப்போகிறது. என்ன பதிவு செய்கிறீர்களோ அதனை அப்படியே யார் வேண்டுமானாலும் கேட்கலாம். சோனி எம்டிஆர் 7506எஸ் எனும் ஹெட்போன், எந்த பேஸ் விஷயங்களையும் தமன் சாய் போல சேர்க்காமல் உள்ளது உள்ளபடி ஒலி