இடுகைகள்

டான்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டான்ஸ் வீடியோக்கள் மூலம் சாதிக்கும் பழங்குடி தம்பதி! - இது மகாராஷ்டிர காதல் பாட்டு!

படம்
 மகாராஷ்டிரத்தில் கேட்கும் காதல் பாட்டு! யூட்யூப் வந்தபிறகு இந்தியர்களின் வாழ்க்கை நிறைய  மாறுதல்களை அடைந்துவிட்டது. அதில் வரும் வீடியோக்களைப் பார்த்து தொழில்முனைவோர் ஆவது முதல், பொழுதுபோக்காக அதில் நடனம் கற்று அப்படியே இமிடேட் செய்து ஆடி பிறரை மகிழ்விப்பது வரை தினுசு தினுசான விஷயங்களை மக்கள் செய்து வருகிறார்கள். இப்படி செய்து வருபவர்களின் வீடியோக்கள் மக்களின் கவனத்தைக் கவருகின்றன. இதனால், கூகுள் நிறுவனம், யூட்யூப் சேவைகளின் பங்களிப்பாளர்களுக்கு மாதம் குறிப்பிட்ட தொகை என வங்கிக்கணக்கில் செலுத்தி ஊக்குவிக்கிறது. இதற்கான தூண்டுதலை முதலில் உருவாக்கியது சீன நிறுவனமான டிக்டாக் தான். பிறகு வீமேட் என்ற சேவைகள். இப்போது யூட்யூப் தருவதை விட அதிகளவு தொகையை டிக் டாக் வீடியோக்கள் பதிவு செய்தவர்கள் பெற்றனர். பிறகு அது தடைசெய்யப்பட்டவுடன் பலரும் வேறு வீடியோ சேவைகளுக்கு மாறினர். உள்ளூரிலும் மோஜ், டகாடக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என முயற்சிகள் வரிசை கட்டின.  பாஸே பர்தி எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர், பவார். இவர், மகாராஷ்டிரத்தில் ஜாம்டே கிராமத்தில் வாழ்கிறார். இவர் டிக் டாக்கில் தனது இரண்டு மனைவிகளான

டிஸ்கோ - டேட்டா ஜங்க்ஷன்

படம்
 டிஸ்கோ - டேட்டா ஜங்க்ஷன் வெள்ளி நிற பந்து உருள, ஏராளமான வண்ணங்கள் பீய்ச்சியடிக்க ஆர்டிஎம் பாட்டு ஒலிக்க டிஸ்கோ கிளப்புகள் இயங்கி வந்தன. இதில்தான் எழுபதுகளில் சினிமா உலகமே வாழ்ந்தது. இன்று ரெக்கார்ட் செய்த பாடல்களைப் போட்டு டிஸ்கோ கிளப்புகள் செயல்படுவதில்லை. பலருகும் டிஸ்கோ கிளப்பிலுள்ள பாடல்கள், அதன் சூழல் என்பது இன்ஸ்பிரேஷனாக இருந்தது. இந்தியில் இப்படி உருவானவர்தான் பப்பி லகிரி. இவரது பாடல்களை கேட்கும்போது டிஸ்கோ கிளப் பாடல்களின் பீட்டில் இதயம் துடிக்கத் தொடங்கும்.  1976இல் மட்டும் அமெரிக்காவில் பத்தாயிரம் டிஸ்கோ கிளப்புகள் செயல்பட்டு வந்தன.  ஒரு நிமிடத்திற்கு 120 பீட்டுகளை டிஸ்கோ பாடல்கள் கொண்டிருக்கும்.  சாட்டர்டே நைட் ஃபீவர் என்ற பாடல் மட்டும் உலகம் முழுவதும் 40 மில்லியன் பிரதிகள் விற்றது. உலகிலேயே இரண்டாவதாக இந்தளவு விற்ற பாடல் இதுமட்டும்தான்.  பீ கீஸ்  குழுவின் நைட் ஃபீவர் என்ற பாடல் எட்டு வாரங்கள் பில்போர்ட் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. 1978ஆம் ஆண்டு நடந்த சாதனையில் முக்கியமானது.  அன்றைய டிஸ்கோ பாடல்களில் இதுதான் இந்த சாதனையை செய்த ஒரே பாடல்.  டிஸ்கோ பாடல்களுக்கான ஒளி அமைப