இடுகைகள்

பீதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொரோ்னா ஏற்படுத்திய பொருளாதார இழப்பு!

படம்
SCMP கொரோனா பாதிப்பால் சென்னை மாவட்டத்தை விட்டு பிழைக்க வந்த அத்தனை பேரும் உயிர்பயத்துடன் ஊரைப்பார்த்து ஓடி வருகின்றனர். இதில் தொழிலாளர்கள்தான் அதிகம். வட இந்தியர்களுக்கு இருக்கும் ஒரே வழி, ரயில்தான். அவர்கள் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்து கிடக்கிறார்கள். நூறு பேர் போகமுடியும் பதிவு செய்யப்படாத பெட்டியில் முன்னூறு பேர்களை அடைத்து பெருமைப்படுகிறது இந்திய ரயில்வே. தொழிலாளர்கள் உயிர்ப்பயத்துடன் ஓடினாலும், முதலாளிகள் ஓட முடியாது. பலரும் கொரோனாவினால் சரிந்தி தொழிலை தடுமாற்றத்துடன் நடத்தி வருகின்றனர். கொரோனா பீதியால் மால்கள், சினிமா தியேட்டர்கள், புகழ்பெற்ற உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் விடுமுறை தினத்திற்கு சம்பளம் கொடுக்க முடியாமல் பலரும் ஆட்களை நீக்கி வருகின்றனர். பிரதமரே சொன்னாலும் வேலை இல்லாதபோது ஆட்களுக்கு சம்பளத்தைக் கொடுப்பது சாத்தியம் கிடையாது என்பதே உண்மை. தேசிய புள்ளியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த சதவீதம் கடந்த பதினொரு ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவாகும். 2016ஆம் ஆண்டு

இறந்தவர்களின் உடல்களை என்ன செய்வது? மத்திய அரசு தடுமாற்றம்

படம்
டெம்போ மேகசின் விதிகள் இயற்றப்படாத அபாயம்! கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது மூன்று பேர் இதற்கு பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் உடல்களை எப்படி அப்புறப்படுத்துவது என்பதற்கு எந்த கொள்கைகளும் அரசிடம் இல்லை. தற்போது எய்ம்ஸ் இதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.  கொரோனாவில் இறந்தவர்களை பிளாஸ்டிக் பேக்கால் மூடிவிடவேண்டும். அவர்களின் உடலிலுள்ள நீர் வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். இறந்த உடல்களை எரிக்கவேண்டும். புதைக்க கூடாது. இச்செயல்களை செய்பவர்கள் அரசு அறிவுறுத்திய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருப்பது முக்கியம்.  உலகம் முழுக்க ஆறாயிரம் பேர் கொரோனாவால் இறந்துபோயுள்ளனர். இதில் இந்தியாவில் மூன்று பேர் என்று சந்தோஷப்பட முடியாது. காரணம், மக்கள்தொகை அதிகமுள்ள நாடான இந்தியாவில் சீனா அளவுக்கு விழிப்புணர்வு கிடையாது. முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல என்று அலட்சியமாக இருப்பவர்களே அதிகம். மத்திய அரசு இதனை தாமதமாக புரிந்துகொண்டாலும் இதற்கான விதிமுறைகளை அமைக்க குழுவை அமைத்துள்ளது.  டில்லி மேற்குப்பகுதியிலுள்ள ஜானக்புரியைச்

அதிக இரைச்சலுக்கு நாய்கள் பயப்பட்டு பதுங்குவது ஏன்?

படம்
பிபிசி மிஸ்டர் ரோனி திடீரென தரை அதிரும் சத்தம் கேட்டால் நாய்கள் நடுங்கி பெட்டின் அடியில் பதுங்குவது ஏன்? நாய்கள் மட்டுமல்ல ஆறறிவு படைத்த மனிதர்கள் கூட இடிக்கு, பட்டாசுக்கு, வெடிகுண்டுக்கு பயந்து பதுங்குவது உண்டு. நாய்கள் பயப்படுவது அதிகமாக இருபதற்கு காரணம், அவற்றின் கேட்கும் திறன் மிக கூர்மையாக இருப்பதுதான். காரணம், திருவிழாவில் போடும் வேட்டுச்சத்தம் கேட்டால் கூட எங்கள் வீட்டு நாய் பெட்டுக்கு அடியில் போய் பதுங்கிவிடும். இதற்கு ஒலி பற்றிய பயம்தான் காரணம். 2015ஆம் ஆண்டு ஆஸ்லோ பல்கலைக்கழகம் செய்த ஆய்வுப்படி, வயதான நாய்கள் அதிக ஒலிக்கு பயந்து நடுங்குவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மகிழ்ச்சியோ துக்கமோ அதற்கு ஏற்றபடி நாயை பழக்கப்படுத்த முடியும் என்று இவர்கள் கூறுகின்றனர். அது சாத்தியமா என்று நாயை வளர்ப்பவர்கள்தான் சொல்ல வேண்டும். நன்றி - பிபிசி