அதிக இரைச்சலுக்கு நாய்கள் பயப்பட்டு பதுங்குவது ஏன்?




Why do many dogs appear to have an innate fear of bangs? © Getty Images
பிபிசி




மிஸ்டர் ரோனி

திடீரென தரை அதிரும் சத்தம் கேட்டால் நாய்கள் நடுங்கி பெட்டின் அடியில் பதுங்குவது ஏன்?


நாய்கள் மட்டுமல்ல ஆறறிவு படைத்த மனிதர்கள் கூட இடிக்கு, பட்டாசுக்கு, வெடிகுண்டுக்கு பயந்து பதுங்குவது உண்டு. நாய்கள் பயப்படுவது அதிகமாக இருபதற்கு காரணம், அவற்றின் கேட்கும் திறன் மிக கூர்மையாக இருப்பதுதான். காரணம், திருவிழாவில் போடும் வேட்டுச்சத்தம் கேட்டால் கூட எங்கள் வீட்டு நாய் பெட்டுக்கு அடியில் போய் பதுங்கிவிடும். இதற்கு ஒலி பற்றிய பயம்தான் காரணம்.

2015ஆம் ஆண்டு ஆஸ்லோ பல்கலைக்கழகம் செய்த ஆய்வுப்படி, வயதான நாய்கள் அதிக ஒலிக்கு பயந்து நடுங்குவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மகிழ்ச்சியோ துக்கமோ அதற்கு ஏற்றபடி நாயை பழக்கப்படுத்த முடியும் என்று இவர்கள் கூறுகின்றனர். அது சாத்தியமா என்று நாயை வளர்ப்பவர்கள்தான் சொல்ல வேண்டும்.

நன்றி - பிபிசி 

பிரபலமான இடுகைகள்