நேரத்திற்கு மதிப்பளித்து வேலை செய்வது ஹாலிவுட் ஸ்டைல்! - நிம்ரத் கவுர்


Image result for nimrat kaur




நேர்காணல்
நிம்ரத் கவுர்

மாடலாக விளம்பரங்களின் வந்து மனம் கவர்ந்தவரின் சினிமா பயணம் 2012ஆம் ஆண்டு இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் பெடலர்ஸ் என்ற திரைப்படம் மூலம் தொடங்கியது. தற்போது அமெரிக்க திரில்லர் தொடரான ஹோம்லேண்ட்டில் நடித்து வருகிறார். லன்ச் பாக்ஸ், ஏர் லிஃப்ட்ஆகிய இந்தி படங்களில் நடித்து பார்வையாளர்களை ஈர்த்த நிம்ரத்திற்கு வயது 37.

ஹோம்லேண்ட் தொடரில் நடிப்பது எப்படியிருக்கிறது?

அமேசிங். லாஸ் ஏஞ்சல்சில் இத்தொடரின் குழுவினரைச் சந்தித்தேன். அப்போது தன்சிம் குரேசி என்ற கதாபாத்திரத்தை எழுதியிருந்தனர். நீங்கள் இதில் நடிக்க விரும்புகிறோம் என்று கேட்டனர். நான் மறுப்பேனா, உடனே ஒப்புக்கொண்டேன். நான் இந்தியில் சில படங்களை இடைவெளி விட்டு செய்திருக்கிறேன். இத்தொடரை நான் முன்பிருந்தே பார்த்து வந்திருக்கிறேன். இதன் இறுதிப்பகுதியில் நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.


இத்தொடர் இல்லாமல் வேவார்ட் பைன்ஸ் என்ற தொடரிலும் கூட நடித்திருக்கிறீர்கள். இதன்மூலம் உலகளவிலான பார்வையாளர்களை பெற முடியும் என நம்புகிறீர்களா?

ஆங்கில வழியில் படித்ததால் என்னால் ஆங்கிலத்தில் இந்த இரு தொடர்களிலும் நடிக்க முடிந்தது. நான் இங்கு கூறுவது உங்கள் தகவல் தொடர்புத்திறன் பற்றி. இதைப்போலவே உங்களுடைய உச்சரிப்பை மாற்றி நடிக்கவேண்டும் என ஒருவர் கூறினால் அதனை நான் சந்தோஷமாக ஏற்பேன். இதுபோன்ற சவால்கள்தான் மிகச்சிறந்த நடிகர்களை உருவாக்குகிறது என நம்புகிறேன்.

Image result for nimrat kaur



மேற்குலகில் நடைபெற்ற படப்பிடிப்பில் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் என்ன? 

நேரத்தை மதித்து சரியாக நடந்துகொள்வதுதான். அங்கு அனைத்துமே கறாராக திட்டமிட்டபடி நடக்கிறது. இந்தியர்களின் தன்மை உணர்ச்சிவசப்படுவதாக உள்ளது. அங்கு படப்பிடிப்பில் உள்ள அனைவருக்குமே தாங்கள் செய்யும் வேலை என்ன என்று தெளிவாகத் தெரியும். என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் அவர்கள் கூறிவிடுகிறார்கள்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் மிகவும் தெளிவான, உறுதியானவையாகவே உள்ளன. லன்ச்பாக்ஸ் தொடங்கி வெப் சீரிஸ் வரையிலும் கூறுகிறேன். இந்த தேர்வு எப்படி அமைந்தது?

இந்த கதாபாத்திரங்கள் எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லுவேன். எழுத்தாளர்கள் என்ன நினைத்து எழுதினார்களோ அந்த சூழலில் அக்கதாபாத்திரமாக என்னை மாற்றிக்கொள்ள முயல்கிறேன். மேலும் படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலும் சில தகவல்கள் கதாபாத்திரங்கள் சார்ந்து கிடைக்கும் அவற்றையும் நான் உள்வாங்கிக்கொண்டு நடிக்கிறேன்.

திரைப்படங்களில் நடித்துவிட்டு திடீரென டிவிக்கு சென்றீர்கள். பின் இணையத் தொடரில் நடிக்கிறீர்கள். எது உங்களுக்கு பொருத்தமான ஊடகமாக நினைக்கிறீர்கள்?

அப்படி எதுவும் இல்லை. நான் ஹோம்லேண்ட் தொடரில் நடித்துவிட்டு லன்ச் பாக்ஸ் படத்தில் நடித்திருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பேன். நான் என் கதாபாத்திரம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று மட்டுமே பார்க்கிறேன். அதைக்கொண்டே அதில் நடிப்பதைப் பற்றி முடிவு செய்கிறேன். தி டெஸ்ட் கேஸ் என்ற இணையத்தொடரில் நடிக்கத் தொடங்கும்போது இணையத் தொடர் என்பது இங்கு பிரபலமான ஒன்றாக இல்லை. ரிஸ்க்தான். ஆனால் நான் துணிந்து நடித்தேன். என்னுடைய கதாபாத்திரங்களை மக்கள் நினைவுகூரவேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

 நாடகத்தில் நடித்துவிட்டு அதன் பின்னணியில் திரைப்படத்திற்கு வந்தவர் நீங்கள். சினிமாவில் நடிப்பதற்கு நாடக அனுபவம் உதவியதா?

நிச்சயமாக. எனது குடும்பம் ராணுவப் பின்புலம் சார்ந்தது. சினிமாவில் காட்சி, எப்படி எடுக்கிறார்கள் என்பதை நான் மெல்லத்தான் புரிந்துகொண்டேன். நடிப்பு என்பதை நான் உறுதியான என் எதிர்காலமாக நம்பினேன். அதனால்தான் பட்டப்படிப்பு முடிந்ததும் மும்பைக்கு வந்தேன். அப்போதும் வாய்ப்புகள் தேடிக்கொண்டிருக்கும்போது ஆறுமாதங்கள் வேறு வேலைகளையும் செய்து பணம் சம்பாதித்து என்னைக் காப்பாற்றிக்கொண்டேன். இல்லையெனில் இங்கு வந்திருக்க முடியாது.

நன்றி – இந்தியன் எக்ஸ்பிரஸ் – ஏ.ஹரிணி பிரசாத்