எங்கெல்லாம் கல்வியறிவு குறைவாக உள்ளதோ, அங்கெல்லாம் வறுமையான ஏழை மக்கள் உருவாகிறார்கள்! - ஷி ச்சின்பிங்
1949ஆம் ஆண்டு சீனாவில் மக்கள் குடியரசு மலர்ந்தது. அந்த காலம்தொட்டே நாம் கல்வியில் நிறைய முன்னேற்றங்களைப் பெற்று வருகிறோம். வரலாற்று ரீதியாக கல்வி மேம்பாடு பற்றி பெருமை கொள்வதற்கான நிறைய விஷயங்கள் நம்மிடையே உண்டு. 1949ஆம் ஆண்டுக்கு முன்னர் நிங்டே பகுதி பின்தங்கிய நிலையில் இருந்தது. இன்று நாம் அங்கு பள்ளிகளைக் கட்டியுள்ளோம். விவசாயிகளின் பிள்ளைகள் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்கள். இத்தோடு திருப்தி அடைந்துவிடலாமா?, இல்லை. மாறிவரும் கல்வியில் வரும் புதிய மேம்பாடுகளை அறிந்து கொள்ளவேண்டும். கல்வி என்பது பொருளாதாரம், சமூக மேம்பாடு ஆகியவற்றோடு பிரிக்க முடியாத தொடர்புடையது. கல்வியைப் பயன்படுத்தி உள்ளூர் பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றை மேம்படுத்த முடியும். மேற்சொன்ன கருத்துகளின் அடிப்படையி்ல நிங்டேவில் உள்ள கல்வி நிலையைப் பார்ப்போம். அப்போதுதான் கல்வி பற்றிய கவனத்தைப் பெறமுடியும். நடைமுறை சூழலைப் பார்த்து வேகமாக முடிவெடுத்து தீர்மானிக்க வேண்டிய நிலையை புரிந்துகொள்ள லாம். நிங்டே பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ளது. அதேநேரம் கல்வியிலும் மோசமாக உள்ளதா? அப்படி பார்ப்பது சரியா? ...