இடுகைகள்

1971 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாகிஸ்தான் ராணுவம் பெண்களுக்கு இழைத்த அநீதி! - நீதி கேட்கும் ஆவணப்படம்!

படம்
போரின் கொடுமை நினைத்துப் பார்க்க முடியாதது 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக நடந்த போர் அங்கு பெரும் சோகங்களையும், வேதனைகளையும் ஏற்படுத்தியது. காரணம், இந்த பிரிவினைக்காக அங்கு ஏராளமான உயிர்பலிகள், வல்லுறவுகள் நடைபெற்றன. இதுபற்றி எழுத்தாளர் லெஸ்ஸா காசி ஆவணப்படம் எடுத்துள்ளார். இவர் வங்கதேசத்தில் பிறந்து வளர்ந்து இங்கிலாந்து நாட்டிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். அவரிடம் அவரின் ஆவணப்படமான ரைசிங் சைலன்ஸ் பற்றி பேசினோம். இந்த ஆவணப்படும் தனிப்பட்ட விதத்தில் உங்களுக்கு வாழ்க்கை தொடர்பானது. எப்படி இந்த மையத்தை ஆவணப்படமாக எடுக்கவேண்டும்  என்று தோன்றியது? என்னுடைய தந்தை விடுதலைப் போராட்ட வீரர். அவர் விடுதலையில் ஈடுபட்ட பிரங்கானா என்ற பெண்களைப் பற்றிய கதைகளை கூறுவார். அவர்கள் விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்து சுதந்திரத்தைப் பெற்றுத் தந்ததாக கூறுவார். எனக்கு அந்த சிறுவயதில் அவர்களைப் பார்த்தபோதும், அவர்களின் முகங்களை நினைவுகொள்ள முடியவில்லை. பின்னர் அவர்களை தேடியபோது பலரும் காற்றில் கற்பூரம் போல மறைந்துவிட்டனர். காரணம், அப்போது வங்கதேசத்தை உருவாக்கிய தேசத்தந்தையான முஜிப