இடுகைகள்

பாலின பாகுபாடு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் பாலின பாகுபாடு - ஆக்ஸ்பேம் அறிக்கை

படம்
பாலின பாகுபாடு! அண்மையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபேம் நிறுவனம் வெளியிட்டுள்ள பாலின பாகுபாடு பட்டியலில் இந்தியா 147 ஆவது இடம் பிடித்துள்ளது. 1.3 பில்லியன் மக்கள் வாழும் இந்தியாவில், பெரும்பாலான பெண்கள் வறுமைநிலையில் வாழ்ந்துவருகின்றனர். இந்தியா பாலின பாகுபாட்டின் அளவைக் குறைத்தால் 17 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்க முடியும் என அறிவுறுத்தியுள்ளது ஆக்ஸ்ஃபேம் நிறுவன அறிக்கை. இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் இப்பட்டியலில் மோசமாக செயல்பட்டாலும் ஜப்பான்(11 வது இடம்), தென்கொரியா (56 வது இடம்), நமீபியா, உருகுவே ஆகிய நாடுகள் பாலின பாகுபாட்டை குறைப்பதில் உறுதியான நடவடிக்கைகள் எடுத்துள்ளன. 157 நாடுகளைக் கொண்ட ஆக்ஸ்ஃபேம் பட்டியலில் அரசு சமூகநலத்திட்டங்களுக்கு செயல்படுத்தும் தொகை, தொழிலாளர் உரிமைகள், பெண்களுக்கான சம்பளம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. பாலியல் பாகுபாட்டை குறைக்கும் அசத்தலான நடவடிக்கைகளால் டென்மார்க், இப்பட்டியலில் முன்னணி வகிக்கிறது.   கல்விக்கு செலவழிப்பதில் எத்தியோப்பியாவும்(131), கார்ப்பரேட் வரிகளை விதிப்பதில் சிலியும்(35), குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சுகா