இடுகைகள்

புளுட்டோனியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அப்பாவை அம்மா காதலிக்க வைக்க போராடும் மகனின் போராட்டம்! - பேக் டூ தி ப்யூச்சர்

படம்
                பேக் டூ தி ப்யூச்சர் முதல்பாகம் . Director: Robert Zemeckis Produced by: Bob Gale, Neil Canton Writer(s): Robert Zemeckis, Bob Gale இதில் மார்டி தனது நண்பரும் ஆராய்ச்சியாளருமான எம்மட் தயாரித்த கால எந்திரத்தில் விபத்தாக பயணிக்கிறார் . அதுவும் கூட தீவிரவாதிகளிடமிருந்து தப்பிக்கத்தான் . இந்த கால எந்திரம் சிறப்பாக பயன்பட்டிருக்கிறது . எப்படியென்றால் , குறிப்பிட்ட மெஷின் என்றால் அதனை பயன்படுத்துவது கடினமாக இருக்கும் . ஆனால் படத்தில் அதனை காராக பயன்படுத்தி விட்டார்கள் . இதனால் வேறு காலத்திற்கும் அதனால் பயணிக்க முடியும் . இதனால் லாஜிக் பெரிதாக இடிக்கவில்லை . மார்ட்டியின் அப்பா கோழையாக இருக்கிறார் . அவரை அவரது உடன் படித்த நண்பர் பல்வேறு வகையில் ஏமாற்றுகிறார் . மார்டிக்கு தனது அம்மா எப்படி அப்பாவை திருமணம் செய்தார் என்பதே புரியமாட்டேன்கிறது . அந்தளவு அசடாக இருக்கிறார் அவரது அப்பா . 1985 லிருந்து ் 1955 ஆம் ஆண்டுக்கு செல்லும்போது அப்பா , அம்மாவுக்கு இடையிலான காதலை கண்டுபிடிக்கிறார் . இவர் அவர்களது காதல் நடைபெறும் காலகட்டத்திற்கு முன்னரே சென்று வ

அணுஆயுதப்பாதையில் ஜப்பான்!

படம்
அணுஆயுதம் தயாரிக்கிறதா ஜப்பான்? 2011 ஆம் ஆண்டு ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதன் விளைவாக சிதைந்த அணு உலை பிரச்னை ஜப்பானுக்கு பெரிய நிதிச்சுமையானது. 35 அணுஉலை ரியாக்டர்களில் தற்போது செயல்படுபவை ஒன்பது மட்டுமே. தன்னிடமுள்ள 47 மெட்ரிக் டன்கள் புளூட்டோனியத்தை மறுசுழற்சி செய்ய ஜப்பான் முடிவு செய்துள்ளது. ரொக்காஸோ அணுஉலையில் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது என வடகொரியா குற்றம் சாட்டினாலும் அதில் உண்மை இல்லை. தன்னிடமுள்ள புளூட்டோனியத்தை நான்கு ரியாக்டர்களில் மட்டுமே எரிபொருளாக பயன்படுத்த முடியும். ஜப்பானிடமுள்ள புளூட்டோனியத்தை பயன்படுத்தி 6 ஆயிரம் அணுகுண்டுகளை தயாரிக்கலாம். ஆனால் தன்னிடமுள்ள புளூட்டோனியத்தை அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படுத்த முடியாது என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. ஜப்பான் நாட்டில் குவிந்த அணுக்கழிவுகளை ஒழிக்கும் வழியை தேடிவருகிறது. ரொக்காஸோ அணுஉலை கழிவுகளுக்கானது என சிலர் கூறினாலும் அரசு இதுகுறித்து மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. கழிவு மையமாக மாறுவதற்கு அரசு இழப்பீடு அளித்தாலும் மக்கள் தம் உயிருக்கு வரும் அச்சுறுத்தலை நிச்சயம