இடுகைகள்

குறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனநலம் பற்றிப் பேசி விருது வென்ற திரைப்படம்! - ஹாங்காங் பெண் இயக்குநர் நிக்கோலா ஃபேன்

படம்
  டாஃபோடில் என்ற  பதினெட்டு நிமிடங்கள் ஓடும் படம் உளவியல் நலம் பற்றி பேசி திரைப்பட விருது விழாக்களில் விருதுகளை வென்று வருகிறது. ஹாங்காங்கில் எடுக்கப்பட்ட இந்த படம் , தற்கொலை செய்து இறந்துபோன அம்மாவின் நினைவுகளால் பாதிக்கப்படும் இளம்பெண்ணின் கதையைப் பேசுகிறது.  2020ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்கியவர் 32 வயதே ஆன நிக்கோலா பேன். இண்டிபிளெக்ஸ் எனும் வலைத்தளத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. 2019இல் யூரோப்பியன் சினிமாட்டோகிராபி விருதை வென்று, 2020இல் வான்கூவர் ஆசியன் திரைப்பட விழாவுக்கு தகுதி பெற்றுள்ளது. எனது கல்லூரி படிப்பின்போது எனது நண்பனின் அம்மாவுக்கு உளவியல் பிரச்னை இருந்திருக்கிறது. தினசரி வாழ்க்கையே இழுபறியாக இருக்கும்போது ஒருவர் அழுகிறாரா, சிரிக்கிறாரா என்று யார் பார்க்கப்போகிறார்கள்? இப்படி இருந்தபோது திடீரென அவரது அம்மா தற்கொலை செய்துகொண்டார். இந்த சோகமான நிகழ்ச்சியால் அவரது நண்பர், தனது குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். நாம் உளவியல் பிரச்னைகளைப் பற்றி இன்றுதான் பேசத் தொடங்கியுள்ளோம். முந்தைய தலைமுறையினருக்கு இதில் ஆர்வமும் இல்லை, நேரமும